ஞாயிறு, 10 மே, 2020

#935 - கிறிஸ்துவைத் தவிர ஒருவரும் பரலோகம் செல்லவில்லை. ஆனால் எலியா சுழல் காற்றிலே பரலோகம் சென்றதாக பழைய ஏற்பாட்டில் சொல்லப்பட்டிருக்கிறது. விளக்கவும்

#935 - *எலியா சுழல் காற்றிலே பரலோகம் சென்றதாக பழைய ஏற்பாட்டில் சொல்லப்பட்டிருக்கிறது.  கிறிஸ்துவைத் தவிர ஒருவரும் பரலோகம் செல்லவில்லை என புதிய ஏற்பாடு போதிக்கிறது. முரன்பாட்டை விளக்கவும்*

*பதில்:*
யோ. 3:12 - பூமிக்கடுத்த காரியங்களை நான் உங்களுக்குச் சொல்லியும் நீங்கள் விசுவாசிக்கவில்லையே, பரமகாரியங்களை உங்களுக்குச் சொல்வேனானால் எப்படி விசுவாசிப்பீர்கள்?

யோ. 3:13 - பரலோகத்திலிருந்திறங்கினவரும் பரலோகத்திலிருக்கிறவருமான மனுஷகுமாரனேயல்லாமல் பரலோகத்துக்கு ஏறினவன் ஒருவனுமில்லை.

12ம் வசனத்தின் சாரம்சத்தை உணர்ந்தால் 13ம் வசனம் இலகுவாகிவிடும்.
பரலோகத்திலிருந்து இறங்கினவரே பரலோக விஷயங்களைப் பற்றி பேச தகுதியுள்ளவன் என்பதை தெரிவிக்கிறார்.

எலியாவோ ஏனோக்கோ – திரும்பி மக்களிடத்தில் வரவில்லை.
பரலோக விஷயங்களைப் பற்றி பேசுவதற்கு அவற்றை ஒருவர் பார்த்திருக்க வேண்டும்.

யாரும் பரலோகத்திற்கு ஏறி திரும்பி வராததால், பரலோகத்திலிருந்து இறங்கியவரைத் தவிர வேறு எவரும் அதைப் பற்றி பேசத் தகுதியற்றவர்கள்.

மேலும், ஏனோக்கும் எலியாவும் தேவனால் எடுத்துக் கொள்ளப்பட்டார்கள். ஆதி. 5:24; எபி. 11:5; 2 இரா. 2:11

தேவன் அவர்களைக் கூட்டிக்கொண்டார்.

2இரா. 2:3 அப்பொழுது பெத்தேலிலிருந்த தீர்க்கதரிசிகளின் புத்திரர் எலிசாவினிடத்தில் வந்து: இன்றைக்குக் கர்த்தர் உனக்குத் தலைமையாயிருக்கிற உன் எஜமானை உன்னைவிட்டு எடுத்துக்கொள்வார் என்பது உனக்குத் தெரியுமா என்றார்கள். அதற்கு அவன்: எனக்குத் தெரியும், சும்மா இருங்கள் என்றான்.

2இரா. 2:5 எரிகோவிலிருந்த தீர்க்கதரிசிகளின் புத்திரர் எலிசாவினிடத்தில் வந்து: இன்றைக்குக் கர்த்தர் உனக்குத் தலைமையாயிருக்கிற உன் எஜமானை உன்னைவிட்டு எடுத்துக்கொள்வார் என்பது உனக்குத் தெரியுமா என்று அவனைக் கேட்டார்கள். அதற்கு அவன்: எனக்குத் தெரியும், சும்மா இருங்கள் என்றான்.

2இரா. 2:11 அவர்கள் பேசிக்கொண்டு நடந்துபோகையில், இதோ, அக்கினிரதமும் அக்கினிக்குதிரைகளும் அவர்கள் நடுவாக வந்து இருவரையும் பிரித்தது; எலியா சுழல்காற்றிலே பரலோகத்திற்கு ஏறிப்போனான்.

இயேசு கிறிஸ்துவோ எந்த உதவியும் இல்லாமல் மேகங்களினூடே மேலே கடந்து போனார்.

அப். 1:9 இவைகளை அவர் சொன்னபின்பு, அவர்கள் பார்த்துக்கொண்டிருக்கையில், உயர எடுத்துக்கொள்ளப்பட்டார்; அவர்கள் கண்களுக்கு மறைவாக ஒரு மேகம் அவரை எடுத்துக்கொண்டது.

அப். 1:11 கலிலேயராகிய மனுஷரே, நீங்கள் ஏன் வானத்தை அண்ணாந்துபார்த்து நிற்கிறீர்கள்? உங்களிடத்தினின்று வானத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இந்த இயேசுவானவர் எப்படி உங்கள் கண்களுக்கு முன்பாக வானத்துக்கு எழுந்தருளிப்போனாரோ, அப்படியே மறுபடியும் வருவார் என்றார்கள்.

யோ. 6:62 மனுஷகுமாரன் தாம் முன்னிருந்த இடத்திற்கு ஏறிப்போகிறதை நீங்கள் காண்பீர்களானால் எப்படியிருக்கும்?

எபே. 4:10 இறங்கினவரே எல்லாவற்றையும் நிரப்பத்தக்கதாக, எல்லா வானங்களுக்கும் மேலாக உன்னதத்திற்கு ஏறினவருமாயிருக்கிறார்.

எபி. 4:14 வானங்களின் வழியாய்ப் பரலோகத்திற்குப்போன தேவகுமாரனாகிய இயேசு என்னும் மகா பிரதான ஆசாரியர் நமக்கு இருக்கிறபடியினால், நாம் பண்ணின அறிக்கையை உறுதியாய்ப் பற்றிக்கொண்டிருக்கக்கடவோம்.

எடுத்துக்கொள்ளப்பட்டார் என்ற மொழிப்பெயர்கப்பட்ட வார்த்தையை தமிழ் வேதாகமத்தில் லூக்கா 24:51, மாற்கு 16:19 கண்டாலும் இயேசு தாமாக சென்றார் என்பதில் எந்த மூல பாஷையின் வார்த்தையை ஆராயும் போது எந்த மாற்றுக்கருத்தும் இருக்க முடியாது.

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +918144776229
    
*கேள்வியும் வேதாக பதில்களும் வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்ய வேண்டிய லிங்க்: https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

Website : http://www.kaniyakulamcoc.wordpress.com

YouTube Channel : https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக