#828 - *ஈசாக்கை பலியிட சென்றபோது, ஆபிரகாம் தன் மனைவியாகிய சாராள் இடம் தேவன் கூறிய அனைத்தையும்
செல்லிவிட்டு சென்றாரா?* இல்லை எதையும் செல்லாமல் சென்றாரா?
*பதில்*
இதை
குறித்ததான “வெளிப்படையான” தகவலை நான் காணமுடியவில்லை என்றாலும் 2 வசனங்கள் நமக்கு
யூகத்தை தெளிவிக்கிறது என்றே தோன்றுகிறது.
ஆதி.
22:5 அப்பொழுது ஆபிரகாம் தன் வேலைக்காரரை நோக்கி: நீங்கள் கழுதையை நிறுத்தி இங்கே
காத்திருங்கள், *நானும் பிள்ளையாண்டானும்* அவ்விடமட்டும் போய், தொழுதுகொண்டு, உங்களிடத்துக்குத் *திரும்பி
வருவோம்* என்றான்.
எபி.
11:11 விசுவாசத்தினாலே *சாராளும்* வாக்குத்தத்தம்பண்ணினவர்
உண்மையுள்ளவரென்றெண்ணி,
கர்ப்பந்தரிக்கப் பெலனடைந்து, வயதுசென்றவளாயிருந்தும்
பிள்ளைபெற்றாள்.
1பேதுரு 3:6 அந்தப்படியே *சாராள் ஆபிரகாமை ஆண்டவன்* என்று சொல்லி, அவனுக்குக்
கீழ்ப்படிந்திருந்தாள்; நீங்கள் நன்மை செய்து ஒரு
ஆபத்துக்கும் பயப்படாதிருந்தீர்களானால் அவளுக்குப் பிள்ளைகளாயிருப்பீர்கள்.
ஆபிரகாமின்
விசுவாசமும் சாராளின் விசுவாசமும் எந்த கேள்வியையும் நமக்கு எழுப்பமுடியாததாக
இருக்கிறது !!!
சொல்லியிருந்தாலும்
– சொல்லாமல் போயிருந்தாலும் விசுவாசத்தில் இருவரும் சளைத்தவர்கள் அல்ல என்று இந்த
வசனங்கள் மூலம் நாம் அறிகிறோம்.
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +918144776229
*Q&A Biblical Whatsappல் இணைய (locked group)* :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
Website : http://www.kaniyakulamcoc.wordpress.com
----*----*----*----*----*-----

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக