சனி, 25 ஏப்ரல், 2020

#907 - பாழாக்கும் அருவருப்பு என்று மத் 24:15ல் வருவதை விளக்கவும்.

#907 - *பாழாக்கும் அருவருப்பு என்று மத் 24:15ல் வருவதை விளக்கவும்*.

*பதில்*
16ம் வசனததையும் இணைக்கிறேன்.

மத். 24:15-16 “மேலும், *பாழாக்குகிற அருவருப்பைக்குறித்துத்* தானியேல் தீர்க்கதரிசி சொல்லியிருக்கிறானே, வாசிக்கிறவன் சிந்திக்கக்கடவன். நீங்கள் அதைப் *பரிசுத்த ஸ்தலத்தில் நிற்கக் காணும்போது*, யூதேயாவில் இருக்கிறவர்கள் மலைகளுக்கு ஓடிப்போகக்கடவர்கள்.

பரிசுத்த ஸ்தலத்தில் நின்று 'பாழ்படுத்தும் அருவருப்பானது', தானியேல் தீர்க்கதரிசி மூலமாகப் பேசப்படுகிறது (தானி. 11:31)

*இந்த வசனம் காலத்தின் முடிவில் நிகழும் பெரும் உபத்திரவத்தைக் குறிக்கிறதா*?
இல்லை, எருசலேமின் அழிவு பற்றிய அறிகுறிகள் இது.

பாழடைந்திருப்பது என்ன? லூக்கா 21:20ல் தெளிவாக கொடுக்கப்படுகிறது.

லூக்கா 21:20 எருசலேம் சேனைகளால் சூழப்பட்டிருப்பதை நீங்கள் காணும்போது, அதின் அழிவு சமீபமாயிற்றென்று அறியுங்கள்.

அருவருப்பானது என்பது - ரோமானியப் பேரரசையும்,
பரிசுத்த ஸ்தலம் என்பது – எருசலேமையும் குறிக்கிறது.

ரோமானியர்கள் அதை பாழாக்கப் போவதாக இயேசு கூறுகிறார்.

ரோமானியப் படைகளால் சூழப்பட்ட நகரத்தைப் பார்க்கும்போது, ​​முடிவு இங்கே உள்ளது என்பதை நீங்கள் அறிவீர்கள்.

மக்கள் என்ன செய்ய வேண்டும்?
லூக்கா 21:21-24 அப்பொழுது யூதேயாவிலிருக்கிறவர்கள் மலைகளுக்கு ஓடிப்போகவும், எருசலேமிலிருக்கிறவர்கள் வெளியே புறப்படவும், நாட்டுப்புறங்களிலிருக்கிறவர்கள் நகரத்தில்  பிரவேசியாமலிருக்கவும்கடவர்கள்.  எழுதியிருக்கிற யாவும் நிறைவேறும்படி நீதியைச் சரிக்கட்டும் நாட்கள் அவைகளே. அந்நாட்களில் கர்ப்பவதிகளுக்கும் பால்கொடுக்கிறவர்களுக்கும் ஐயோ, பூமியின்மேல் மிகுந்த இடுக்கணும் இந்த ஜனத்தின்மேல் கோபாக்கினையும் உண்டாகும். பட்டயக்கருக்கினாலே விழுவார்கள், சகல புறஜாதிகளுக்குள்ளும் சிறைப்பட்டுப்போவார்கள்; புறஜாதியாரின் காலம் நிறைவேறும்வரைக்கும் எருசலேம் புறஜாதியாரால் மிதிக்கப்படும்.

பேரழிவானது உலகம் கண்ட மிக மோசமானதாக இருக்கும் என்பதை தெரிவிக்கிறார்.

இந்த பேரழிவை பற்றி வரலாற்று தகவல்களை இங்கு பதிவிடுவது இதனுடைய பேரழிவு எப்படி இருந்தது என்பதை புரிந்து கொள்ள ஏதுவாகும்.

நகரத்திற்கு வெளியே நூற்றுக்கணக்கான யூதர்கள் சிலுவையில் அறையப்பட்டனர்.

நகரத்திற்குள் தங்களுக்குள் ஒருவருக்கொருவர் சண்டையிட்டதில் உள்நாட்டுப் போர் வெடித்தது.

எருசலேம் தேவாலய பிரகாரங்கள் இரத்தத்தால் கழுவப்பட்டன.

இந்த முற்றுகை நகரத்தை கொடும் பஞ்ச நிலைக்கு தள்ளிவிட்டது.

தாய்மார்கள் தங்கள் குழந்தைகளை சாப்பிட்டனர்.

கொள்ளைநோய், பட்டினி, படுகொலை மற்றும் கொடூரமான அட்டூழியங்கள் பொதுவாக அறங்கேறின.
கி.பி 70 ஆகஸ்டு மாதத்திற்க்குள், 1.1 மில்லியன் யூதர்கள் வாளால் விழுந்து மடிந்தனர்.

சுமார் 1,00,000 பேர் சிறைபிடிக்கப்பட்டனர்.

எருசலேமின் வீழ்ச்சியின் போது நகர மக்கள் தொகையில் அதிக சதவீதம் அழிக்கப்பட்டு அடிமைப்படுத்தப்பட்டது.

லூக்கா 21:29-33
அன்றியும் அவர்களுக்கு ஒரு உவமையைச் சொன்னார்: அத்திமரத்தையும் மற்றெல்லா மரங்களையும் பாருங்கள். அவைகள் தளிர்க்கிறதை நீங்கள் காணும்போது வசந்தகாலம் சமீபமாயிற்றென்று அறிகிறீர்கள். அப்படியே இவைகள் சம்பவிக்கிறதை நீங்கள் காணும்போது, தேவனுடைய ராஜ்யம் சமீபமாயிற்றென்று அறியுங்கள். இவையெல்லாம் சம்பவிக்குமுன் இந்தச் சந்ததி ஒழிந்துபோகாதென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். வானமும் பூமியும் ஒழிந்துபோம், என் வார்த்தைகளோ ஒழிந்துபோவதில்லை. என்றார் !!

இங்கே இயேசு இஸ்ரவேல் தேசத்தின் அழிவைக் குறிக்க உவமைகளைப் பயன்படுத்துகிறார்.

பூமியிலுள்ள அனைவருக்கும் இரட்சிப்பு என்பதை தெளிவுபடுத்தினது. (29-31).

** கிறிஸ்துவின் வருகையின் சம்பவங்களையும், இரகசிய வருகை குறித்த விளக்கங்கள், அர்மெகதோன் யுத்தம், 1000 வருட அரசாளுகை குறித்த முழுமையான விளக்கங்களுக்கு பதில் எண் #320ஐ காணவும்.

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

*Q&A Book ஆர்டர் செய்ய* :
https://kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

வலைதளம் :
http://www.kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக