சனி, 16 மே, 2020

#950 - பிதாக்களுடைய இருதயத்தைப் பிள்ளைகளிடத்திற்கும், பிள்ளைகளுடைய இருதயத்தை அவர்கள் பிதாக்களிடத்திற்கும் திருப்புவான். மல்கியா 4:6

#950 - *பிதாக்களுடைய இருதயத்தைப் பிள்ளைகளிடத்திற்கும், பிள்ளைகளுடைய இருதயத்தை அவர்கள் பிதாக்களிடத்திற்கும் திருப்புவான். மல்கியா 4:6 இந்த வசனத்திற்கான விளக்கத்தை அளிக்கவும்*...

*பதில்*
அந்த பெரிய மற்றும் பயங்கரமான நாள் வருவதற்கு முன்பு எலியா தீர்க்கதரிசியை அனுப்புவதாக கர்த்தர் வாக்குறுதி அளித்தார். மல்கியா 4:5

அவர் குழந்தைகளையும் பெற்றோர்களையும் ஒருவருக்கொருவர் அதிகமாக நேசிக்க வழிவகுப்பார் என்றார்.

இது யோவான் ஸ்நானனை குறித்து சொல்லப்பட்ட தீர்க்கதரிசனம். (லூக்கா 1:12-17)

யோவானின் பணி தேசத்தின் சீர்திருத்தமும் கிறிஸ்துவுக்கான தயாரிப்பும் ஆகும்.

ஏராளமான மக்கள் அவரால் ஞானஸ்நானம் பெற்றார்கள். அவர் ஒரு கிறிஸ்துவின் சிறந்த முன்னோடியாவும் அந்த ஜனங்களின் இடையே பெரிய ஆத்தும மனந்திரும்புதலையும் உணரச் செய்தார். லூக்கா 3:10, 12

அத்தகைய மனந்திரும்புதலானது வெறுப்பு, மாறுபாடு, பொறாமை, சுயநிறைவு மற்றும் அலட்சியத்தை அழித்தது.

மேலும் அந்த மனந்திரும்புதல் ஒவ்வொருவரின் இருதயத்தையும் மென்மையான அன்பால் நிரப்பியது. லூக்கா 3:10-18

யோவான் ஸ்நானனின் ஊழியத்தின் விளைவு, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளையும், குழந்தைகள் தங்கள் பெற்றோரையும் நேசிக்கும்படி அமைந்தது. மத். 3:5-6, மத். 21:32

யோவானின் ஊழியம் குடும்பங்களில் நல்லிணக்கத்தை மீட்டெடுப்பது மாத்திரமல்லாமல் லூக்கா 1:16, 17ன்படி அவன் இஸ்ரவேல் சந்ததியாரில் அநேகரை அவர்கள் தேவனாகிய கர்த்தரிடத்திற்கும் பிதாக்களுடைய இருதயங்களைப் பிள்ளைகளிடத்திற்கும், கீழ்ப்படியாதவர்களை நீதிமான்களுடைய ஞானத்திற்கும் திருப்பி, உத்தமமான ஜனத்தைக் கர்த்தருக்கு ஆயத்தப்படுத்தும்படியாக, அவன் எலியாவின் ஆவியும் பலமும் உடையவனாய் அவருக்கு முன்னே நடப்பான் என்பதை காணமுடிந்தது.

மல்கியா 1:2; 2:4, 2:6; 3:3-4 ஐ கவனிக்கவும்.

இங்குள்ள எச்சரிப்பு என்னவென்றால், இந்த மறுசீரமைப்பு செய்யப்படாவிட்டால், மேசியாவின் வருகை "பூமிக்கு" ஆசீர்வாதத்தை அல்ல (நியாயதீர்ப்பை) சாபத்தை நிரூபிக்கும்.

தேவன் ஆசீர்வதிக்கும்படி விரும்பியும் எருசலேம் ஜனங்கள் மேசியாவை தனது முதல் வருகையிலே நிராகரித்தபோது நிரூபனம் ஆனது. ஆதி. 12:3, யோ. 1:11-13.

யோவானின் பிரசங்கத்தின் மூலம் தேசத்தின் பொதுவான அழிவிலிருந்து பலர் விடுவிக்கப்பட்டனர். ரோ. 9:29; 11:5.

கிறிஸ்துவானவர் மீண்டும் வரும் போது தம்முடைய பரிசுத்தவான்களில் இன்னும் மகிமைப்படுத்தப்படும் அதே வேளையில் கீழ்ப்படியாதவர்கள் ஆக்கினைக்குள்ளாக்கப்டுவதன் மூலம் இது நிரூபனம் ஆகும். (2தெச. 1:6-10).

மேசியாவுக்கு முன்னர் நானூறு ஆண்டுகளாக பரலோகத்திலிருந்து கடைசியாக கூறப்பட்ட சொல் "சாபம்" என்ற கோபமான வார்த்தையாகும். அதாவது பழைய ஏற்பாட்டின் கடைசி வசனம் சங்காரத்தின் எச்சரிப்பு என்பது ஆழமாக அறிவுறுத்தப்படுகிறது. மல்கியா 4:6

மூல பாஷையான கிரேக்க மொழிப் பெயர்ப்பின்படி மலைப்பிரசங்கத்தில் மேசியாவின் முதல் வார்த்தை “ஆசீர்வதிக்பட்டவர்கள்” என்பது (மத். 5:3).

ஆம் சட்டம் கோபத்தை பேசுகிறது; நற்செய்தி, ஆசீர்வாதத்தை தருகிறது.

புதிய ஏற்பாட்டின் முடிவு வசனத்தை கவனிக்கவும்... சாபத்தின் எச்சரிப்பில் முடிந்த பழைய ஏற்பாட்டிற்கும் புதிய ஏற்பாட்டு புத்தகத்தின் கடைசி வசனத்திற்கும் உள்ள வேறுபாடுகளை !! அல்லேலூயா .... வெளி. 22:21

சட்டத்தின்படியல்ல – கிருபையின்படி ஒருவரை ஒருவர் நேசிக்கும்படியான துவக்கத்தை யோவான் ஸ்நானன் கிறிஸ்துவின் இரட்சிப்பை முன்மொழிந்தார் !!

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

வலைதளம் : 
kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக