வெள்ளி, 27 மார்ச், 2020

#818 - நம்முடைய தேவனை சாமி என்று சொல்லலாமா மற்றவர்களுக்கு சாமி என்று சொல்லிக்குடுக்கலாமா?

#818 - *நம்முடைய தேவனை சாமி என்று சொல்லலாமா மற்றவர்களுக்கு சாமி என்று சொல்லிக்குடுக்கலாமா?*

யோனா 1:6 அப்பொழுது மாலுமி அவனிடத்தில்வந்து: நீ நித்திரைபண்ணுகிறது என்ன? எழுந்திருந்து உன் தேவனை வேண்டிக்கொள். நாம் அழிந்து போகாதபடிக்குச் சுவாமி ஒருவேளை நம்மை நினைத்தருளுவார் என்றான்.

*பதில்*
சாமி என்ற தமிழ் சொல்லுக்கு கீழ்கண்டவாறு அர்த்தம் உள்ளது.
கந்தன்;  கடவுள்;  தலைவி;  பொன்; செல்வம் என்றும் பொருள்.

ஆதாரம் – தமிழ் இலக்கிய அகராதி, பதிப்பு 1957
எழுதி தொகுத்தவர் – சென்னை புதுக்கல்லூரி தமிழ்த்துறைத்தலைவர் பேராசிரியர் வித்துவான் பாலூர் கண்ணப்ப முதலியார் B.O.L

சாமி என்பது உயிரற்ற பொருளையும் குறிக்கும் சொல்.
கடவுள் என்பது – சரியான தமிழ் சொல்.
“தேவன்” என்று நம்முடைய வேதாகமத்தில் உள்ள வார்த்தையானது சமஸ்கிருத சொல்.

நாம் இப்படிப்பட்ட தேவன் என்ற வார்த்தையையே படித்தும் பார்த்தும் பழகிவிட்டதால் –

கடவுள் என்றால் சிலர் – இந்து தெய்வங்களை குறிப்பதாகவும்;
தேவன் என்றால் கிறிஸ்தவ கடவுளை குறிப்பதாகவும் நினைத்துக்கொள்கிறார்கள்.

கடவுள் என்றாலும் தேவன் என்றாலும் சூழ்நிலைக்கேற்ப உபயோகிப்பதில் தவறில்லை.

ஆனால் – சாமி என்பது ஜீவனுள்ள தேவனுக்கு உபயோகப்படுத்தமுடியாது !!

யோனா 1:6ல் தமிழ் வேதத்தில் சாமி என்று மொழி பெயர்த்தவர்கள் உபயோகப்படுத்தியிருந்தாலும் – மூல பாஷையான எபிரேய வேதத்தில் எலோஹீம் என்றே வருகிறது !!

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக