சனி, 16 மே, 2020

#949 - பெத்லெகேம் என்றால் என்ன?

#949 - *பெத்லெகேம் என்றால்,  அப்பத்தின் வீடு  என்று சிலரின் செய்திகளில் கேட்டிருக்கிறேன். இது வேதத்தில் சொல்லப்பட்டிருக்கிறதா? இல்லை என்றால் ஏன் இப்படி சொல்லப்படுகிறது*.

*பதில்*
பெய்த்-லெச்சேம் என்பது சரியான உச்சரிப்புள்ள எபிரேய வார்த்தை.

அதற்கு:
பெய்த் என்றால் வீடு
லெச்சம் / லெக்ஹம் என்றால் அப்பம் / ஆகாரம்.

அரபி மொழியிலும் இதே அர்த்தம் தான்.

பெத்லகேம் என்பது யூதாவின் "மலை நாட்டில்" ஒரு நகரம்.

இது முதலில் எப்பிராத்தா என்று அழைக்கப்பட்டது (ஆதி. 35:16,19; ஆதி. 48:7; ரூத் 4:11). எப்பிராத்தா எனப்பட்ட பெத்லகேம் என்றும் (மீகா 5:2), யூதாவிலுள்ள பெத்லகேம் என்றும் (1 சாமு. 17:12), மற்றும் “தாவீதின் நகரம்” (லூக். 2:4) என்றும் அழைக்கப்பட்டது.

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +918144776229
    
*கேள்வியும் வேதாக பதில்களும் வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்ய வேண்டிய லிங்க்: https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

Website : http://www.kaniyakulamcoc.wordpress.com

YouTube Channel : https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக