#745 - *மதுபானத்தை பற்றி வேதாகமம் சொல்வது என்ன? குறிப்பாக நீதி 31:6,7 விளக்கம்
என்ன?*
*பதில்*
நீங்கள்
குறிப்பிடும் வசனம்:
நீதி.
31:6
மடிந்துபோகிறவனுக்கு *மதுபானத்தையும்*, மனங்கசந்தவர்களுக்குத்
*திராட்சரசத்தையும்* கொடுங்கள்;
நீதி.
31:7 அவன்
குடித்துத் தன் குறைவை மறந்து,
தன் வருத்தத்தை அப்புறம் நினையாதிருக்கட்டும்.
மதுபானம்
– எரியூட்டப்பட்ட புளிக்க
வைக்கப்பட்ட போதை ஏறக்கூடிய சாராயம்.
திராட்சை
ரசம் –
சரீரத்திற்கு புத்துணர்ச்சியை தரக்கூடிய, வயிற்று
உபாதைகளுக்கும் சரீர பெலவீனத்தை போக்கும் மருந்தாகும் பண்டைய காலங்களில் உபயோகப்படுத்தப்பட்டது
– சங். 104:15, 1தீமோ. 5:23
வீணாக
போகிறவனுக்கு –
அல்லது மடிந்து போக விரும்புபவன் மது பானம் எடுத்து கொள்கிறான் என்று நீதி. 31:6 சொல்கிறது.
திராட்சையை
அறிந்து புரிந்து கொண்டவனோ –
மதுவாக்கப்பட்டதையல்ல, அதற்கு
முன்பதாகவே அதன் பலனை பெற்றுக்கொள்கிறான் என்பது 2வது பகுதி (மனங்கசந்தவர்கள் – உற்சாகப்படும்படி !)
வார்த்தைகளை
கவனிக்காமல் - *மது அருந்துவதை விரும்பும்* ஜனங்கள் இந்த சந்தர்ப்பத்தை
பயன்படுத்திக்கொள்கிறார்கள் !!
உண்மையில்
நாம் கவனிக்கவேண்டியது என்னவென்றால்:
ஆதி
காலங்களில் – மருந்து மாத்திரைகளாக தயாரிக்கப்படவில்லை.
இலையை
அரைத்தோ, தேவையான க்ஷாயங்களை தயாரித்தோ, எண்ணையை
காய்ச்சியோ, வடியும் பிசினை மருந்தாகவோ உபயோகித்து மருத்துவம்
செய்தார்கள். எரே. 30:13, எரே. 8:22, ஏசா. 1:6
திராட்சை
ரசம் – வயிற்று வலிக்கு நிவாரணி (1 தீமோ. 5:23)
முகத்தில்
ஒலிவ எண்ணை தடவிக்கொள்வது – பிரகாசத்தை கொடுக்கும் – சங். 104:15
ஆனால்
புளிக்கவைக்கப்பட்ட திராட்சை ரசம் எடுத்துக்கொள்வது துளியளவும் வேதத்திற்கு முரணானது.
அதை சபையிலேயே அதுவும் கர்த்தருடைய பந்தி என்கிற பெயரில் உபயோகப்படுத்துவது
எவ்வளவு பொிய அயேக்கியத்தனம் / துணிகரம் என்பது அவர்கள் முற்றிலும் 100-100 தவறான
போதனையில் இருப்பவர்கள் என்று தெள்ளத்தெளிவாக நாம் புரிந்து கொள்வதற்கு கீழே உள்ள
வசனமே சாட்சி :
லேவி.
10:9
நீயும் உன்னோடேகூட உன் குமாரரும் சாகாதிருக்கவேண்டுமானால், ஆசரிப்புக் கூடாரத்துக்குள் பிரவேசிக்கிறபோது, திராட்சரசத்தையும் மதுவையும் குடிக்கவேண்டாம்.
நீதி.
31:4-6 திராட்சரசம் குடிப்பது ராஜாக்களுக்குத் தகுதியல்ல; லேமுவேலே, அது ராஜாக்களுக்குத் தகுதியல்ல;
மதுபானம் பிரபுக்களுக்குத் தகுதியல்ல. மதுபானம்பண்ணினால் அவர்கள்
நியாயப்பிரமாணத்தை மறந்து, சிறுமைப்படுகிறவர்களுடைய
நியாயத்தையும் புரட்டுவார்கள். மடிந்துபோகிறவனுக்கு மதுபானத்தையும், மனங்கசந்தவர்களுக்குத் திராட்சரசத்தையும் கொடுங்கள்;
எசே.
44:21
ஆசாரியர்களில் ஒருவனும், உட்பிராகாரத்துக்குள் பிரவேசிக்கும்போது,
திராட்சரசம் குடிக்கலாகாது.
எபே.
5:18-21 துன்மார்க்கத்திற்கு ஏதுவான மதுபான வெறிகொள்ளாமல், ஆவியினால் நிறைந்து; சங்கீதங்களினாலும் கீர்த்தனைகளினாலும் ஞானப்பாட்டுகளினாலும்
ஒருவருக்கொருவர் புத்திசொல்லிக்கொண்டு, உங்கள்
இருதயத்தில் கர்த்தரைப் பாடிக் கீர்த்தனம்பண்ணி, நம்முடைய
கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே எப்பொழுதும் எல்லாவற்றிற்காகவும்
பிதாவாகிய தேவனை ஸ்தோத்திரித்து, *தெய்வபயத்தோடே
ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்திருங்கள்*.
தீத்து
1:7-9
ஏனெனில், கண்காணியானவன் தேவனுடைய
உக்கிராணக்காரனுக்கேற்றவிதமாய், குற்றஞ்சாட்டப்படாதவனும்,
தன் இஷ்டப்படி செய்யாதவனும், முற்கோபமில்லாதவனும்,
மதுபானப்பிரியமில்லாதவனும், அடியாதவனும்,
இழிவான ஆதாயத்தை இச்சியாதவனும், அந்நியரை
உபசரிக்கிறவனும், நல்லோர்மேல் பிரியமுள்ளவனும், தெளிந்த புத்தியுள்ளவனும், நீதிமானும்,
பரிசுத்தவானும், இச்சையடக்கமுள்ளவனும்,
ஆரோக்கியமான உபதேசத்தினாலே புத்திசொல்லவும், எதிர்பேசுகிறவர்களைக் கண்டனம்பண்ணவும் வல்லவனுமாயிருக்கும்படி, தான் போதிக்கப்பட்டதற்கேற்ற உண்மையான வசனத்தை நன்றாய்ப்
பற்றிக்கொள்ளுகிறவனுமாயிருக்கவேண்டும்.
தீத்து
2:3-5
முதிர்வயதுள்ள ஸ்திரீகளும் அப்படியே பரிசுத்தத்துக்கேற்றவிதமாய் நடக்கிறவர்களும்,
அவதூறு பண்ணாதவர்களும், மதுபானத்துக்கு
அடிமைப்படாதவர்களுமாயிருக்கவும், தேவவசனம்
தூஷிக்கப்படாதபடிக்கு பாலிய ஸ்திரீகள் தங்கள் புருஷரிடத்திலும், தங்கள் பிள்ளைகளிடத்திலும் அன்புள்ளவர்களும், தெளிந்த
புத்தியுள்ளவர்களும், கற்புள்ளவர்களும், வீட்டில் தரித்திருக்கிறவர்களும், நல்லவர்களும்,
தங்கள் புருஷருக்குக் கீழ்ப்படிகிறவர்களுமாயிருக்கும்படி,
அவர்களுக்குப் படிப்பிக்கத்தக்க நற்காரியங்களைப்
போதிக்கிறவர்களுமாயிருக்கவும் முதிர்வயதுள்ள ஸ்திரீகளுக்குப் புத்திசொல்லு.
1தீமோ. 3:3-4 அவன் மதுபானப்பிரியனும், அடிக்கிறவனும், இழிவான ஆதாயத்தை
இச்சிக்கிறவனுமாயிராமல், பொறுமையுள்ளவனும், சண்டைபண்ணாதவனும், பண ஆசையில்லாதவனுமாயிருந்து,
தன் சொந்தக் குடும்பத்தை நன்றாய் நடத்துகிறவனும், தன் பிள்ளைகளைச் சகல நல்லொழுக்கமுள்ளவர்களாகக் கீழ்ப்படியப்பண்ணுகிறவனுமாயிருக்கவேண்டும்.
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html
வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com
YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக