புதன், 1 ஏப்ரல், 2020

#829 - தொழுகையில் வேதம் வாசிக்க தெரிந்த சிறுபிள்ளைகளுக்கு தடை செய்யலாமா?

#829 - *தொழுகையில் வேதம் வாசிக்க தெரிந்த சிறுபிள்ளைகளுக்கு தடை செய்யலாமா?*

*பதில்*
வேதத்தை வாசிக்க எப்போதும் யாரும் தடைசெய்வதற்கில்லை.

பிரசங்கிக்கிறவர்கள் ஒரு குறிப்பை சொல்லி சபையாரை வாசிக்க சொல்லும் போது மற்றவர்களை காட்டிலும் துரிதமாக பிள்ளைகள் எடுக்கும்படி ஊக்குவிப்பது நல்லது.

இயேசு தான் வளர்ந்த ஊரில் ஜெப ஆலயத்தில் அனைவருக்கும் முன்பு எழுந்து நின்று வாசிக்கும் பழக்கத்தை கொண்டிருந்திருக்கிறார் – லூக்கா 4:16

பிற்காலங்களில் அவர்களுக்கு இந்த பழக்கம் மிக பிரயோஜனமுள்ளதாக அமையும் – 2தீமோ. 1:5

பிள்ளைகளைக் கோபப்படுத்தாமல், கர்த்தருக்கேற்ற சிட்சையிலும் போதனையிலும் அவர்களை வளர்க்கவேண்டியது தகப்பனின் கடமை – எபே. 6:4

அவர்கள் சிறுவயதிலிருந்தே ஒழுக்கத்தை கற்றுக்கொள்ளும்படி நாம் வலியுறுத்த வேண்டிய அவசியம் உள்ளது.

2தீமோ 3:15 கிறிஸ்து இயேசுவைப்பற்றும் விசுவாசத்தினாலே உன்னை இரட்சிப்புக்கேற்ற ஞானமுள்ளவனாக்கத்தக்க பரிசுத்த வேத எழுத்துக்களை, நீ சிறுவயதுமுதல் அறிந்தவனென்றும் உனக்குத் தெரியும்.

1யோ. 2:13 ... பிள்ளைகளே, நீங்கள் பிதாவை அறிந்திருக்கிறதினால் உங்களுக்கு எழுதுகிறேன்.

ஆனால் தொழுகையில் முன்னின்று *சபையினரை வழிநடத்தும்படியாக* சிறுபிள்ளைகள் வேதம் வாசித்ததாக புதிய ஏற்பாட்டு தொழுகை முறையில் நான் காணவில்லை.

இரட்சிக்கப்பட்டவர்கள் கிறிஸ்துவின் சரீரத்தின் அங்கங்கள் – எபே. 5:30
சரீரத்தில் அங்கமில்லாதவர்கள் / சரீரத்தில் உரிமையில்லாதவர்கள் மற்ற உறுப்பினர்களை (அங்கங்களை) வழிநடத்தமுடியாது.

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் : https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

வலைதளம் : http://www.kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக