*தினசரி சிந்தனைக்கான வேத துளி*
By : Eddy Joel Silsbee
எப்போதும் தம் பார்வையில் நம்மை வைத்திருக்கும் தேவகுமாரனின் நாமத்தில் வாழ்த்துக்கள்.
பள்ளி பாடத்திட்டத்திலேயே நாம் படிப்பது:
*எதிர்மறை* :
சூரியன் x சந்திரன்
கேள்வி x பதில்
பகல் x இரவு
ஆண் x பெண்
கணவன் x மனைவி
என்று பல உதாரணங்களை பார்க்கிறோம்.
ஆம்.. உலக வழக்கத்தின் படி ஆணுக்கு நேர் எதிர்மறை பெண்.
ஆணுக்கு – “உடல்” வலிமை,
பெண்ணிற்கு – “மன” வலிமை
ஆண் – “ஞாபக” குறைவு,
பெண் – “ஞாபக” புலி !
ஆண்கள் சுலபமாக “தவறுகளை மறப்பார்கள்”.
பெண்கள் – தனக்கு இழைக்கப்பட்டதை “மறப்பது சவால்”.
ஆண்கள் எப்போதும் “மேலோட்டமாய் கவனிக்கிறவர்கள்”.
பெண்களோ மிகவும் “உன்னிப்பாக எல்லாவற்றையும் ஆராய்வார்கள்”.
இப்படி இன்னும் அடுக்கி கொண்டே போகலாம்.
ஆனால்,
தேவன் பெண்ணை உண்டு பண்ணியது ஆணுக்கு எதிர்மறையாக இருக்கவா?
நிச்சயமாக கிடையாது.
*ஏற்ற துணையாக* உண்டு பண்ணினார்! ஆதி 2:18
கணவனுக்கு *ஏற்ற துணையாய் இருக்கும்படி மனைவியை* உண்டு பண்ணினார். 1 கொ 11:9 & 1 பேது 3:7
இல்லாததை இருப்பது போல ஜோடித்து,
ஒருவரை ஒருவர் சந்தேகித்து,
முரண்டு பிடித்து நில்லாமல் - ஒருவருக்கு ஒருவர் விட்டு கொடுத்து, ஏற்ற தாழ்வுகளை சரி செய்து, ஒருவனுக்கு ஏற்ற ஒருவளாய் ஒரே சரீரமாய் வாழ வேண்டும் என்பது தான் தேவனுடைய கட்டளை.
வெறுக்க பல காரணங்கள் இருக்கலாம்.... ஆனால் சொந்த மனைவியை / கணவனை *நேசிக்க ஒரே ஒரு காரணம் கிடைக்காதோ*?
மிக சொற்பமான அன்பு கூட இருதயத்தில் இருந்தாலே – கணவன் மனைவியினரிடையே பிரிவு இருக்காது.
அன்பு இல்லாத இருதயமோ – சகலத்தையும் தீமையாக பார்க்கும். 1கொரி 13:7
தன் சொந்த சரீரத்தில் (மனைவிடமோ / கணவனிடமோ) கோபத்தையும் பிரிவையும் வைத்துக்கொண்டு பத்தாயிரம் முறை ஸ்தோத்திரம் அல்லேலூயா என்று கதறி உபவாசம் இருந்தாலும் – ஏறெடுக்கும் ஜெபங்கள் வீட்டுக்கூறையை தாண்டாது. நேரத்தை வீணடிக்கவேண்டாம் !! 1பேது 4:1-3, மத் 5:23-24
சொந்த சரீரத்தோடு ஒப்புரவாகாமல் எவ்வளவு தான் ஆவியில் நிரம்பி வழிந்தாலும் பிரயோஜனமில்லை. எபே 6:11, 1பேது 3:7
குடும்பத்தில் ஏற்ற தாழ்வுகளை களைந்து விட்டுக்கொடுத்தால் மாத்திரமே சமாதானமும், சந்தோஷமும் நிலைக்கும்.
யார் பெரியவன்(ள்) என்று பொறுத்திருந்தால்... குடும்பத்தில் பிசாசு முன்னின்று வேதத்தை உங்கள் கையில் கொடுத்து வீட்டில் ராஜாவாக இருப்பான். 2கொரி 11:14-15
ஒருவருக்கொருவர் தாழ்மைப்படுங்கள். ரோ 12:16
*Eddy Joel Silsbee*
Preacher – The Churches of Christ
Teacher – World Bible School
WhatsApp # +91 8144 77 6229
Bible Q&A (Locked) WhatsApp Groupல் இணைய :
https://chat.whatsapp.com/LDFydae8QOL2ItKGgYSYXq

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக