செவ்வாய், 12 மே, 2020

#937 - ஒருவேளை நாம் வாழ்வது கடைசி காலமாக இருந்தால், நாம் எவ்வாறெல்லாம் கிறிஸ்துவுக்குள் காலத்தை பிரயோஜனப்படுத்திக்கொள்ள வேண்டும்

#937 - *ஒருவேளை நாம் வாழ்வது கடைசி காலமாக இருந்தால், நாம் எவ்வாறெல்லாம்  கிறிஸ்துவுக்குள் காலத்தை பிரயோஜனப்படுத்திக்கொள்ள வேண்டும்?* ஞானஸ்நானத்திற்கு பிற்பாடுள்ள வாழ்ககை எப்படியிருக்க வேண்டும்? வசனத்தின்படி விளக்கவும்.

*பதில்*
அநேகருக்கு இந்த கேள்வி பிரயோஜனமாக இருக்கும்.

கடைசி நேரம் நெருங்குகிறது என்பதற்கான எந்த முன்னறிவிப்பும் இருக்காது என்பதை தெளிவாக கிறிஸ்து விவரிக்கிறார்.

மத். 24:36-39 அந்த நாளையும் அந்த நாழிகையையும் என் பிதா ஒருவர் தவிர மற்றொருவனும் அறியான்; பரலோகத்திலுள்ள தூதர்களும் அறியார்கள். நோவாவின் காலத்தில் எப்படி நடந்ததோ, அப்படியே மனுஷகுமாரன் வரும் காலத்திலும் நடக்கும். எப்படியெனில், ஜலப்பிரளயத்துக்கு முன்னான காலத்திலே நோவா பேழைக்குள் பிரவேசிக்கும் நாள்வரைக்கும், ஜனங்கள் புசித்தும் குடித்தும், பெண்கொண்டும் பெண்கொடுத்தும், ஜலப்பிரளயம் வந்து அனைவரையும் வாரிக்கொண்டுபோகுமட்டும் உணராதிருந்தார்கள்; அப்படியே மனுஷகுமாரன் வருங்காலத்திலும் நடக்கும்.

உலகத்தின் முடிவு இதோ அதோ என்று எச்சரிப்பு செய்து வந்து கொண்டே தான் இருக்கிறது.

தன்னிடத்தில் தேவன் சொன்னதாக ஒருவர் சுமார் 30 வருடங்களுக்கு முன்னர் மேடையில் சொல்ல அநேகர் வேலையை ராஜினாமா செய்து அத்தனை சொத்துக்களையும் அவரிடம் கொண்டு போய் கொடுத்து அவர் திருநெல்வேலியில் ஒரு இடத்தில் தனக்கான பெரிய ஒரு பங்கை தயார் செய்தது தான் அவர் லாபம். அத்தனை பேரும் ஏமாந்து போனார்கள். !!

தேவகுமாரன் கூட முடிவு எப்போது இருக்கும் என்று தனக்குத் தெரியாது என்று கூறினார். தீர்ப்பு நாள் எப்போது வரும் என்று தெரிந்து கொள்வதாகக் கூறும் எவரும் தெளிவாக பொய் சொல்பவர்கள்.

அப்போஸ்தலனாகிய பவுலும் இதே கருத்தை வலியுறுத்துகிறார்.

1தெச. 5:2-3 இரவிலே திருடன் வருகிறவிதமாய்க் கர்த்தருடைய நாள் வருமென்று நீங்களே நன்றாய் அறிந்திருக்கிறீர்கள். சமாதானமும் சவுக்கியமும் உண்டென்று அவர்கள் சொல்லும்போது, கர்ப்பவதியானவளுக்கு வேதனை வருகிறதுபோல, அழிவு சடிதியாய் அவர்கள்மேல் வரும்; அவர்கள் தப்பிப்போவதில்லை.

மத். 24:42-44 உங்கள் ஆண்டவர் இன்ன நாழிகையிலே வருவாரென்று நீங்கள் அறியாதிருக்கிறபடியினால் விழித்திருங்கள்.  திருடன் இன்ன ஜாமத்தில் வருவானென்று வீட்டெஜமான் அறிந்திருந்தால், அவன் விழித்திருந்து, தன் வீட்டைக் கன்னமிடவொட்டானென்று அறிவீர்கள். நீங்கள் நினையாத நாழிகையிலே மனுஷகுமாரன் வருவார்; ஆதலால், நீங்களும் ஆயத்தமாயிருங்கள்.

உங்கள் கேள்வியின் படி – எந்தக் காலத்தில் நம் கிறிஸ்து வந்தாலும் அதற்குள் கொடுக்கப்பட்ட நேரத்தை எப்படி பிரயோஜனப் படுத்திக்கொள்வது?

நம் கையில் உள்ள வசனமே நியாய்ந்தீர்க்கும் என்கிற மிகப்பொிய இரகசியத்தை கிறிஸ்து நமக்கு சொல்லிவைத்தது மாத்திரமல்லாமல் சொந்த மொழியிலேயே அதை கரங்களில் பெற்றிருக்கிறோம். யோ. 12:48

சாலையில் வாகனத்தை ஓட்டிக்கொண்டு போகும் போது வண்டி மற்றும் ஓட்டுநருக்கான சகல அரசாங்க ஆதாரங்களும் இருந்தால் – எதிரே காவல் அதிகாரி நின்றாலும் நெஞ்சை நிமிர்த்தி தைரியமாக நாம் அவர் அருகே நிற்கலாம். 1கொரி. 11:31

ஆகவே அதை *முறையாக* படித்து அதன்படியே நம்மை தயார் படுத்திக்கொள்ளும் போது கிறிஸ்துவின் வருகைக்காக தைரியமாக நாமே காத்திருக்கலாம்.

அனைத்தையும் நான் இங்கு சொல்லிவிடமுடியாது என்றே கருதுகிறேன். இருந்தாலும் – முக்கியமானவற்றை பட்டியலிடுகிறேன்.

உங்கள் சொந்த இரட்சிப்பை முதலில் ஊர்ஜிதப்படுத்திக்கொள்ளவும்.

இரட்சிக்கப்பட்டு ஞானஸ்நானம் எடுக்கும்/கொடுக்கும் முறை இப்போது வைரஸ் போல பரவி உள்ளது. *ஞானஸ்நானம் எடுத்தப்பின் தான் இரட்சிப்பு என்கிறது வேதம்*. 

அடிப்படையை முதலில் கவனிக்கவும்.  அப். 2:38, 47, மாற்கு 16:16

1-சத்தியத்தை கேட்டு அறிந்து (ரோ. 10:17), 

2-விசுவாசித்து (யோ. 3:16), 

3-மனந்திரும்பி (அப். 17:30), 

4- பாவத்தையல்ல விசுவாசத்தை அறிக்கையிட்டு (ரோ. 10:10), பாவமன்னிப்பிற்கென்று ஞானஸ்நானம் (அப். 2:38, 22:16, மாற்கு 16:16) இன்னும் பெறாவிடில் தாமதிக்காமல் வேதத்தின்படி முதலில் அவ்வாறே கீழ்படியவும்.

ஞானஸ்நானம் என்பது தண்ணீரில் முற்றிலும் மூழ்கி எடுக்கவேண்டும்.

*இரட்சிப்பின் பாதையில் நியமிக்கப்பட்டவர் எப்படி இருக்கவேண்டும்*? /  *ஞானஸ்நானம் எடுத்தபின் ஒருவருடைய வாழ்க்கை எப்படி இருக்கவேண்டும்*?

 1. *வேதத்தை தவறாமல் படியுங்கள்*
தேவனுடைய சித்தத்தைக் கற்றுக்கொள்வதற்கும் பிழையைத் தவிர்ப்பதற்கும் நம்முடைய ஒரே வழி விடாமுயற்சியுள்ள பைபிள் படிப்பு. அப். 17:11; சங். 1: 2; 2தீமோ. 2:15; 3: 16,17.

 2. *அடிக்கடி ஜெபம் செய்யுங்கள்*
தேவனுக்கு நன்றி செலுத்துவதற்கும், அவரைப் புகழ்வதற்கும், நம்முடைய தேவைகளை தொிவிப்பதற்கும் ஜெபமே நமது வழிமுறையாகும். பிலி. 4: 6; 1பேதுரு 5:7; மத். 6: 9-13; 1தெச. 5:17

3. *உள்ளூர் சபையில் உங்களை ஈடுபடுத்துங்கள்*
புதிய ஏற்பாட்டு கிறிஸ்தவர்கள் எப்போதும் உள்ளூர் சபை ஐக்கியத்தில் ஒரு பகுதியாக அங்கீகரிக்கப்பட்டனர். அந்த சபையின் ஊழியத்தில்  ஈடுபடவும் தீவிரமாக பங்கேற்கவும் அவர்கள் தங்களை உறுதிப்படுத்திக் கொண்டனர். அப்.  9: 26-28; 11:26; எபி. 13:17; 1கொ. 1: 2; எபே. 4:16

4. *மற்றவர்களுடன் சரியான உறவைப் பயிற்சி செய்யுங்கள்*
சொந்த குடும்பத்தில் – எபே. 5: 22-6: 4; கொலோ. 3: 18-21; தீத்து 2: 4,5.

தேவைப்படுபவர்களுக்கு - லூக்கா 10: 25-37; அப். 20:35; யாக். 1:27; மத். 25: 34-40.

அரசாங்கத்திற்கு - ரோ. 13: 1-5; 1பேதுரு 2: 13,14; மத். 22: 17-21.

தொழிலில் எபே. 6: 5-9; தீத்து 2: 9,10; கொலோ. 3: 22-4: 1; சங். 37:21.

5. *மற்றவர்கள் நற்செய்தியைக் கற்றுக்கொள்ள உதவுங்கள்*
இயேசுவிடம் மற்றவர்களை எவ்வாறு வழிநடத்துவது என்பதை அறிய அனைத்து கிறிஸ்தவர்களும் பணியாற்ற வேண்டும் - அப். 8: 4; நீதி. 11:30; 2தீமோ. 2: 2,24-26; யோ. 4: 28-30,39; 1: 40-46; எபி. 5:12.

6. *நேர்மையான ஒழுக்க வாழ்க்கை வாழ்க*
மாற்கு 7: 20-23; ரோ. 1: 26-32; 1கொ. 6: 9-11; கலா. 5: 19-21;

7. *தேவனுடைய சித்தத்தை செய்யுங்கள்*
அதாவது தேவனுடைய வார்த்தையின்படி (வசனத்தின்படி) வாழ்க்கையின் சகல கிரியைகளும் இருக்கவேண்டும். லூக்கா 14:26-33; மத். 28: 18-20; 16: 24-27; 6: 19-33; ரோ. 12: 1,2; 6: 1-18.

8. *ஞானஸ்நானத்திற்குப் பிறகு ஒருவர் பாவம் செய்தால் என்ன செய்ய வேண்டும்*?
பாவத்தை அறிக்கை செய்து அதை விட்டு விடவேண்டும். சம்பந்தப்பட்டவரிடம் ஒப்புரவாக வேண்டும். அப். 8:22; 1யோ. 1:9; யாக். 5:16

இவைகளில் நிலைகொண்டிருந்தால் நம் இரட்சிப்பு வீண் போகாது. நமக்கான கிரீடத்தை நிச்சயம் பெறுவோம். வெளி. 3:11

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Book ஆர்டர் செய்ய* :
https://kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

வலைதளம் :
http://www.kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக