#947 - *கோயில் கட்டிட பணிக்கு பண உதவி செய்யலாமா?*
எனக்கு தெரிந்த இந்து குடும்பத்தை சேர்ந்த சகோதரி ஆண்டவரை ஏற்றுக் கொண்டு அவரும் அவரது கணவரும் ஞானஸ்நானம் எடுத்துள்ளனர்.
அவரது கணவருடைய தாயாரும், அவரது குடும்பமும் இரட்சிக்கப்படவில்லை.
இந்த நிலையில் அவர்கள் சொந்த கிராமத்தில் கோயில் கட்டிட பணி நடைபெறுகிறது. கிராமத் தலைவர்கள் சேர்ந்து பேசி ஒரு குடும்பத்திற்கு 10,000 தொகை தர உத்தரவு பிறப்பித்து உள்ளனர்.
அவர்கள் அதற்கு பணம் தரலாமா? அப்படி தந்தால் என்ன தீமை? என்பதை வேதத்தின் படி விளக்கவும்.
*பதில்*
கிறிஸ்தவர்கள் தேவனுடைய இராஜ்ஜியத்தைக் கட்ட அழைக்கப்பட்டவர்கள்.1பேதுரு 2:5
முதல் தலைமுறை கிறிஸ்தவர்களுக்கு இவ்வாறு அநேக பாடுகள் அதிகமாக உண்டு.
அநுதினமும் சிலுவையைச் சுமந்து செல்வது அவசியமாகிறது. மத். 16:24
இந்திய அரசாங்க சட்டத்தின்படி அவரவர் தங்கள் மதங்களையும் மார்க்கத்தையும் மதித்து வாழும்படியான சகல விதிகளும் உள்ளது.
யாரும் யாரையும் கட்டாயப்படுத்த முடியாது.
ஏழைகளுக்கு திக்கற்றவர்களுக்கும் உதவுவது தேவனுடைய பண்பு. சகரியா 7:10
ஆனால் அவர்களுடைய பழக்கங்களுக்கு உடன்படுவது சொந்த இரட்சிப்பிற்கு உகந்ததல்ல. யாத். 34:12, 15, 2கொரி. 6:14-7:1, 1கொரி. 10:18-22
உலக ஸ்நேகத்தை நாடினால் தேவன் தூரப்படுகிறார். யாக். 4:4-5
பணம் கொடுக்க வேண்டும் என்பது அரசாங்க உத்தரவு அல்ல. 1பேதுரு 3:13-17
*எடி ஜோயல் சில்ஸ்பி*ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html
வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com
YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக