வியாழன், 27 ஆகஸ்ட், 2020

*தினசரி சிந்தனைக்கான வேத துளி* 27 Aug 2020

 

*தினசரி சிந்தனைக்கான வேத துளி*

By : Eddy Joel Silsbee

 

பூரனராகிய தேவன் நமக்கு சகல அடைக்கலத்தையும் தந்து வழி நடத்துவாராக.

 

ஒரு பணத்திற்கு ஈடாக இருந்த, இரண்டே இரண்டு காசுகளையும் - அதாவது தனக்கு உண்டாயிருந்த எல்லாவற்றையும் ஆண்டவருக்கு என்று காணிக்கை பெட்டியிலே அந்த விதவை போட்டு விட்டார்கள்.

 

ஆதரவற்ற நிலைமை,

ஏழ்மை,

ஆதாரமில்லா வருமானம்,

இனியும் வேலைக்கு போய் சம்பாதிக்கும் பெலனும் சரீரத்தில் இருக்குமா என்ற கேள்வியோடு - நாம் நம்மை நிதானித்து கொண்டு இருக்கும் மன நிலைமையில் -- எல்லாவற்றையும் கொடுத்த அந்த பெண்மணி மீது  “இயேசுவின்” பார்வை பட்டது!!  மாற்கு 12:42-43

 

தொழுதுகொள்ள இரண்டே இரண்டு மணி நேரம் தான் அதுவும் ஏழு நாளைக்கு ஒரு முறை தான்..

 

அந்த இரண்டு மணி நேரத்திலும் 30 நிமிஷம் தான் தேவ செய்தியும்...

 

கையில் இருக்கும் 24 மணி நேரத்தில், 30 நிமிட துளிகள் கூட தேவ செய்தியைக் கேட்க முடியாமல் நேரம் இல்லை என்று மற்ற வேலைகளை செய்ய ஓடினால், தேவன் என்ன செய்வார் என்று நினைக்கிறீர்கள்?

 

சோம்பல் பட்டு, வீட்டில் உட்கார்ந்து கொண்டு ஸ்தோத்திரம் சொல்வதும், பாட்டு பாடிக்கொள்வதும் ஆராதனை அல்ல – மற்றவர்களோடு கூடிவரவேண்டும், அன்பை பகிர்ந்து கொள்ளவேண்டும், மற்றவரின் நற்கிரியைகளை கற்றுக்கொள்ளவேண்டும்.... (எபி 10:24)

 

சிலுவையில் நமக்காக பாடுபட்டு அடிக்கப்பட்டு இரத்தஞ்சொட்ட சொட்ட மரித்தவரை நினைவுகூற வாரத்திற்கு ஒருமுறை ஒன்றாக கூடுவது அவ்வளவு கஷ்டமாக இருக்கிறது...ஆயிரம் காரணங்கள் முன்வருகிறது !! ஆனால் நம் ஜெபத்தை அவர் கேட்கவேண்டும் என்ற எண்ணம் மாத்திரம் முன்நிற்கிறது ??

 

நம் கீழ்படிதலின்படியே தேவன் செயல்படுகிறார். மாற்கு 4:24

 

*Eddy Joel Silsbee*

Preacher – The Churches of Christ

Teacher – World Bible School

WhatsApp # +91 8144 77 6229

 

Bible Q&A (Locked) WhatsApp Groupல் இணைய :

https://chat.whatsapp.com/EbfREwOKUHPLjwhTIDg4jQ

 

வீடியோ செய்திகளுக்கு என்னுடைய YouTubeஐ Subscribe செய்யவும்:

https://www.youtube.com/c/EddyJoels/videos

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக