புதன், 8 ஜூலை, 2020

தினசரி சிந்தனைக்கான வேத துளி 08 July 2020


By : *Eddy Joel Silsbee*  -   *தினசரி சிந்தனைக்கான வேத துளி*

பரிசுத்தராகிய கர்த்தர் இயேசுவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.

நோவாவின் காலத்தில் வந்த அழிவுக்கு முன்னர் மனுஷன் தோராயமாக 850 ஆண்டுகள் வாழ்ந்தான்.

ஆபிரகாம் காலத்தில் 175, யோசேப்பு 110, சவுல், தாவீது, சாலமோன் காலத்தில் 70 என்று ஆயுள் குறைந்து விட்டது.

வேதாந்தங்கள் பேசி, வைராக்கியம் கொண்டு – உயிரோடு இருக்கும் இந்த சொற்ப காலத்தில் சொந்த பந்தங்கள், சகோதர சகோதரிகள், கணவன், மனைவி, பிள்ளைகள், உறவினர் மற்றும் சுற்றத்தாரிடம் அன்பாக பழக பேச தெரியாவிட்டால் – நீங்கள் செய்யும் ஜெபங்களும்,  உபவாசங்களும், பிரசங்கங்களும், போதனைகளும் – 100 சதவீதம் வீண்.

கிறிஸ்தவம் என்றாலே – அன்பு செலுத்த வேண்டும் (யோ13:34)

பிடித்தவர்களிடம் மாத்திரம் அன்பாய் பேசுவது – வேஷம் !! ரோ 12:9

உண்மையான அன்பு இருதயத்தில் இருந்தால் – ஒருவர் மீதும் வெறுப்பு வராது. ஆதி 30:1

உண்மையான அன்பு இருதயத்தில் இருந்தால் – ஒருவரையும் பழி சொல்ல மாட்டார்கள். 2 கொரி 12:20-21

சொந்த கற்பனையும் வைராக்கியமும் இருந்தால் எந்த சந்தேகத்திற்கும் இடமின்றி அந்த மனநிலையானது  உண்மையை ஏற்றக்கொள்ளாமல் தன் வம்சமே சாபத்திற்குள்ளானாலும் பரவாயில்லை என்று இயேசுவையும் சிலுவையில் கொலை செய்ய தூண்டும். மத் 27:17-18, 25

கிரியை இல்லாத விசுவாசம் செத்தது என்ற கட்டளையை உணர்ந்து நாட்களை வீணடித்து விடாதீர்கள். இவர்கள் பரலோகத்துக்குள்ளே வந்தால் அங்கேயும் பிரச்சனை உருவாக்கலாம் என்று பரலோக கதவு திறக்காமல் போகலாம்!! யாக் 2:20, வெளி 22:15

*Eddy Joel Silsbee*
Preacher – The Churches of Christ
Teacher – World Bible School
WhatsApp # +91 8144 77 6229

Bible Q&A (Locked) WhatsApp Groupல் இணைய :
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக