செவ்வாய், 11 ஆகஸ்ட், 2020

*தினசரி சிந்தனைக்கான வேத துளி* 11 Aug 2020

 *தினசரி சிந்தனைக்கான வேத துளி*

By : Eddy Joel Silsbee

 

பரிசுத்தத்தின் தேவன் தாமே நம்மை ஆசீர்வதிப்பாராக.

 

கிறிஸ்தவர்கள் ஒருவரை ஒருவர் ஜெபத்தில் தாங்க வேண்டும்.

 

முக்கியமாக, தேவனுடைய வார்த்தையை போதிக்கிறவர்களுக்காக அந்தந்த சபையார் அவரவர் ஊழியர்களுக்காக அதிகமாய் ஜெபிக்க வேண்டும்.

 

பண ஆதாயத்திலும் விளம்பர பிரியத்திலும் உள்ளவர்களை அல்ல - ஆத்தும ஆதாயதிற்கு பிரயோஜனப்படும் ஊழியர்களையே பிசாசு மிக அதிகமாக நெருக்குவான்.

 

உங்கள் ஜெபமே எங்கள் ஜீவன்!  2கொரி 1:4

 

தங்களுக்காக ஜெபிக்கும்படி *உண்மையான அப்போஸ்தலர்களே*, சபையோரை கேட்டுக்கொண்டதை கீழே கவனியுங்கள் :

 

எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்-1தெ 5:25

 

அவிசுவாசிகளுக்கு தப்பி இளைப்பாறும்படி ஜெபியுங்கள் - ரோ 15:29-31

 

தயவு கிடைக்க ஜெபியுங்கள் - 2 கொரி 1:11

 

வேதத்தை தைரியமாயும் பேச வேண்டிய பிரகாரம் பேசும்படியும் ஜெபியுங்கள் - எபே 6:18-20

 

எதற்கும் வெட்கபடாமல் எல்லா பிரச்சனைகளிலிருந்து ஜெயம் பெற ஜெபியுங்கள். பிலி 1:18-19

 

மறைவானவைகளை நேர்த்தியாய் பிரசங்கிக்க ஜெபியுங்கள். கொலோ 4:3

 

பொல்லாத மனுஷர் கையில் விழாமல் இருக்க ஜெபியுங்கள் 2தெ3:2

 

பொல்லாதவைகளால் மோசம் போய்விடாதபடி ஜெபியுங்கள் எபி 13:18-19

 

ஜோடனையாகவும், வார்த்தை ஜாலத்தோடும் தன்னை உலகமே கேட்டு பாராட்டவும் பூரிக்கவும் வேண்டும் என்று செய்யப்படும் ஜெபம் TVயிலும் இன்டெர்நெட்டிலும் பலன் உண்டாகும் !! மத் 6:5

 

ஆம்...நீங்கள் அந்தரங்கத்தில் ஜெபிக்கும் ஜெபம் அவ்வளவு முக்கியமானது. மத் 6:6

 

*Eddy Joel Silsbee*

Preacher – The Churches of Christ

Teacher – World Bible School

WhatsApp # +91 8144 77 6229

 

Bible Q&A (Locked) WhatsApp Groupல் இணைய :

https://chat.whatsapp.com/LDFydae8QOL2ItKGgYSYXq

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக