*தினசரி சிந்தனைக்கான வேத துளி*
By : Eddy Joel Silsbee
பரிசுத்தமுள்ள தேவனின் உன்னத குமாரனாகிய கிறிஸ்து இயேசுவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.
அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது பழமொழி.
“நல்ல மனுஷன் இருதயமாகிய நல்ல பொக்கிஷத்திலிருந்து நல்லவைகளை எடுத்துக்காட்டுகிறான், பொல்லாத மனுஷன் பொல்லாத பொக்கிஷத்திலிருந்து பொல்லாதவைகளை எடுத்துக்காட்டுகிறான்” என்றார் இயேசு கிறிஸ்து (மத்12:35)
உள்ளே உள்ளதை சீர்படுத்த வேண்டுமெனில் வெளியே இருந்து அதற்கான மருந்து உள்ளே செலுத்தப்படவேண்டும்.
கர்த்தருடைய வார்த்தையே நல்ல மருந்து. (எரே 15:19)
கலப்படமற்ற சுத்தமான சத்திய பாலை குடித்தால் – பார்வைக்கு தெரியாத ஆத்துமா புஷ்டியாய் வளரும். 1பேது 2:3
கலப்படமற்ற சுத்தமான பாலை குடித்து வளர்ந்தவர்கள் அடுத்தபடியாக அசைவ உணவை எடுக்க ஆரம்பிக்கும் போது (வேதத்தை ஆழமாக படித்தல்) நன்மையை பிரித்து பார்க்கும் அளவிற்கு வளர்ச்சியடைகிறார்கள். எபி 5:14
பலமான ஆகாரம் என்பது மூல மொழியில் (ட்ரோஃபே) அசைவ உணவை குறிக்கிறது.
சுவிசேஷத்தைக் கேட்டு, ஆசீர்வாத செய்தியைக் கேட்டு, முழங்கால் படியிட்டு பவ்யமாய் ஜெபித்து வேலையைப் பார்த்துக்கொண்டு இருந்தாலே போதும் - ஆழமாக வேதத்தை துருவி துருவி அறியத் தேவையில்லை என்று நினைப்பவர்கள் பலவீனமாக போக வாய்ப்புள்ளது !! ரோ 14:2
நான் ஆகாரத்தைக் குறித்து சொல்லவில்லை – அசைவமோ, சைவமோ – அவரவர் விருப்பம். ரோ 14:3.
3வது இடத்தையாவது நாம் பிடிப்போம்... தெசலோனிக்கேயருக்கு 2ம் இடத்தை அப் 17:11 ஒதுக்கியுள்ளது !!
மிகவும் பிற்படுத்தப்பட்ட, சவாலான, குழப்பமான, இரக்கமற்ற, தன்னிறைவு அடைந்த, சுயநலமான சமுதாயம் வளர்ந்து கொண்டு வருகிறது.
நம் பிள்ளைகள் அப்படிப்பட்ட மக்கள் மத்தியில் தான் ஊழியம் செய்யும் போகிறார்கள்.
நாம் வளர்ந்த சூழலைக் காட்டிலும் அவர்கள் காலம் கொடியதாக இருக்கப்போகிறது என்பதை நாம் கண்கூடாக பார்த்துக் கொண்டிருப்பதால் – தீமோத்தேயுக்களும், பவுல்களும், பேதுருக்களும், பிலிப்புகளும் ஸ்தேவான்களையும் உருவாக்கும்படியான நம் கடமை மிக தீவிரமடைந்துள்ளதை உணரவேண்டும்.
*Eddy Joel Silsbee*
Preacher – The Churches of Christ
Teacher – World Bible School
WhatsApp # +91 8144 77 6229
Bible Q&A (Locked) WhatsApp Groupல் இணைய :
https://chat.whatsapp.com/LDFydae8QOL2ItKGgYSYXq
வீடியோ செய்திகளுக்கு என்னுடைய YouTubeஐ Subscribe செய்யவும்:
https://www.youtube.com/c/EddyJoels/videos

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக