#787 - *கர்த்தருடைய பந்தியில் திராட்சை பழ ரசம் தான் உபயோகப்படுத்த வேண்டுமா? பெப்சி
அல்லது ஆரஞ்சு பழ ரசம் உபயோகப்படுத்தகூடாதா?*
*பதில்*
அவருடைய
மரணத்தை நாம் நினைவில் கொள்ள இயேசு கிறிஸ்து இரண்டு விஷயங்களைத் தேர்ந்தெடுத்தார்.
ஒன்று
புளிப்பில்லாத அப்பம் மற்றொன்று திராட்சை ரசம்.
மத்.
26:26-29 அவர்கள் போஜனம்பண்ணுகையில்,
இயேசு *அப்பத்தை* எடுத்து, ஆசீர்வதித்து,
அதைப் பிட்டு, சீஷர்களுக்குக் கொடுத்து:
நீங்கள் வாங்கிப் புசியுங்கள், இது என்னுடைய
சரீரமாயிருக்கிறது என்றார். பின்பு, *பாத்திரத்தையும்*
எடுத்து, ஸ்தோத்திரம்பண்ணி, அவர்களுக்குக்
கொடுத்து: நீங்கள் எல்லாரும் இதிலே பானம்பண்ணுங்கள்; இது
பாவமன்னிப்புண்டாகும்படி அநேகருக்காகச் *சிந்தப்படுகிற* புது
உடன்படிக்கைக்குரிய *என்னுடைய இரத்தமாயிருக்கிறது*. இதுமுதல் *இந்தத்
திராட்சப்பழரசத்தை* நவமானதாய் உங்களோடுகூட என் பிதாவின் ராஜ்யத்திலே நான்
பானம்பண்ணும் நாள்வரைக்கும் இதைப் பானம்பண்ணுவதில்லையென்று உங்களுக்குச்
சொல்லுகிறேன் என்றார்.
கிறிஸ்துவானவர்
தன் இரத்தம் சிந்தப்பட்டதன் நினைவாக பந்தியில் *பயன்படுத்தியது – திராட்சைபழரசம்*.
மாற்கு 14:25; லூக்கா 22:15-18
ஆசாரியனான
மெல்கிசேதேக் அப்பமும் திராட்சைபழரசத்தை வைத்து ஆசீர்வதித்தார் என்று வாசிக்கிறோம்
– ஆதி. 14:18
இயேசு
கிறிஸ்துவின் புதிய உடன்படிக்கையானது இரத்தம் சிந்தப்பட்டு ஏற்படுத்தப்பட்டது. 1காொி.
11:25
தன்
இரத்தத்திற்கு அடையாளமாக திராட்சைபழரசத்தை கிறிஸ்து முன்வைத்தார் – மத். 26:28-29
ஆகவே,
திராட்சைபழரசத்தை
கர்த்தருடைய பந்தியில் உபயோகப்படுத்த வேண்டும்.
வேறு
எந்த பழரசத்தையும் உபயோகப்படுத்தினதாக வேதத்தில் ஆதாரம் இல்லை.
பெப்சி, கொக்க கோலா போன்ற
பானங்களையோ வேறு எந்த பானத்தையோ உபயோகிக்க அவரவர் வீடுகள் உள்ளது. கர்த்தருடைய
பந்தியில் அதை உபயோகப்படுத்தவது மிகவும் வன்மையாக கண்டிக்கப்படதக்கது !! அப்படி உபயோகப்படுத்துகிறவர்கள்
கிறிஸ்துவின் இரத்தத்தை குறித்தும் வேதாகம கட்டளைகளையும் உதாசீனம் செய்பவர்கள்.
அறியாமல் உபயோகித்தால் – இந்த பதிவானது அவர்கள் செயல்களை மாற்றும் என்று நம்புகிறேன்.
இந்த
கேள்வியை கண்டதும் மிகுந்த வேதனையடைந்ததால் வரிசையில் காத்து இருக்கும் மற்ற
கேள்விகளை பின்தள்ளி இந்த பதிலை உடனடியாக எழுதுகிறேன்.
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html
வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com
YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக