#820 - *தூதர்களின் ஊழியத்தை குறித்து அறிய ஆசைப்படுகிறேன்.
தேவ தூதர்களை நாம் காணமுடியுமா? நம் உதவிக்காக ஜெபத்தில் தேவ தூதர்களை
உதவிக்கு அழைக்கலாமா?* அது சரியா தவறா? i
want to know about ANGELIC MINISTRIES, is it easy to see angels? Calling
Angels in prayer for help, right or wrong practice?
*பதில்*
மனிதர்களாகிய
நாம் தேவ தூதர்களிலிருந்து சிறிய வித்தியாசத்தோடு மாத்திரமே தேவன் நம்மை படைத்திருக்கிறார்.
சங். 8:5, எபி. 2:7
தேவ
தூதனும் தேவனை தொழுதுகொண்டு அவர் வார்த்தையின் படி வாழும் ஊழியனிடத்திலும் வந்து
உன்னை போல தேவனை தொழுதுக்கொள்கிறவர்களும் உன்னைப்போலும் நானும் ஒன்று தான் என்று சொல்கிறார்
– வெளி. 19:10, வெளி. 22:9
தேவன்
சொல்வதை மாத்திரம் செய்து அவரையே எப்போதும் தொழுதுக்கொண்டிருப்பவர்கள் தேவ தூதர்கள்
– சங். 103:20, நெகே. 9:6, எபி. 1:6
மனிதனைக்காட்டிலும்
தேவனுடைய வல்லமையின்படி அவருடைய கிரியையை நிறைவேற்றுபவர்கள் என்றாலும் – தேவனுடைய
வார்த்தைக்கு மீறி எதையும் செய்ய மாட்டார்கள் – 1பேதுரு 3:22, 2பேதுரு 2:11
நம்
ஜெபமானது பரிசுத்த ஆவியானவரின் உதவியோடு கிறிஸ்துவின் மூலம் பிதாவாகிய தேவனை நோக்கி
ஏறெடுக்கப்படவேண்டும் – 1பேதுரு 2:5, 1பேதுரு 1:20, எபி. 7:25, 1கொரி. 8:6, ரோ. 1:8
ஒரு
போதும் தேவதூதர்களை நாம் அழைக்கவும் முடியாது அவர்களிடத்தில் ஜெபத்தை
ஏறெடுக்கும்படியான உதாரனமும் வேதத்தில் கிடையாது. தேவதூதர்களுக்கு ஆராதனை
செய்தவர்கள் வஞ்சிக்கப்படுகிறார்கள் மற்றும் பந்தைய பொருளை இழந்தும் போய்விடுவார்கள்
– கொலோ. 2:18-19
தேவதூதர்களை
மாத்திரம் அல்ல – இயேசுவின் தாயாகிய மரியாளையோ சூசையப்பரையோ ராயப்பரையோ நம்
முப்பாட்டன்களையோ முன்னோர்களையோ யாரையுமே நாம் ஜெபத்தில் உதவிக்கு கூப்பிடவும் முடியாது. அவர்கள் அனைவரும் இளைப்பாறிக்கொண்டிருப்பார்கள்.
நம்
நம்பிக்கையை கிறிஸ்துவின் மீது வைத்து அவருடைய கிருபாசனத்தண்டைக்கு தைரியமாக நம்
ஜெபத்தை ஏறெடுக்க அழைப்பு நமக்கு இருக்கிறது – எபி. 4:16
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +918144776229
*Q&A Biblical Whatsappல் இணைய (locked group)* :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
Website : http://www.kaniyakulamcoc.wordpress.com
----*----*----*----*----*-----
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக