பரிசுத்தப்படுத்தும் தேவன் தாமே நம்மை ஆசீர்வதிப்பாராக.
என்ன தான் பவுல் சொல்றார் கேட்போமே என்ற ஆர்வத்தோடு அகிரிப்பா ராஜா கேட்க துவங்கினார். (அப் 25:22)
ஆனால் - பவுல் பேசினதை கேட்க கேட்க தமக்கு உறுத்தலாகவும் தன் பழக்கவழக்கத்தை திருத்திக்கொள்ளும்படியான விஷயங்கள் உணர்த்தப்பட்டாலும் பழைய பாதையை விட்டு அவரால் வர முடியவில்லை. (அப் 26:28)
பல நேரங்களில் நமக்கும் அப்படி ஆகிவிடுகிறது.
வேதம் படிக்கும் போதோ கர்த்தருடைய செய்தி கேட்கும் போதோ உணர்த்தப்பட்டால் நம்மை நாமே திருத்திக்கொள்வதற்கு பதிலாக வெளியேறி விடுவதும் எதையாவது சொல்லி சமாளித்து விடுவதுமாக தப்பித்துக்கொள்கிறோம்.
தேவ சட்டமோ தேச சட்டமோ - மீறி நடந்தால், பிடிக்கப்படும்போது தண்டனை நிச்சயம் !!
எத்தனை சுகம் / லாபம் / தலைமை பொருப்பில் இருந்தாலும் உதறி போட்டு வேதத்தின் ஒழுங்கிற்கு திரும்ப வேண்டும். இக்கால சுகம் நித்திய வேதனை !!
மீட்பராகிய இயேசு கிறிஸ்துவோ நம் இருதயத்தின் கதவை எப்போதும் தட்டி கொண்டே தான் இருக்கிறார். வெளி 3:20
ஆராதனை / எழுப்புதலில் இருக்கும் இரைச்சல் உன்னதத்தின் மெல்லிய சப்தத்தை கேட்க விடாமல் பண்ணிவிடும் – 1இரா 19:12, யோபு 4:16, அப் 2:3-37
Eddy Joel Silsbee
Preacher – The Churches of Christ
Teacher – World Bible School
+91 8144 77 6229 / joelsilsbee@gmail.com
*கேள்வி மற்றும் வேதாக பதில் Whatsapp (Locked) குழுவில் இணைய :
https://chat.whatsapp.com/HC5EvlXcDQ9Ivna03Z4EDR
அனைத்து கேள்வி பதிலும் காண:
https://joelsilsbee.wordpress.com/qa/
https://joelsilsbee.blogspot.com/

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக