சனி, 15 ஆகஸ்ட், 2020

*தினசரி சிந்தனைக்கான வேத துளி* 15 Aug 2020

*தினசரி சிந்தனைக்கான வேத துளி*

By : Eddy Joel Silsbee

 

இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.

 

எவ்வளவு கஷ்டப்பட்டு உழைத்தாலும், தானாக சேர்ந்தாலும் முயன்று சேர்த்தாலும் எந்த பணமும் பற்றாக்குறையாக தான் இருக்கும். நீதி 23:4-5

 

இந்த உலகத்தின் பணமானது, எவ்வளவு குடித்தாலும் தாகம் அடங்காத கடல் நீரை குடிப்பதற்கு சமம். நீதி 27:24

 

பொன்னை சம்பாதிப்பதை பிரதானமாக வைக்காமல், ஞானத்தை / அறிவை சம்பாதிப்பது மேன்மை. (நீதி 16:16)

 

அனுபவம் அறிவை தரும். அந்த அறிவை சரியாக உபயோகபடுத்த உதவுவது ஞானம்.. அது தேவனிடத்திலிருந்து மாத்திரம் கிடைக்கும்!! (கொலோ 2:3, யோபு 28:20)

 

தேவனே செல்வத்தையும் சம்பத்தையும் கனத்தையும் கொடுக்கிறார்; அவன் என்ன இச்சித்தாலும் அதெல்லாம் அவனுக்குக் குறைவில்லாமல் கிடைக்கும்; ஆனாலும் அவைகளை அநுபவிக்கும் சக்தியை தேவன் அவனுக்குக் கொடுக்கவில்லை; அந்நிய மனுஷன் அதை அநுபவிக்கிறான்; பிர 6:2

 

தாங்கள்மாத்திரம் தேசத்தின் நடுவில் வாசமாயிருக்கும்படி மற்றவர்களுக்கு இடமில்லாமற்போகுமட்டும், வீட்டோடே வீட்டைச் சேர்த்து, வயலோடே வயலைக் கூட்டுகிறவர்களுக்கு ஐயோ! ஏசா 5:8

 

இவ்வுலகத்திலே ஐசுவரியமுள்ளவர்கள் இறுமாப்பான சிந்தையுள்ளவர்களாயிராமலும், நிலையற்ற ஐசுவரியத்தின்மேல் நம்பிக்கை வையாமலும், நாம் அனுபவிக்கிறதற்குச் சகலவித நன்மைகளையும் நமக்குச் சம்பூரணமாய்க் கொடுக்கிற ஜீவனுள்ள தேவன்மேல் நம்பிக்கைவைக்கவும், நன்மைசெய்யவும், நற்கிரியைகளில் ஐசுவரியவான்களாகவும், தாராளமாய்க் கொடுக்கிறவர்களும், உதாரகுணமுள்ளவர்களுமாயிருக்கவும், நித்திய ஜீவனைப் பற்றிக்கொள்ளும்படி வருங்காலத்திற்காகத் தங்களுக்கு நல்ல ஆதாரத்தைப் பொக்கிஷமாக வைக்கவும் கவனமாக இருக்கவேண்டும். 1தீமோ 6:17-19

 

கர்த்தரே ... ஐசுவரியம் அடையப்பண்ணுகிறவர்; அவரே.. உயர்த்துகிறவர். அவர் சிறியவனைப் புழுதியிலிருந்து எடுத்து, எளியவனைக் குப்பையிலிருந்து உயர்த்துகிறார்; அவர்களைப் பிரபுக்களோடே உட்காரவும், மகிமையுள்ள சிங்காசனத்தைச் சுதந்தரிக்கவும் பண்ணுகிறார்; 1சாமு 2:7-8

 

சொந்த சாமர்த்தியமும் சொந்த கைப்பெலனும் இந்த ஐசுவரியத்தை எனக்குச் சம்பாதித்தது என்று இருதயத்தில் சொல்லிக்கொள்ளாமல் எச்சரிக்கையாயிருங்கள், உபா 8:17

 

அவரே நம் ஒவ்வொருவரையும் விசேஷித்தவனாக்குகிறவர். 1கொரி 4:7

 

*Eddy Joel Silsbee*

Preacher – The Churches of Christ

Teacher – World Bible School

WhatsApp # +91 8144 77 6229

 

Bible Q&A (Locked) WhatsApp Groupல் இணைய :

https://chat.whatsapp.com/Cyj7n7Q7CRv2GAp7jUOzDk

 

வீடியோ செய்திகளுக்கு என்னுடைய YouTubeஐ Subscribe செய்யவும்:

https://www.youtube.com/c/EddyJoels/videos

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக