*தினசரி
சிந்தனைக்கான வேத துளி*
By : Eddy Joel Silsbee
நன்மையான எல்லா ஈவையும் நமக்கு கொடுக்கும்
தேவனே நம்மை ஆசீர்வதிப்பாராக.
பழகினதும் தூரமாய் உள்ளதும் நன்மையாய் தெரியும்.
அருகில் நெருங்கி வரும் போது புதியதைக்
காட்டிலும் பழகினதே நன்மையாயும் இலகுவாகவும் இருக்கிறது என்று மனம் சொல்லும்.
ஆன்டிராயிட் மொபைல் உபயோகிப்பவர்கள்
ஆப்பிள் மொபைல் வாங்க ஆசைப்பட்டு வாங்கியதும் உபயோகப்படுத்த திணறி குறைந்த விலைக்கு
அதை விற்று ஆன்டிராயிடுக்கு திரும்பியவர்களை பார்த்திருப்போம்.
அது போலவே –
அனைத்து மக்களுக்கும் கொடுக்கப்படவில்லை
என்று அறிந்தும் “தசம பாகம், சுய மேன்மை” போன்ற சில
லாபங்களை முன்னிட்டு இஸ்ரவேலருக்கு மாத்திரமே கொடுக்கப்பட்டு அவர்களுக்குமே காலாவதியாகிப்போன (expired) நியாயப்பிரமாணத்தை இன்னமும் கடைபிடிக்க வேண்டும் என்று நினைப்பதும்
கடைபிடிப்பதும் போதிப்பதும் சாபத்தை வரவழைக்கும். எரே 31:31, ரோ 10:4, கலா 3:10
கர்த்தருடைய பந்தியில் கலந்து கொள்பவர்கள்
கூட தாங்கள் புதிய உடன்படிக்கையில் இருக்கிறோம் என்பதை அறியாமல் நியாயப்பிரமாணம்
வேண்டும் என்று வாதிட்டு *வசனம் சொல்வது போல கோமாவில் கிடக்கிறார்கள்*.
வசனங்களைப் படிக்கவும் :
....... அவர் அந்தப்படியே
பாத்திரத்தையும் எடுத்து: இந்தப் பாத்திரம் என் இரத்தத்தினாலாகிய *புதிய
உடன்படிக்கையாயிருக்கிறது*;
நீங்கள் இதைப் பானம்பண்ணும்போதெல்லாம் என்னை நினைவுகூரும்படி இதைச்
செய்யுங்கள் என்றார். 1கொரி 11:25
...... இதினிமித்தம், உங்களில் அநேகர் பலவீனரும் வியாதியுள்ளவர்களுமாயிருக்கிறார்கள்; அநேகர் *நித்திரையும் அடைந்திருக்கிறார்கள்*. 1கொரி 11:30
அர்த்தம் புரியாமல் கர்த்தருடைய
பந்தியில் கலந்து கொள்கிறவர்கள் கர்த்தருடைய சரீரம் இன்னதென்று நிதானித்து பங்கெடுக்காவிட்டால், தனக்கு தண்டனை வரும்படி பங்கெடுக்கிறார்கள். 1கொரி 11:29
கிறிஸ்தவர்களாகிய நாம் – கிறிஸ்துவின் சரீரத்தில்
ஓர் அங்கம் என்பதையும் கிறிஸ்துவே நமக்கு மூளை என்பதையும் அறிந்து அவரே நம்முடைய சரீரத்தின்
தலை என்பதினால் வேறொருவரின் மூளைக்கு அல்ல சொந்த தலைக்கு (கிறிஸ்துவின்) சட்டதிட்டங்களுக்கு
மாத்திரம் கீழ்படிவோம்.. லூக்கா 5:39, எபே 1:23,
5:23, கொலோ 1:18, அப் 2:47.
இரட்சிக்கப்பட்டதும் பரலோக பிதாவின்
குமாரனுடைய சபையாகிய கிறிஸ்துவின் செடியிலிருந்து துளிர்விட்ட கிளைகளாக நாம்
வளராவிட்டால் தோட்டக்காரர் தன் வேலையை துவங்க நேரிடும். சுய பரிசோதனைக்கு இன்றும்
காலம் இருக்கிறது. யோ 15:1-2
இன்று வரை பாதுகாத்து வருகிற ஆண்டவர் தாமே
சீர்படுத்தி மென்மேலும் ஆசீர்வதிப்பாராக.
*Eddy Joel Silsbee*
Preacher – The Churches
of Christ
Teacher – World Bible
School
WhatsApp # +91 8144 77 6229
Bible Q&A (Locked)
WhatsApp Groupல் இணைய :
https://chat.whatsapp.com/B811iEJfVGh5yRqnJiuTAj

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக