*பதில்*
ஜெபம்
என்பது – நம் தேவைகளை தேவனிடத்தில் தெரிவிப்பதற்காகவும், அவர் நமக்கு செய்த
நன்மைகளை முன்னிட்டு நன்றி சொல்லவும், அவரின் மகிமையை குறித்து அவரை துதிப்பதாகும் -
பிலி. 4:6
ஒரு
வேளை நீங்கள் மரித்தவரின் வாழ்க்கைக்காக நன்றி சொல்லவேண்டும் என்ற காரணத்தில் மரித்தவர்களின்
கல்லறைக்கு முன்பதாக நின்று ஜெபிக்கும் பட்சத்தில் – அந்த இடத்திற்கு ஒரு
முக்கியத்துவத்தை கொண்டு வந்து விட அதிக வாய்ப்பு உள்ளது. மேலும் அந்த பழக்கம் மற்றவர்களை
தவறான பாதையில் நடத்துவதற்கு நீங்கள் காரணமாகி விடுவீர்கள். அது விக்கிரக ஆராதனைக்கு
வழி வகுத்துவிடும். விக்கிரகத்தை குறித்தும் அதற்கு படைக்கப்பட்ட உணவைகுறித்தும் சொல்லப்பட்ட
இந்த வசனங்கள் இந்த சூழ்நிலைக்கு ஒப்பிடலாம் என்றே கருதுகிறேன் - 1கொரி. 8:7, 1கொரி. 8:10.
மற்றபடி
எந்த சூழ்நிலையிலும் எந்த காரணத்தை முன்னிட்டும் இறந்தவரின் ஆத்துமாவில் எந்த மாற்றமும்
(இரட்சிப்பும்) கிறிஸ்துவின் வருகையில் உங்களால் மாற்றமுடியாது !!
அவர்கள்
இனி நியாயத்தீர்ப்பிற்கு முன்பதாக நிற்க வேண்டியவர்கள். எபி. 9:27, 1கொரி. 4:5, 2கொரி. 5:10, 2தீமோ. 4:1, எபி. 6:2,
பிர. 11:9, பிர. 12:14
ஆகவே
கல்லறையில் நின்று ஜெபிப்பதை தவிர்ப்பது நல்லது – அதினால் எந்த பிரயோஜனமும் மரித்தோருக்கு
ஏற்படப்போவதில்லை.
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html
வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com
YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக