புதன், 24 ஜூன், 2020

தினசரி சிந்தனைக்கான வேத துளி - 24 June 2020



நேற்றும் இன்றும் என்றும் மாறாத தேவனின் நாமத்திற்கு மகிமையும் கனமும் உண்டாவதாக.

நம்முடைய பிற்கால வாழ்க்கைக்கு தேவையான பொருளோ, ஆயுள் காப்பீடோ, சொத்தோ, பணமோ சேர்த்து வைத்து விட்டால் - ஒரு மன தைரியமும் திருப்தியும் உண்டாகிறது.

என்ன வந்தாலும் கவலை இல்லை. ஆயுள் காப்பீடு உள்ளது என்று நிம்மதி வந்துவிடுகிறது.

ஆனால் அந்த பாதுகாப்பு – மண்ணினால் உண்டான இந்த சரீரத்திற்கு  தான் பிரயோஜனப்படும்.

உங்கள் உயிருக்கு என்ன காப்பீடு உள்ளது?

யார் எவ்வளவு முயற்சி செய்தாலும், காற்று வெளியேறாத கண்ணாடி கூண்டிற்குள் அடைந்து உட்கார்ந்து கொண்டாலும் போகும் உயிரை பிடித்து நிறுத்தி வைக்க முடியாது. அதற்கான நேரம் வந்ததும் பறந்து போய்க்கொண்டே இருக்கும்.

சரீரத்தில் பிரிந்து செல்லும் உயிர் - எங்கு போக வேண்டும் என்ற காப்பீடை இப்போதே எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். மாற்கு 16:16, அப் 22:16; ரோ 10:9-14; 1பே3:21

*அந்த காப்பீட்டின் பலன்*:
அது வரை செய்த *அனைத்து குற்றங்களும்* அழிக்கப்பட்டு விடுகிறது. அப் 2:38, சங் 103:12, ஏசா 38:17

கிறிஸ்து நம்மை பொதிந்துக் கொள்கிறார். கலா 3:27

முன்பக்கமும் பின்பக்கமும் தலை உச்சியிலிருந்தும் சரீரத்தின் சுற்றுப்புறம் அனைத்தையும் ஒருவரும் அண்டவிடாமல் அணைத்துக் கொள்கிறார் தேவன். சங் 139:5

மற்றவர்கள் அடையாளங்கண்டுகொள்ளும்படியாக மேன்மையான வஸ்திரமும் அங்கீகாரமும் கொடுக்கப்படுகிறது. லூக்கா 15:22

தவறான செய்கையிலிருந்து வெளியேறும் மனப்பான்மை கொடுக்கப்படுகிறது. ரோ 13:14

சத்தியத்தை பற்றிக்கொண்டு தேவனுடைய மகன்களாக மகள்களாக வலம் வருகிறோம். எபே 4:24

இயேசு கிறிஸ்துவைப் போல நாமும் வாழ ஆரம்பிக்கிறோம். கொலோ 3:10, 1யோ 3:2

இப்படிப்பட்ட உன்னதமான *சரியான காப்பீட்டை* எடுக்காவிடில் இன்றே விண்ணப்பிக்கவும் !! மாற்கு 16:16

*Eddy Joel Silsbee*
Preacher – The Churches of Christ
Teacher – World Bible School
WhatsApp # +91 8144 77 6229

Bible Q&A (Locked) WhatsApp Groupல் இணைய :
https://chat.whatsapp.com/EbfREwOKUHPLjwhTIDg4jQ

** அணைத்து கேள்வி பதில்களையும் காண :  https://joelsilsbee.blogspot.com/search/label/Bible%20Questions
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக