வெள்ளி, 3 ஏப்ரல், 2020

#843 - யோவான் ஸ்நானன் ஞானஸ்நானம் பெற்றதாக குறிப்பு ஏதேனும் உள்ளதா? இல்லையென்றால் அவர் எப்படி மற்றவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுக்க முடிந்தது?

#843 - *யோவான் ஸ்நானன் ஞானஸ்நானம் பெற்றதாக குறிப்பு ஏதேனும் உள்ளதா?* இல்லை என்றால் அவர் எப்படி மற்றவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுக்க முடிந்தது??

*பதில்*
யோவான் ஸ்நானன் ஞானஸ்நானம் எடுத்தாரா எடுக்கவில்லையா என்ற குறிப்பு வேதத்தில் எங்கும் சொல்லப்படவில்லை – உபா. 29:29, 1கொரி. 4:6

மோசேயின் நியாயப்பிரமாணத்தின் கீழ் யூதர்கள் பாரம்பரியமாக பல்வேறு சுத்திகரிப்பில் ஈடுபட்டிருந்தாலும், தண்ணீரில் மூழ்குவதன் மூலம் யூதர்களால் யெகோவா தேவனின் மீதான விசுவாசத்தின் அடையாளமாகவோ அல்லது யூத மார்க்கத்திற்குள் நுழைவதாகவோ நடைமுறையில் இருந்தது இல்லை.

ஆசாரியர்கள் பரிசுத்த ஸ்தலத்திற்குள் பிரவேசிக்கும் முன்னர் ஸ்நானப்பட்டு உள்ளே செல்லும் கட்டளை அவர்களுக்கு இருந்தது. லேவி. 16:23-24; 16:4-5

மனந்திரும்புதலுக்கென்று யோவான் - யூதர்களுக்கு ஞானஸ்நானம் கொடுக்க துவங்கினார்.

தேவனுடைய இந்த முறை உண்டாயிற்று என்று இயேசு கிறிஸ்து தெரிவிக்கிறார். மத். 21:24-27

*ஏன் யோவான் ஞானஸ்நானம் கொடுக்க துவங்கினார்*?
மேசியாவுக்கான தனது ஆயத்தபணிகளில் யோவான் "தண்ணீரில் ஞானஸ்நானம் கொடுக்க துவங்குகிறார்" (யோ. 1:31).

தண்ணீர் ஞானஸ்நானத்தைப் பற்றி கற்பித்த அல்லது நிர்வகித்த முதல் நபர் அவர். யோவானிடம் ஞானஸ்நானத்தைப் பெற்றவர்கள் தங்கள் பாவங்களை ஒப்புக்கொண்டார்கள் / அறிக்கையிட்டார்கள் - மத். 3:6.

அவர்கள் தாங்கள் செய்த பாவங்களைப் விட்டு மனந்திரும்பவும் (மாற்கு 1:4), தேவனுடைய இராஜ்ஜியத்திற்கான நல்ல செய்தியை நம்புங்கள் என்று பிரசங்கித்தார் (மாற்கு 1:15).

வரவிருக்கும் இயேசுவை நம்பும்படி யோவான் பிரசங்கித்தார் - அப். 19:4.

மோசேயின் நியாயப்பிரமாணத்தின் கீழ் ஒரு நபர் அதில் காணப்பட்ட சட்டங்களுக்குக் கட்டுப்பட்டிருந்தாலும், யோவானால் ஞானஸ்நானம் பெறுவது கர்த்தருக்கும் அவருடைய ராஜ்யத்திற்கும் உடன்படிக்கைக்கும் ஒரு நபரைத் தயார்படுத்தியது (லூக்கா 1:16-17).

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக