சனி, 13 ஜூன், 2020

#24 - கிறிஸ்தவ பெண்கள் ஏன் பொட்டு வைக்கக்கூடாது?

#24 - *கிறிஸ்தவ பெண்கள் ஏன் பொட்டு வைக்கக்கூடாது?* ஒரு ரோமன் கத்தோலிக்க சகோதரி பொட்டுவைப் பயன்படுத்தி இயேசுவை ஏற்றுக்கொண்டால், ஞானஸ்நானம் பெற அவர்களுக்கு பொட்டு ஒரு தடையாக இருக்கிறதா?

*பதில்:*
இந்த கேள்விக்கு நன்றி சகோதரரே.

இந்திய வரலாற்றைப் பார்க்கும்போது, இந்துக்கள் தங்கள் சாதியை வேறுபடுத்துவதற்காக முன்வைத்த கண் புருவங்களுக்கு இடையிலான அடையாள புள்ளி  தான் பொட்டு என்பது.

தற்கால பெண்கள் – தங்களின் ஆடைகளுடன் பொருந்தும்படி பல்வேறு வண்ணங்களில் ஒரு சிறிய புள்ளியாக அதை வைத்துக்கொள்கின்றனர்.

தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளும் படியாக:
1-கும்குமத்தினால் சிவப்பு புள்ளிகளாகவும்
2-வெள்ளைநிற செங்குத்து குறுகிய கோடுகளாகவும்
3-செங்குத்தாக நீண்ட கோடுகளாகவும்
4-கிடைமட்ட கோடுகளாகவும்
5-கிடைமட்ட இரட்டை அல்லது மூன்று கோடுகளாகவும்

இப்படி பல வகையில் இடும் குறிகள் தங்கள் சாதியை தங்கள் சமூகத்தினரிடையே வேறுபடுத்துவதற்கான பழக்கம் இது.

இந்நாட்களில் புரியாமல் செய்யும் பல காரியங்களில் இதுவும் பேஷனாக மாறிவிட்டது.

எப்படியிருந்தாலும், நெற்றியில் உள்ள அடையாளத்தை நாகரிகமாக பயன்படுத்துகிறார்களோ வேறுபடுத்திக் காண்பிக்கிறார்களோ, உலகம் அவர்களை இந்துவாகவே முதலில் பார்க்கிறது.

எல்லாவற்றிலும் கடவுளை மகிமைப்படுத்தும்படி நமக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதே !! கொலோ. 3:23-25

பொட்டு வைப்பதனால் கிறிஸ்தவராக அல்ல இந்துமதத்தை சார்ந்தவர் என்பதை உலகத்தாருக்கு அறிவிக்கிறார்கள்.

நீங்கள் புசித்தாலும், குடித்தாலும், எதைச் செய்தாலும், எல்லாவற்றையும் தேவனுடைய மகிமைக்கென்று செய்யுங்கள் என்று 1 கொரிந்தியர் 10:31ல் பார்க்கிறோம்.

கிறிஸ்தவ மார்க்கத்திற்குள் வரும் போது நாம் கிறிஸ்துவை வெளிப்படுத்த வேண்டும். ஞானஸ்நானம் எடுக்கும் போதும் ஒருவர் பொட்டு வைத்துக்கொள்ள ஆசைபட்டால் – இன்னும் சத்தியம் சரியாக அவருக்கு எடுத்துச் சொல்லவில்லை என்பதை தெளிவுபடுத்துகிறது.

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர் - கணியாகுளம் வேதாகம பள்ளி
தொடர்பு : +91 8144776229

*Q&A Biblical Whatsappல் இணைய (locked group)* :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

website : http://www.kaniyakulamcoc.wordpress.com


----*----*----*----*----*-----
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக