வியாழன், 30 ஜனவரி, 2020

#739 - குஷ்டதோஷத்தை தேவனே வரப்பண்ணினால்...??

#739 - *எகிப்து தேசத்திலிருந்து கானானுக்கு அனழத்துச் சென்றதே சந்தோஷமாய் அவா்கள் வாழத்தான் ஆனால் லேவி. 14:34 வசனம் அவா்களுக்கு குஷ்டரோகத்னத வரப்பண்ணினால் என்று சொல்லப்படுவது தீங்கைக் குறிக்கிறதே?*

லேவி. 14:34  - நான் உங்களுக்கு காணியாட்சியாகக் கொடுக்கும் கானான் தேசத்திலே நீங்கள் போய்ச் சோ்ந்தபின்பு, உங்கள் காணியாட்சியான தேசத்தில் ஒரு வீட்டிலே குஷ்டதோஷத்தை நான் வரப்பண்ணினால்...

*பதில்*
இஸ்ரவேலரின் கூக்குரலையும், கண்ணீரையும், படுகிற வேதனையையும் தேவன் கேட்டு அவர்களை அடிமைதனத்திலிருந்து விடுவித்தார் யாத் 3:7

அவர்கள் பட்ட சகல கஷ்டங்களுக்கு ஈடாக சகல ஆசீர்வாதத்தோடும் சம்பத்தோடும் பொருளோடும் அவர்களை அந்நாட்டை விட்டு வெளியே கொண்டு வந்தார் யாத் 3:22, யாத் 12:33-36

அந்த நாட்டை கடக்கும் போதும் இந்த ஜனங்களை கொலை செய்ய எகிப்து நாட்டு படை வீரர்கள் துரத்தின போது சமுத்திரத்தையே பிளந்து மறுபக்கம் இஸ்ரவேலரை கடந்து போக செய்து எகிப்து படையினதை கடலுக்கு அடியில் முழ்கடித்து காப்பாற்றினார் யாத் 14:5-30.

தேவ சித்தத்திற்கு எதிராய் வந்த அந்த அத்தனை எகிப்தியரும் கடல் கரையிலே செத்து விழுந்ததை தங்கள் சொந்த கண்களால் பார்த்தார்கள் யாத் 14:30

இப்படி அற்புதமாகவும் அதிசயமாகவும் நடத்தி அவர்களை தேவன் அடிமைத்தனத்திலிருந்து வெளியே கொண்டு வந்தார்.

ஒரு தேசத்திற்கு உருவாகுவதால் அந்த தேசத்தின் சட்ட ஒழுங்குகளை சட்டமாக்கும் வண்ணம் சட்டங்களை உருவாக்கி  இஸ்ரவேல் ஜனங்களால் கானான் தேசத்தில் குடியேறுகிற போது எப்படி நடக்க வேண்டும், எப்படி ஒருவருக்கொருவர் பழகவேண்டும், எப்படி தேவனை தொழுது கொள்ள வேண்டும் என்று சகல விதிமுறையையும் அந்த புதிய தேசத்திற்கு தேவனே கொடுத்தார்.

சட்டம் ஒழுங்கு என்று வரும்போது நன்மை எப்படி செய்ய வேண்டும், எவை எல்லாம் தீமை, தீமை செய்தவர் எப்படி தண்டிக்க பட வேண்டும் என்ற சகல சட்டமும் இயற்றப்பட்டு ஒப்படைக்கப்பட்டது.

இஸ்ரவேல் தேசத்திற்கு
முதல் பகுதியாக (10) பத்து பிரதான கட்டளைகள் உபா 5:6-21
இரண்டாம் பகுதியாக (603) உபகட்டளைகள் - உபா 4:44லிருந்து உபா 28:68 வரை.

உபாகமம் புத்தகத்தில் முழுமையாக இதை கவனிக்க முடியும்.  

குறிப்பாக சட்டம், அல்லது இஸ்ரேல் வாழ வேண்டிய கொள்கைகள் மற்றும் விதிகளை உள்ளடக்குகிறது.

மோசேயின் இந்த உறையாடல் மூன்று பகுதிகளைக் கொண்டுள்ளது:

முதல் பகுதியில், மோசே பத்து கட்டளைகளை விளக்குகிறார் (உபா 5: 1-11: 33).

இரண்டாவது பகுதியில், இஸ்ரேல் பின்பற்ற வேண்டிய “சட்டங்களும் கட்டளைகளும்” பற்றி விரிவாக விவரிக்கிறார் (உபா. 12: 1-26: 19).

மூன்றாம் பாகத்தில், உடன்படிக்கையை கடைப்பிடித்தால் இஸ்ரேல் அனுபவிக்கும் ஆசீர்வாதங்களையும், அவ்வாறு செய்யாவிட்டால் அவற்றை அழிக்கும் சாபங்களையும் மோசே விவரிக்கிறார் (உபா. 27: 1-28: 68).

இரண்டாவதாக ஆளும் கொள்கைகளை (உபா. 5: 1-11: 32), பின்னர் குறிப்பிட்ட விதிகளை (உபா. 12: 1-26: 19), பின்னர் கீழ்ப்படிதலுக்கான விளைவுகளை அல்லது கீழ்ப்படியாமை (உபா. 27: 1-28: 68) விளக்குகிறார்.

அதன் சுருக்கமான சாராம்சத்தை தலைப்புகளாக கீழே பட்டியலிடுகிறேன்.

1-தேவனுடைய உடன்படிக்கைக்கு கீழ்ப்படியும் போது கிடைக்கும் ஆசீர்வாதம் (உபாகமம் 7: 12-15; 28: 2-12)

2-செழிப்பின் ஆபத்துகள் (உபாகமம் 8: 11-20)

3-தாராளமாக உதவுதல் மற்றும் அதனால் வரும் தேவ ஆசீர்வாதம் (உபாகமம் 15: 7-11)

4-அடிமைத்தனம் (உபாகமம் 15: 12-18)

5-லஞ்சம் மற்றும் ஊழல் (உபாகமம் 16: 18-20)

6-சட்டத்தின் கட்டளைக்கு கீழ்ப்படிதல் (உபாகமம் 17: 8-13)

7-அதிகாரத்தை நியாயமாகப் பயன்படுத்துதல் (உபாகமம் 17: 14-20)

8-பொதுவான நன்மைக்கா தங்கள் சம்பாத்தியத்தை பயன்படுத்துதல் (உபாகமம் 23: 1-24: 13)

9-பொருளாதார நீதி (உபாகமம் 24: 14-15; 25:19; 27: 17-25)

தேவன் அவர்களை ஆசீர்வதிக்கவே புதிய தேசத்தை கொடுத்தார். அந்த தேசத்தில் அவர்கள் சட்டங்களை மீறும் போது தேவனே தண்டிக்கிறார். அந்த பகுதியில் ஒன்று தான் நீங்கள் கேட்ட கேள்வியின் வசன பகுதி.

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/DdQM79dFf5v6GQMRfbDc2H

*Q&A Book ஆர்டர் செய்ய* :
https://kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

வலைதளம் :
http://www.kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக