#841 - *எரேமியா 7:32ல் சொல்லப்படும் தோப்பேத்தை குறித்த தீர்க்கதரிசனத்திற்கும்
தற்போது உள்ள COVID’19 கொரோனா கொள்ளை நோய்க்கும் சம்பந்தமுள்ளதா?*
இந்த தோப்பேத் என்ற இடம் இத்தாலியில் இருப்பதாகவும் – தீர்க்கதரிசனம்
இப்போது நிறைவேறிக்கொண்டிருக்கிறதென்றும் வலைதளங்களில் பரவலாக வைரலாகிக்கொண்டிருக்கிறது.
விளக்கவும்.
*பதில்*
தோப்பேத்
என்றால் சுடுகாடு என்று பொருள். அதாவது பிணங்களை எரிக்கும் ஸ்தலம்.
எருசலேமுக்கு
அருகிலுள்ள பள்ளத்தாக்குகளில் ஒன்றில்,
ஹின்னோம் பள்ளத்தாக்கில் (2இராஜ 23:10), அல்லது
எருசலேமின் மூன்று பள்ளத்தாக்குகளின் சந்திப்புக்கு அருகில் சில இடங்களைக்
குறிக்கும் நிச்சயமற்ற சொற்பிறப்பியல் சொல்.
அங்கேதான்
ஆகாப் மற்றும் மனாசேயின் கீழ் இருந்த யூதர்கள் மனித பலியின் சடங்குகளைச்
செய்தார்கள் (எரே 7:31-32).
பாகால், மோளேகு மற்றும் பிற
பிற தெய்வங்களுக்கு குழந்தைகளை பலி கொடுத்தனர்.
இது
யோசியாவின் காலத்தில் தன் மதசீர்திருத்தத்தின் ஒரு பகுதியாக தீட்டுப்படுத்தப்பட்டது.
கழிக்கப்பட்டவைகள் அழிக்கப்பட்ட ஒரு அருவருப்பான இடமாக இது உருவானதால் கெஹென்னாவின்
ஒத்த பெயரானது.
ஹின்னோம்
என்ற ஸ்தலத்தின் இருக்கும் ஓர் இடம் – 2இரா 23:10
மோளேகுக்காக
யூத பிள்ளைகை நெருப்பில் கிடக்க செய்த ஓர் இடம் – 2இரா 23:10, எரே 7:31-32,
19:6, 11-14, எரே 32:35, 2நாளா 33:6
தோப்பேத்தின்
கொடுமை – ஏசா 30:33
நாசரேத்
என்ற ஊர் நம் தமிழகத்திலும் இருப்பது போல தோப்பேத் என்று இத்தாலியில் இருக்கிறது –
மற்றபடி இந்த இரண்டு ஸ்தலத்திற்கு பூகோல ரீதியில் எந்த சம்பந்தமும் கிடையாது.
இந்த
தீர்க்கதரிசனம் ஏற்கனவே நிறைவேறினது. இக்காலத்தில் நமக்கு கிறிஸ்துவை நோக்கி மனந்திரும்பும்
எச்சரிப்பை கொடுக்கிறது. 1கொரி 10:11
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +918144776229
*கேள்வியும் வேதாக பதில்களும் வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்ய வேண்டிய லிங்க்: https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
Website : http://www.kaniyakulamcoc.wordpress.com
YouTube Channel : https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக