வெள்ளி, 15 மே, 2020

#944 - திருமணமாகாதவர் ஊழியக்காரர் ஆக இருக்கக் கூடாதா?

#944 - *திருமணமாகாதவர் ஊழியக்காரர் ஆக இருக்கக் கூடாதா?* அப்படியெனில் சிபிஎம் போதகர்கள் மற்றும் திருநங்கை போதகர்கள் இருப்பது தவறா? மேலும் கத்தோலிக்க திருச்சபை போதகர்கள் திருமணம் செய்யாமல் இருக்கிறார்களே அது தவறா?

*பதில்*
பிரசங்கியாளர்களுக்கும் மூப்பர்களுக்கும் வித்தியாசம் உள்ளது.

பவுல் திருமணம் ஆகாதவர். ஊழியம் செய்தார். பிரசங்கியாளனாக இருந்தார். 1கொரி. 9:5

மூப்பரானவர்கள் சபை நிர்வாகத்திற்கென்று ஏற்படுத்தப்படுபவர்கள். அவர்கள் வயதில் மூத்தவராகவும், சத்தியத்தில் நிலைநிற்பவராகவும், திருமணமானவராகவும், அவர்களுக்கு சமுதாயத்தில் நற்பெயர் எடுத்த பிள்ளைகள் இருத்தலும் இப்படி சுமார் 21 தன்மைகள் அவர்களுக்கு அவசியப்படுகிறது. வசன குறிப்புகளை கவனிக்கவும். 1தீமோ. 3:1-6, தீத்து 1:6-9

புதிய ஏற்பாட்டு சத்தியத்திற்கும், சிபிஎம் மற்றும் திருநங்கையர்கள் பணிகளுக்கும் அதிக வேறுபாடு உள்ளது.
ஆகவே, வேதாகமத்திற்குள் அவர்களது பணிக்கான பதிலைத் தேடினால் அதிக முரண்பாடுகளைக் காண்பீர்கள்.
அவர்களது நிறுவனத் தலைவர்கள் தான் அதற்கு பதில் சொல்லவேண்டும்!

அதுபோலவே, கத்தோலிக்கத்திற்கும் கிறிஸ்தவத்திற்கும் சம்பந்தமேயில்லை.
அவர்களை நம் வேதத்தோடு ஒப்பிட்டு பார்ப்பதில் எந்த அர்த்தமும் இல்லை. மேலும் விபரங்களுக்கு #475ஐ பார்க்கவும்.

*எடி ஜோயல் சில்ஸ்பி*

ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +918144776229
    
*கேள்வியும் வேதாக பதில்களும் வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்ய வேண்டிய லிங்க்: https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

Website : http://www.kaniyakulamcoc.wordpress.com

YouTube Channel : https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*

Print Friendly and PDF

1 கருத்து:

  1. [13:29, 15/05/2020] +91 89395 79993 : புதிய ஏற்பாடு சத்தியத்திற்கும் சிபிஎம் சபைக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது என்று எழுதி இருக்கிறீர்கள்

    அப்படி என்ன வித்தியாசத்தைக் கண்டீர்கள் நீங்கள் என்ன அப்படி உயர்வான சத்தியத்தை போதிக்கிறீர்கள் ?

    உங்கள் உபதேசத்தை விட உங்கள் உபதேசம் எந்த வகையில் சிறந்தது தயவுசெய்து எந்த சபையையும் குறைத்து எழுத வேண்டாமென்று மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்

    [14:44, 15/05/2020] Eddy Joel Silsbee: உங்கள் கருத்திற்கு நன்றி பிரதர்.

    என்னுடைய உபதேசம் அல்ல...
    புதிய ஏற்பாட்டின் சத்தியத்தை குறித்தே எழுதினேன்.

    கேட்பதற்கு கடினமாக இருந்தாலும் சத்தியத்திற்கு ஒப்பிடும் போது நிறைய வேறுபாடுகள் உள்ளது.

    வர்கள் தவறானவர்கள் என்றோ குறைவானவர்கள் என்றோ நான் குறிப்பிடவில்லை.

    கிறிஸ்தவர்கள் கிறிஸ்துவின் போதனையை மாத்திரம் பற்றிக்கொள்ள கடமைப்பட்டுள்ளோம்.

    வேதத்திற்கு முரணாக எழுதியிருந்தால் தயவு செய்து சுட்டிக்காட்டவும்.
    நிச்சயம் மாற்றிக்கொள்வேன்.

    யூதா 2

    [14:48, 15/05/2020] Eddy Joel Silsbee: வேதத்தை முறையாகவும் தெளிவாகவும் ஒரு உபதேசியாளன் சொல்லாத பட்சத்தில் தனக்கு ஆக்கினையை வருவித்துக்கொள்கிறான். நான் அதற்கு விலகியிருக்கிறேன் என்பதை நிச்சயமாக சொல்லமுடியும். அப் 20:27

    பதிலளிநீக்கு