வெள்ளி, 15 மே, 2020

#943 - ஆணாக இருக்கவேண்டும் என்று கூறுகிறீர்களே... தமிழகத்தின் பிரபலமான ஜட்சன் பிரீத்தா, பத்மா முதலியார் மேலும் சிலர் இவர்களை போன்ற பெண்கள் ஊழியர்களாக இருப்பது தவறா?

#943 - *சபையில் பிரசங்கம் செய்பவர்கள் ஆணாக இருக்கவேண்டும் என்று கூறுகிறீர்களே*... தமிழகத்தின் பிரபலமான ஜட்சன் பிரீத்தா, பத்மா முதலியார் மேலும் சிலர் இவர்களை போன்ற பெண்கள் ஊழியர்களாக இருப்பது தவறா? யோவேல் 2:29 வசனத்தில் ஊழியக்காரிகள் என்பவர்கள் யார்....  ஆண்கள் மட்டும் தான் ஊழியம் செய்ய வேண்டும் என்றால் பரலோக ராஜ்யத்தின் நிமித்தம் அண்ணகர்கள் ஆனவர்கள் உண்டு என்று ஏன் மத்தேயு சுவிசேஷத்தில் இயேசு கிறிஸ்து கூறுகிறார் (மத்தேயு 19:12) தமிழகத்தை சேர்ந்த திருநங்கை எஸ்தர் பாரதி ஊழியம் செய்கிறார் அது தவறா?

*பதில்*
ஆணாக இருக்க வேண்டும் என்பதை “நான் அல்ல” –
அதை வேதம் கூறுகிறது. தீத்து 1:6, 1தீமோ. 3:2 (மேலும் விபரங்களுக்கு #255 படிக்கவும்)

பெண்கள் ஊழியம் செய்யவேண்டும் – ஆனால் ஆண்கள் கூடியிருக்கும் போது செய்வதற்கு அவர்களுக்கு வேதம் அனுமதியளிக்கவில்லை. 1கொரி. 14:34-37, 1தீமோ 2:11-15 (மேலும் விபரங்களுக்கு #796 படிக்கவும்)

ஊழியக்காரிகள் என்பது சபை மேடையில் நின்று ஆண்கள் மத்தியில் பிரசங்கிப்பவர்களை குறிக்கவில்லை. பிரசங்கம் செய்வது மாத்திரம் ஊழியம் அல்ல.

வருபவர்கள் உட்காரும்படிக்கு தரைவிரிப்பு (பாய்) விரிப்பவர்களும்,
கூடும் இடங்களை சுத்தம் செய்பவர்களும்,
சபையாரை அன்பாய் விசாரிப்பவர்களும்,
சபை கூடுவதற்கு வேண்டிய உதவிகளை செய்பவர்களும்,
வாகன உதவி செய்து அவர்களை கூட்டி வருபவர்களும் என்று அநேக உதவிகளை செய்பவர்களும் கர்த்தருக்கென்று ஊழியம் (கர்த்தருக்கென்று வேலை) செய்பவர்களே. (மேலும் விபரங்களுக்கு #255 & #93, படிக்கவும்)

பரலோக இராஜ்ஜியத்தின் நிமித்தம் தங்களை அண்ணகர்களாக்கிக் கொண்டவர்கள் என்பதன் அர்த்தம் நீங்கள் சொல்கிற சரீரப்பிரகாரமான அண்ணகர்களைக் குறிப்பது அல்ல – மத். 19:10ஐ வாசிக்கவும். (அண்ணகர்களைக் குறித்த மேலும் விபரங்களுக்கு #428ஐ படிக்கவும்)

பிரபலமானவர்களுக்கு முன்னுரிமை கொடுப்பதென்றால் இரட்சிப்பின் பாதை அவசியமில்லாமல் போய்விடும் !!

நம் இரட்சிப்பிற்கு உத்தரவாதம் கிரியை அல்ல – கீழ்படிதலே..

இடுக்கமான வாசலை தேடும்படி நாம் போதிக்கப்பட்டிருக்கிறோம். மத். 7:14

எவ்வளவு பிரபலமான ஊழியரானாலும் சத்தியத்திற்கு செவி சாய்க்காத பட்சத்தில் ஒன்றுக்கும் பிரயோஜனமில்லை.

குழியில் தாங்கள் விழுவது போதாதென்று, கேட்பவர்களையும் கவிழ்த்துப்போடுபவர்களிடத்திலிருந்து சொந்த இரட்சிப்பை வேதத்தோடு ஒப்பிட்டு காப்பாற்றிக்கொள்ளவும். 1தீமோ. 4:16, மத். 15:14, ஏசா. 9:16, எரே. 5:31, எரே. 6:15, 2பேதுரு 2:1, 17.

குறிப்பு வசனங்களை வேதத்திலிருந்து வாசித்து ஒப்பிடவும்.

ஜீரணிப்பது கடினமே – சவுலை இடம் மாற்றியது கீழ்படியாமை !!
 
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Book ஆர்டர் செய்ய* : https://kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் : https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

வலைதளம் : http://www.kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக