திங்கள், 20 ஏப்ரல், 2020

#884 - தத்துப்பிள்ளையை வளர்க்கலாமா வேதாகமம் அது பற்றி என்ன வழி காட்டியுள்ளது?

#884 - *தத்துப்பிள்ளையை வளர்க்கலாமா வேதாகமம் அது பற்றி என்ன வழி காட்டியுள்ளது?*

*பதில்*
திக்கற்ற பிள்ளைகளை விசாரிக்கிறது...பிதாவாகிய தேவனுக்குமுன்பாக மாசில்லாத சுத்தமான பக்தியாயிருக்கிறது.  – யாக். 1:27

திக்கற்ற பிள்ளைகளுக்கு தேவனே தகப்பனாக இருக்கிறார் என்கிறார் சங்கீதக்காரன் – சங். 68:5

திக்கற்ற பிள்ளையை விசாரிக்க வேண்டியது அவசியம் – ஏசா. 1:17

துரத்துண்ட திக்கற்ற பிள்ளையை சேர்த்துக்கொள்வது – தேவனுக்கு உகந்த உபவாசம் என்கிறார் ஏசாயா 58:7

உலக இரட்சகர் – யோசேப்பிற்கு தத்துப்பிள்ளை.
தன் சொந்த கருவால் உருவாகாத பிள்ளை என்று அறிந்தும் இயேசுவை வளர்த்தார் யோசேப்பு – மத். 1:19-20, லூக்கா 2:43

சுமார் 6லட்சம் புருஷர்கள் என்றால் ஏறத்தாழ 15 லட்சம் ஜனங்களை பெற்றெடுக்காத பிள்ளையைப்போல வழிநடத்தின மோசே – பார்வோனின் தத்துப்பிள்ளை. எண். 11:12, யாத். 12:37, யாத். 2:5-10

திக்கற்றவர்களுக்காக நாம் முன்னிற்க வேண்டும் – நீதி. 31:8

தேவன் அவர்களை ஆதரிக்கிறார் – சங். 146:9

இரட்சிக்கப்பட்டதாலே நீங்களும் நானும் – தேவனுக்கு தத்துப்பிள்ளைகள் !! எபே. 1:6, யோ. 1:12, ரோ. 8:15

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Book ஆர்டர் செய்ய* : https://kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் : https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

வலைதளம் : http://www.kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக