புதன், 29 ஜூலை, 2020

*தினசரி சிந்தனைக்கான வேத துளி* 29 July 2020


*தினசரி சிந்தனைக்கான வேத துளி*
By : Eddy Joel Silsbee

அன்பின் தேவன் நம்மை சீர்படுத்தி இன்னும் மேன்மேலும் ஆசீர்வதிப்பாராக.

அறிந்தோ அறியாமலோ கலாச்சாரம் பாரம்பரியம் என்று கூறி வேதாகமத்தை விட்டு வெளியே பலநேரங்களில் தள்ளப்படு நேரிடுகிறது.

ஜாதகமோ, அநுதின ராசி பலனோ, எண் ஜோதிடமோ, வான சாஸ்திரமோ, பெயர் சாஸ்திரமோ, வீட்டு வாஸ்து சாஸ்திரமோ வேறே எந்த பலன்களையோ நாம் பின்பற்றாமல் தேவனுடைய வார்த்தை மாத்திரமே நமக்கு போதுமானது என்று இருக்க வேண்டும்.

பெயரின் கூட்டுத்தொகையில் 8 வரவேண்டும் 9 வரவேண்டும் 10 வரவேண்டும் 3 வரவேண்டும் என்று ஜோதிடர்களின் ஆலோசனையை கேட்டு வழக்கமான spellingஐ மாற்றிக்கொண்டு “O”க்கு பதில் “a”, “aa”, “ii” என்று பலவேறு யுக்திகளை கையாண்டு செழிப்பை தேடிக்கொள்ளும் போதகர்கள் கூட இன்றும் உலாவந்து கொண்டு தான் இருக்கிறார்கள்.

வீட்டு வாசலையும் கதவு டிசைன்களையும் சுவரையும் மாற்றி அமைத்துக் கொண்டாலும், தேவனுடைய அநுக்கிரகம் இல்லையானால் ஒன்றும் நடக்காது. (பிர 5:19)

மேலும், ஊரை ஏமாற்றிக்கொண்டு இவ்வாறு சாஸ்திரங்களின் பின் செல்வோர் செழிப்பை அல்ல தேவனுடைய கோபத்திற்கு ஆளாகிறார்கள்.

... அந்த ஜாதிகள் செய்யும் அருவருப்புகளின்படி செய்யக் கற்றுக்கொள்ளவேண்டாம்(9) ……. இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவன் எவனும் கர்த்தருக்கு அருவருப்பானவன்; (உபா 18:9-12)

மாம்சத்தோடும் இரத்தத்தோடுமல்ல, துரைத்தனங்களோடும், அதிகாரங்களோடும், இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும், வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு. (எபே 6:12)

சாஸ்திரங்களை பின்பற்றுவது – வானத்து நட்சத்திரங்களுக்கு தலை வணங்கும் விக்கிரக ஆராதனை!

உங்கள் கண்களை வானத்திற்கு ஏறெடுத்து, உங்கள் தேவனாகிய கர்த்தர் வானத்தின் கீழெங்கும் இருக்கிற எல்லா ஜனங்களுக்கும் ஏற்படுத்தின வானத்தின் சர்வ சேனைகளாகிய சந்திர சூரிய நட்சத்திரங்களை நோக்கி, அவைகளைத் தொழுது சேவிக்க இணங்காதபடிக்கும், உங்கள் ஆத்துமாக்களைக்குறித்து மிகவும் எச்சரிக்கையாயிருங்கள் (உபா 4:19)

நாம் தொழுது கொள்வது சர்வலோகத்தையும் படைத்து ஆளுகிற தேவாதி தேவனை !!

வியாதியோ துக்கமோ கஷ்டமோ துன்பமோ ஏழ்மையோ நெருக்கடிகளோ – இவை அனைத்தும் மண்ணினால் உண்டான இந்த சரீரத்திற்கு தான் !! ஆத்துமாவோ எப்போதும் ஜம்மென்று தேவனுக்கென்று செழிப்பாய் இருக்கும்படி நாம் தேவனுடைய வார்த்தையில் நிலைநிற்கிறோமா என்பது அவசியம்.

மகா கிருபையுள்ள தேவன் நம்மை சகலவற்றிலும் ஆசீர்வதிப்பாராக !!

*Eddy Joel Silsbee*
Preacher – The Churches of Christ
Teacher – World Bible School
WhatsApp # +91 8144 77 6229

Bible Q&A (Locked) WhatsApp Groupல் இணைய :
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக