#842 - *பிள்ளைகள் யாருக்கு காணிக்கையை தொழுகையில் செலுத்துகிறார்கள்?*
*பதில்*
இந்த விதமான கேள்விகளை அதன் இயல்பான முடிவுக்கு கொண்டு சென்றால், ஒரு பிள்ளை ஜெபம் செய்வதும், பாடுவதும் அல்லது எந்த வகையிலும் தொழுகையில் பங்கேற்பதும் தவறானது என்ற ரீதியில் தீவிரமான சிந்தனையில் கொண்டு போய் விபரீத முடிவுகளில் ஜனங்களை கொண்டு சென்றுவிடும்.
ஏனெனில் தொழுகை என்பது கிறிஸ்தவர்களுக்கு.
கிறிஸ்தவர்களாக இல்லாத பெரியவர்கள் சபை தொழுகையில் போது ஜெபம் செய்வது, பாடுவது, கொடுப்பது, அல்லது எந்த வகையிலும் பங்கேற்பது போன்றவற்றையும் தடை செய்ய வேண்டும் என்று சொல்வதற்கும் நாம் இந்த கேள்வியை வளர்க்க ஏதுவாகும்.
நான் தொழுகையை அல்லது ஒரு பாடலை முன்னின்று வழிநடத்துவதைப் பற்றி பேசவில்லை, அந்த நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களுடன் பங்கேற்பதை குறித்தே சொல்கிறேன்.
பவுல் எபேசு சபைக்கு எழுதும்போது, "பிதாக்களே, நீங்களும் உங்கள் பிள்ளைகளைக் கோபப்படுத்தாமல், கர்த்தருக்கேற்ற சிட்சையிலும் போதனையிலும் அவர்களை வளர்ப்பீர்களாக." (எபேசியர் 6: 4) என்றார்.
அந்த பயிற்சியின் ஒரு பகுதி, குழந்தையின் நல்ல நடத்தைக்கான பழக்கத்தை வளர்ப்பது என்பது அவர்களின் வாழ்நாள் முழுவதும் நீடிக்கும் (நீதி 22:6).
தேவனைப் பின்பற்றுபவர் சுமக்கும் சில சிறிய சுமைகளை தானும் சுமக்க ஆரம்பிப்பதே அந்த பழக்கங்களில் சில.
எல்லாவற்றிற்கும் மேலாக, தொழுகையில் கலந்துகொள்வதற்கும் வேதாகம படிப்புகளுக்குச் செல்வதற்கும் நம் வாழ்வில் நேரம் ஒதுக்க வேண்டியுள்ளது.
குழந்தைகள் நம்முடன் வர வேண்டும் என்று வலியுறுத்துவதன் மூலம் இதன் முக்கியத்துவத்தை அவர்களுக்கு கற்பிக்கிறோம்.
எரேமியாவின் புலம்பலில் “தன் இளம்பிராயத்தில் நுகத்தைச் சுமக்கிறது மனுஷனுக்கு நல்லது. அவரே அதைத் தன்மேல் வைத்தாரென்று அவன் தனித்திருந்து மெளனமாயிருக்கக்கடவன்” என்றார் (புலம்பல் 3:27-28)
ஒரு முழு வளர்ந்த எருதுக்கு நுகத்தை அதன் மீது வைத்து பயிற்சி அளிக்க முடியாது. ஆகவே இளம் வயதிலிருந்தே பழக்கப்படுத்துவது அவசியம்.
ஆகவே, தேவனுடைய வார்த்தையைப் பற்றி சிந்திக்க, ஊழியத்தை தாங்கும் தாகத்தை நாம் எப்போது குழந்தைகளுக்கு கற்பிக்க ஆரம்பிக்கிறோம்?
அவர்கள் தங்கள் சிறு வயதிலிருந்தே கிறிஸ்து இயேசுவில் உள்ள விசுவாசத்தின் மூலம் இரட்சிப்புக்காக பயிலவேண்டும் (2 தீமோ 3:15, 1யோ 2:13)
தேவனைப் துதித்துப் பாடுவதை குழந்தைகளுக்கு எப்போது கற்பிக்க ஆரம்பிக்கிறோம்? ஜெபத்தில் தங்கள் தலையைக் தாழ்த்தும்படி அவர்கள் எப்போது கற்றுக்கொள்கிறார்கள்? குழந்தை பாடுவதும் அல்லது ஜெபிப்பதும் ஒரு முழுமையான அவசியமா? ஆனால் அவர்களுக்கு ஒரு வாழ்நாள் முழுவதும் நீடிக்கும் ஒரு பழக்கத்தை ஏற்படுத்த நாம் பழக்குகிறோமே !!!
எனவே, பிள்ளைகள் தனது பணத்தின் ஒரு பகுதியை சபைக்கு கொடுக்க முடிவு செய்தால் அதில் எந்த தவறும் இருக்க முடியுமோ?
பணம் எப்படியும் தன் தகப்பனின் சம்பாத்தியத்தில் இருந்து தான் கொடுக்கப்படுகிறது.
அந்த செயல் ஒரு பெற்றோருக்கு தன் பிள்ளையின் இருதயத்தில் தேவனைப் பற்றி சிந்திப்பதற்கும் தேவனுக்கு முதலிடம் கொடுப்பதற்கும் முக்கியத்துவத்தை கற்பிப்பதற்கான வாய்ப்பை வழங்குகிறது.
அவர்கள் வேலை செய்யத் தொடங்கி, தங்கள் சொந்தப் பணத்தை சம்பாதிக்கும்போது பின்னர் இப்படியான ஒரு முன்னுதாரணத்தை பின்பற்ற ஏதுவாயிருக்கிறது.
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html
வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com
YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக