வெள்ளி, 27 மார்ச், 2020

#821 - ஆவியால் நொருக்கப்படுதலும் பரிசுத்த சிரிப்பும் உண்மையான வெளிப்பாடா?

#821 - *ஆவியால் நொருக்கப்படுதலும் பரிசுத்த சிரிப்பும் உண்மையான வெளிப்பாடா?*
 
1. slain in spirit
2.holy laughter
are they true manifestation ?
 
*பதில்*
ஆவியில் எளிமையுள்ளவர்கள் பாக்கியவான்கள் என்று மத். 5:3ல் பார்க்கிறோம்.
 
ஏசாயா 66:2ல்... சிறுமைப்பட்டு, ஆவியில் நொறுங்குண்டு, என் வசனத்துக்கு நடுங்குகிறவனையே நோக்கிப்பார்ப்பேன் என்றும் பார்க்கிறோம்.
 
*ஆவியில் எளிமையுள்ளவர்கள் என்ற* இந்த வசனத்தை வைத்து ஒரு பொிய இயக்கத்தின் ஜனங்கள் தங்கள் மீசையை கூட வழித்து விட்டு எளிமையாக இருக்கவேண்டும் என்று சொல்லிக்கொள்பவர்கள் உண்டு.
 
தன் தோளில் அல்லது கரங்களில் தோலால் ஆன பை இருந்தால் அது ஆடம்பரம் என்று சொல்லி துணியால் ஆன தொங்கல் பைகளை மாத்திரம் (ஜோல்னா பை என்று அதற்கு வழக்க சொல்) தன் தோளில் போட்டுக்கொண்டு ஊழியம் செய்கிறோம் என்று சொல்வார்கள்.
 
உண்மையில் ஆவியில் எளிமையுள்ளவர்கள் என்ற வசனத்திற்கு உண்மையான வார்த்தை *ஆவியில் ஏழ்மையுள்ளவர்கள்* என்பது.
 
ஆங்கிலத்தில் வாசிப்பவர்களுக்கு இலகுவாக புரியும். Blessed is the man who is poor in Spirit என்பதே.
 
ப்தோகோஸ் என்ற கிரேக்க வார்த்தைக்கு ஏழ்மை அல்லது பிச்சைகாரர் அல்லது அத்தியாவசியமாக தேவைக்காக அலைபவர் என்பது தமிழ் அர்த்தம்.
 
வசனத்தின்படி எந்த ஒரு மனிதன் தேவ வார்த்தையில் தான் குறைவு பட்டவன், இன்னும் தேவ வார்த்தையில் வளர வேண்டும், இன்னும் தேவ வார்த்தையில் தான் பூரணமடைய வேண்டும் என்று ஆர்வத்தோடு தான் இது வரை பெற்ற தேவ ஆவியின் அளவு குறைவாகவே இருக்கிறது என்று ஏங்கி ஏங்கி அதை தேடுகிறாரோ – அவர் நிச்சயம் வசனத்தின்படி வாழ்வார் என்பதில் சந்தேகமில்லை. அப்படிப்பட்டவர்களுடையது தான் பரலோகம் என்றார் நம் ஆண்டவர் !!
 
அது போல ஆவியில் நொறுங்குண்டு என்பது – முழுவதுமாக துவம்சம் செய்யப்பட்டு நைய புடைக்கப்பட்டு சீரழிக்கப்பட்ட ஒன்றை குறிக்கும் ஒரு எபிரேய வார்த்தையான “நாக்கே” என்று உபயோகப்படுகிறது.
 
மேடையில் நிற்பவர்கள் இப்படிப்பட்ட உணர்வுடன் தான் ஜெபிக்கிறார்களா அல்லது தங்களை தாழ்த்துகிறார்களா என்பதை பார்ப்பவர்களுக்கே வெளிச்சம்... கண்ணீர் விடுவதும் கதறுவதும் ஒலிபெருக்கியில் மாத்திரம் இல்லாமல் உண்மையாக இருத்தல் அவசியம். மேலும் கதறுவதும் கண்ணீர் விடுவதும் போதாது – நொறுங்குண்டு என்பதன் பொருள் – கீழ்படிய வேண்டும் என்பதே.
 
ஏசா. 66:5; எஸ்றா 9:4, 10:3; சங். 119:120, 119:161; நீதி. 28:14; ஆப. 3:16; அப். 9:6; 16:29-30; பிலி. 2:12
 
சகோதரன் என்று அழைக்கப்படவேண்டும் என்ற சிறிய அடிப்படை கட்டளையை கூட கீழ்படிய மனமில்லாமல் கவுரத்திற்காகவும் மதிப்பிற்காகவும் பட்டங்களையும் பதவிகளையும் போட்டுக்கொள்ளும் மேடை மந்திரவாதிகளிடத்தில்;
 
சத்தியத்தையும் தேவ வார்த்தையையும்  தேடினால் - அவர்கள் தங்கள் ஒலிபெருக்கியில் “*ஆவியின் சிரிப்பு*” என்று தங்களோடு நின்றுவிடாமல் மற்றவர்களையும் நரகத்திற்கு நேராக கொண்டு சேர்ப்பார்கள்.
 
நாம் பயத்தோடும் நடுக்கத்தோடும் தேவனை தொழுதுகொள்வோம்.
 
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Book ஆர்டர் செய்ய* :
https://kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

வலைதளம் :
http://www.kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக