வெள்ளி, 30 ஆகஸ்ட், 2019

#391 - இயேசு கிறிஸ்துவின் வம்ச வரலாறு பட்டியலில் ஏன் முரணாக காணப்படுகிறது.

#391 - *இயேசு கிறிஸ்துவின் வம்ச வரலாறு பட்டியலில் ஏன் முரணாக காணப்படுகிறது?* மத்தேயு 1ம் அதிகாரத்தில் குறைவான பெயர்களும் லூக்கா 3ம் அதிகாரத்தில் அதிகமான பெயர்களும், இயேசுவின் வளர்ப்பு தந்தை யோசேப்பின் அப்பா பெயர் வித்தியாசமாக காணப்படுகிறது ஏன்?

மத்தேயு 1: 16 - யாக்கோபு மரியாளுடைய புருஷனாகிய யோசேப்பைப் பெற்றான்; அவளிடத்தில் கிறிஸ்து என்னப்படுகிற இயேசு பிறந்தார்.

லூக்கா 3: 23 - அப்பொழுது இயேசு ஏறக்குறைய முப்பது வயதுள்ளவரானார். அவர் யோசேப்பின் குமாரனென்று எண்ணப்பட்டார். அந்த யோசேப்பு ஏலியின் குமாரன்;

இதன் உண்மையான பின்னணி என்ன? யோசேப்பின் உண்மையான தந்தையின் பெயர் என்ன? விளக்கம் தரவும் ஐயா.

*பதில்* :
இது ஒரு முக்கியமான வரலாறு. பொறுமையாக படிக்கவும்.

இரண்டு சுவிசேஷ புத்தக வரலாறுகளும் வேறுபட்டவை.

அவை வெவ்வேறு விஷயங்களை நிரூபிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன.

மத்தேயு எழுதும் வம்ச வரலாறு *யோசேப்பு வழியாக ஆபிரகாம் வரைக்கும்* செல்கிறது. மத்தேயு 1: 18-25

தாவீதின் சிங்காசனத்திற்கு இயேசுவின் சட்டபூர்வமான உரிமையை விளக்குவதே இதன் நோக்கம்.

லூக்காவின் வம்ச வரலாறு *மரியாள் வழியாக ஆதாம் வரைக்கும் செல்கிறது. அதன் நோக்கம் இயேசுவின் மனித நேயத்தை நிரூபிப்பதாக ஆதாமின் சந்ததியார் என்பதைக் காட்டுகிறார். லூக்கா 1: 26-56

வம்சத்தை குறிப்பிடுவதில், மத்தேயு *ஆசீர்வாதத்தை பெற்ற வம்சத்தை  பின்பற்றுகிறார்* - குடும்பத்தின் தலைமைத்துவத்திற்கான உரிமை தந்தைக்கு அடுத்தது மூத்த மகன் என்ற கணக்கில் இல்லாமல் ஆசீர்வாதத்தின்படி வம்சத்தை வைத்து எழுதுகிறார்.  உதாரணத்திற்கு ஆபிரகாம் பிள்ளை ஈசாக்கு பிள்ளை ஏசா என்றில்லாமல் யாக்கோபு வருவது போல் (ஏசா அந்த தகுதியை ஒரு வேளை தன் வயிற்று பசியை நிறப்ப கூழ் பெற்றுக்கொண்டு அற்பமாக விற்றுவிட்டதன் விளைவு)

லூக்கா குறிப்பிடும் வம்சவரலாறு யோசேப்புடன் தொடங்குகிறது என்றாலும், இங்கே யோசேப்பு - *அவரது மனைவி மரியாளுக்கு பதில் குறிப்பிடப்படுகிறார்*.

ஆண்களையே வாரிசாக கருதப்படும் பாணியை லூக்கா பயன்படுத்துகிறார்.
பெண்ணான மரியாளுக்கு பதில் அவள் கணவரை (மகளுக்கு பதிலாக மருமகனை வாரிசாக குறிப்பிடுகிறார்)  யூதர்களுக்கு பெண்களை வாரிசாக பட்டியலிடுவது வழக்கமல்ல - 1சாமுவேல் 24:16

சரியான பரம்பரை முக்கியமானது என்பதை மத்தேயு காட்டியதை விட லூக்காவின் பதிப்பு மிகச் விரிவாக உள்ளது.

லூக்காவின் வம்ச பட்டியலில் மேசியா ஆபிரகாமிலிருந்து வருவார் என்று வாக்குறுதி அளித்ததை ஊர்ஜீதப்படுத்துகிறது - ஆதியாகமம் 22:18

மேலும் மேசியா தாவீதின் கர்ப்பத்தின் கனியில் வருவார் என்பதை நிரூபிக்கிறது. சங்கீதம் 132: 10-11

இது மிகப் பொிய பாடம் – இலகுவாக புரியும் வண்ணம் மிக மிக சுருக்கி எழுதியிருக்கிறேன்.

யோசேப்பின் தந்தையின் பெயர் – மத்தேயு எழுதிய யாக்கோபு.

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +918144776229
    
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

எமது வலைதளம்
http://www.kaniyakulamcoc.wordpress.com

----*----*----*----*----*-----
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக