#827 - *பரதேசி என்றால் என்ன?*
*பதில்*
பரதேசி
என்றால்:
அந்நியர்
வெளிநாட்டவர்
ஒரு
தற்காலிக குடியிருப்பாளர்,
மரபுரிமை
பெற்ற உரிமைகள் இல்லாத ஒரு புதியவர்
ஆதி.
15:13, ஆதி.
23:4, யாத். 18:3
கிறிஸ்தவர்களாகிய
நாம் இந்த உலகத்திற்கு அந்நியரும் பரதேசிகளுமாயிருக்கிறோம்.
நாம்
பரலோகத்திற்கு சொந்தமானவர்கள். இந்த உலகம் நமக்குரியதல்ல. ஆகவே பயத்தோடு நடந்து கொள்ளவேண்டும்.
1பேதுரு
1:17 அன்றியும், பட்சபாதமில்லாமல் அவனவனுடைய கிரியைகளின்படி நியாயந்தீர்க்கிறவரை நீங்கள்
பிதாவாகத் தொழுதுகொண்டுவருகிறபடியால், இங்கே பரதேசிகளாய்ச்
சஞ்சரிக்குமளவும் பயத்துடனே நடந்துகொள்ளுங்கள்.
1பேதுரு
2:11-12 பிரியமானவர்களே,
அந்நியர்களும் பரதேசிகளுமாயிருக்கிற நீங்கள் ஆத்துமாவுக்கு
விரோதமாய்ப் போர்செய்கிற மாம்ச இச்சைகளை விட்டு விலகி, புறஜாதிகள்
உங்களை அக்கிரமக்காரரென்று விரோதமாய்ப் பேசும் விஷயத்தில், அவர்கள்
உங்கள் நற்கிரியைகளைக் கண்டு அவற்றினிமித்தம் சந்திப்பின் நாளிலே தேவனை
மகிமைப்படுத்தும்படி நீங்கள் அவர்களுக்குள்ளே நல்நடக்கையுள்ளவர்களாய்
நடந்துகொள்ளுங்கள் என்று உங்களுக்குப் புத்திசொல்லுகிறேன்.
எபி.
11:13-16 இவர்களெல்லாரும்,
வாக்குத்தத்தம்பண்ணப்பட்டவைகளை அடையாமல், தூரத்திலே
அவைகளைக் கண்டு, நம்பி அணைத்துக்கொண்டு, பூமியின்மேல் தங்களை அந்நியரும் பரதேசிகளும் என்று அறிக்கையிட்டு, விசுவாசத்தோடே மரித்தார்கள்.
இப்படி
அறிக்கையிடுகிறவர்கள் சுயதேசத்தை நாடிப்போகிறோம் என்று தெரியப்படுத்துகிறார்கள்.
தாங்கள்
விட்டுவந்த தேசத்தை நினைத்தார்களானால்,
அதற்குத் திரும்பிப்போவதற்கு அவர்களுக்குச் சமயங்கிடைத்திருக்குமே.
அதையல்ல, அதிலும் மேன்மையான
பரமதேசத்தையே விரும்பினார்கள்; ஆகையால் தேவன் அவர்களுடைய
தேவனென்னப்பட வெட்கப்படுகிறதில்லை; அவர்களுக்கு ஒரு நகரத்தை
ஆயத்தம்பண்ணினாரே.
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html
வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com
YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக