#945 - *சங்கீதம் புத்தகங்களில் 150 அதிகாரங்களை பாடியது யார் யார் எத்தனை அதிகாரங்கள்*
*பதில்*
தாவீது – எழுதியதாக 73 சங்கீதத்தில் நேரடியாகக் குறிப்பிடப்பட்டுள்ளது;
மேலும் 2 சங்கீதங்கள் தாவீது எழுதியதாக ஆதாரம் உள்ளது.
இவ்வாறு, தாவீதின் மொத்த 75 சங்கீதங்கள்:
3—9; 11—32; 34—41; 51—65; 68—70; 86; 101; 103; 108—110; 122; 124; 131; 133; 138—145. தாவீது எழுதினார் என்று ஆதாரமுள்ள சங்கீதங்கள் : 2ம் (அப் 4:25), 95ம் (எபி 4:7)
சங்கீதம் 2ன் உள்ளடக்கங்கள் காரணமாக பலர் 1ம் சங்கீதத்தை தாவீது எழுதினார் என்று காரணம் கூறினாலும், கருத்தில் கொள்வதற்கான நேரடியான உறுதியான ஆதாரங்களை காணவில்லை.
ஆசாப் (மற்றும் குடும்பம்) - 12 சங்கீதங்கள்:
50; 73—83
கோராவின் புத்திரர்கள் - 11 சங்கீதங்கள்:
42; 44—49; 84—85; 87—88
சாலமோன் (2 சங்கீதம்):
72 மற்றும் 127
மோசே (1 சங்கீதம்):
90
ஏத்தான் (1 சங்கீதம்):
89
யார் எழுதியது என்று அறியப்படாத சங்கீதங்கள்:
மீதமுள்ள 48 சங்கீதங்கள்
தாவீதினுடையவை என்று கூறப்பட்ட சங்கீதங்கள் தாவீதுடன் தொடர்புபட்டிருந்தாலும் மற்றவர்களின் உதவிகளையும் உள்ளடக்கியிருக்கலாம் என்பதையும் அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்.
மொத்தத்தில், குறைந்தது எட்டு ஆசிரியர்கள் பெயரிடப்பட்டுள்ளனர்.
அறியப்படாத மற்ற சங்கீதங்களின் எழுத்தாளர்களையும் இந்த எண்ணிக்கையில் கூட்டவேண்டும்.
வனாந்தரத்தில் மோசேயின் வாழ்நாள் முதல் (கிமு 1440—1400) எஸ்றா (கிமு 4ம் நூற்றாண்டு) வரையிலான ஏறக்குறைய 1,000 ஆண்டு காலங்களில் சங்கீதங்கள் எழுதப்பட்டன.
தாவீது மற்றும் சாலொமோனின் வாழ்நாளில் பெரும்பாலான சங்கீதங்கள் இயற்றப்பட்டன.
150 சங்கீதங்களின் தலைப்பும் எந்த சூழ்நிலைக்கு ஏற்றது என்ற ஒரு தகவலையும் ஒரு வலைதளத்தில் அறிந்து அதை இங்கு உங்களுக்காக பகிருகிறேன். பிரயோஜனமுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன்.
1. படைப்பாளரான கடவுள் - 8, 19, 33, 65, 111, 104, 145, 147.
2. மீட்பராகிய கடவுள் - 15, 33, 102, 103, 111, 113, 114, 126, 130, 138.
3. நீதிபதியாகிய கடவுள் - 1, 7, 11, 46, 50, 62, 75, 76, 82, 90, 96, 97, 98.
4. கடவுளின் மகிமை - 18, 29, 99, 36, 46, 148, 150.
5. கடவுளின் இறையாண்மை - 24, 46, 47, 72, 89, 93, 96, 97, 98, 99, 112, 146, 145.
6. கடவுளின் ஞானம் - 33, 104, 111, 113, 139, 145, 147.
7. கடவுளின் சட்டம் - 19, 50, 62, 111, 119, 147. 23, 33, 34, 37, 89, 121, 124, 139, 145, 146, 147.
8. கடவுளின் இரக்கம் - 23, 32, 57, 61, 62, 63, 73, 77, 85, 86, 100, 103, 118, 130, 145.
9. கர்த்தரின் வெளிப்பாடு - 2, 8, 85, 89, 102, 110, 111, 113, 132.
10. நம்மீது உள்ள தேவ பற்று - 22, 40, 42, 54, 69, 88, 116, 130.
11. தேவாலயத்தில் - 46, 48, 84, 111, 122, 133, 147.
12. வழிபாடு - 5, 26, 43, 63, 65, 66, 67, 84, 96, 100, 102, 116, 122, 138.
13. நன்றி - 30, 65, 67, 92, 98, 100, 111, 103, 107, 116, 134, 138, 145, 147, 148, 150.
14. ஜெபம் - 4, 5, 17, 20, 28, 31, 54, 61, 84, 86, 102, 141, 142.
15. கடவுள் மீதுள்ள நம்பிக்கை - 27, 31, 57, 62, 63, 71, 73, 77, 91, 118, 121, 123, 124, 125, 143, 146.
16. கடவுள் எங்கள் புகலிடம் - 4, 17, 20, 37, 46, 49, 54, 61, 71, 91, 103, 121, 146.
17. தெய்வீக வழிகாட்டல் - 25, 43, 80, 85, 111, 112.
18. நெருக்கடியான நேரத்தில் - 3, 11, 12, 13, 18, 20, 30, 40, 46, 49, 57, 62, 63, 80, 85, 86, 90, 107, 118, 144, 146.
19. நீதியானது - 1, 11, 12, 15, 18, 19, 26, 34, 40, 92, 111, 112.
20. சமாதானம் - 29, 46, 76, 85, 98, 100, 124, 125, 126.
21. வாழ்க்கையின் மாற்றம் - 39, 49, 90, 102.
22. அழியாத நம்பிக்கை - 16, 30, 42, 49, 66, 73, 103, 116, 121, 139, 146.
23. காலை - 3, 5, 20, 63, 90, 143.
24. மாலை - 4, 13, 16, 17, 31, 77, 91, 121, 134.
25. தண்டனையான சங்கீதம் - 6, 32, 38, 51, 102, 130, 143.
26. ஐக்கியத்திற்கான முன்னோட்டம் - 23, 25, 26, 36, 41, 43, 63, 84, 85, 86, 122, 130, 133, 139.
27. ஐக்கியத்திற்காக நன்றி செலுத்துதல் - 8, 15, 18, 19, 27, 29, 30, 34, 100, 103, 110, 118, 145, 150.
*எடி ஜோயல் சில்ஸ்பி*ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html
வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com
YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக