வியாழன், 25 ஜூன், 2020

தினசரி சிந்தனைக்கான வேத துளி - 25 June 2020



விடிவெள்ளி நட்சத்திரமாகிய (வெளி 22:16) இரட்சகர் இயேசு கிறிஸ்து தாமே நம்மை இன்னும் அதிகமாய் ஆசீர்வதிப்பாராக.

இருள் *தேவை என்றால்* ஒரு டார்ச் லைட் அடிக்கவோ விளக்கை கொளுத்தவோ முடியாது.
வெளிச்சம் தான் நாம் கொண்டு வர முடியும்.

வெளிச்சம் *எடுக்கப்பட்டால்* இருள் தானாகவே மீதம் இருக்கிறது.

நம்முடைய இருதயத்தில் ஆண்டவராகிய தேவன் *இல்லாத பட்சத்தில்* இருள் தான் நிறைந்து இருக்கும். 

இருதயத்தில் நமக்கு வெளிச்சம் இருந்தால் தான் முகம் பிரகாசிக்கும் (நீதி 27:19)

நம்முடைய இருதயத்தின் இருளாகிய :
கசப்பும்,
வைராக்கியமும்,
சந்தேகங்களும்,
கோபங்களும்,
கூக்குரலும்,
தூஷணமும்,
அடங்காமையும்,
கீழ்படியாமையும்,
கூச்சலும்,
கதறலும்,
முனங்கலும்,
முறுமுறுப்பும்,
பெருமையும்,
ஆணவமும்,
இப்படி சகல அருவருப்பையும் விரட்டும் *வெளிச்சத்தை கர்த்தர் மாத்திரமே* கொடுக்க முடியும் (எபே 4:30-32).

இருதயத்தில் உண்மையான வசனம் இருப்பின் – சமாதானமே நிலைத்திருக்கும்.

*Eddy Joel Silsbee*
Preacher – The Churches of Christ
Teacher – World Bible School
WhatsApp # +91 8144 77 6229

Bible Q&A (Locked) WhatsApp Groupல் இணைய :
https://chat.whatsapp.com/EbfREwOKUHPLjwhTIDg4jQ

** அணைத்து கேள்வி பதில்களையும் காண :  https://joelsilsbee.blogspot.com/search/label/Bible%20Questions
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக