புதன், 29 ஜனவரி, 2020

#737 - என் பிதாவின் வீட்டில் அநேக வாசஸ்தலங்கள் உள்ளது என்பதன் விளக்கம் என்ன?

#737 - *என் பிதாவின் வீட்டில் அநேக வாசஸ்தலங்கள் உள்ளது என்பதன் விளக்கம் என்ன?* அதே போல் வெளிபடுத்தல் வீசேஷத்தில் பரலோகத்தில் நான்கு தலை ஒரு உடல் எதை குறிக்கிறது?

*பதில்*
இயேசு தம்முடைய சீஷர்களுடன் தான் புறப்படும் வேளை வந்தது என்று கூறினார் -  யோ. 13:33

அப்போது சீஷர்கள் அவருடன் கூடவே செல்ல விரும்பினார்கள். யோ. 13:36

இயேசு கிறிஸ்துவோ – தன் சீஷரை பார்த்து நீங்கள் இப்போது அல்ல - சிறிது காலம் இருக்க வேண்டும் பின்னர் என்னோடு வருவீர்கள் என்று சொன்னார். யோ. 13:36

இப்போதே வரவேண்டிய அவசியமில்லை – உங்களுக்கான இடம் எப்போதும் இருக்கும் என்று அவர்களுக்கு தெளிவுபடுத்தவே இந்த வாக்கியம் ... அநேக வாசஸ்தலங்கள் உண்டு – ஒரு அவசரமும்  இல்லை என்றார் – யோ. 14:2-3

2)
நீங்கள் குறிப்பிடுவது வெளி 4:6ல் உள்ள வசனத்தின் வருவது என்று கருதி எழுதுகிறேன்.

வெளிபடுத்தல் புத்தகம் சுமார் 99 சதவீதம் குறிகளால் எழுதப்பட்டவை. வெளி. 1:1

அவைகளை வெளிப்படுத்தி உணர/புரிந்து கொள்ளல் அவசியம்.

நான்கு உயிரினங்களை குறித்து - இங்கே மூன்று சாத்தியமான விளக்கங்கள் உள்ளன

அ)
நான்காம் எண் பூமியைக் குறிக்கும்.
ஆகவே இந்த உயிரினங்கள் பூமியின் முழு மக்களையும் குறிக்கலாம்.

)
இந்த நான்கு உயிரினங்களும் பிரதான தூதர்களாக இருக்கலாம்.

மிகாவேல் மற்றும் காப்ரியல் ஆகியோரை பெயரால் அறிவோம். அவர்களில் நான்கு பேர் இருப்பதாக வேத வல்லுநர் கருதுகிறார்கள்.

அல்லது
)
நான்கு உயிரினங்களும் உலகத்தில் உள்ள அனைத்து உயிரினங்களையும் குறிப்பதாக இருக்கலாம்.

*மற்றுமொறு கருத்து*:
அந்த நான்கு உயிருள்ள "உயிரினங்கள்" தேவனின் பண்புகளை பிரதிபலிக்கும் தேவதூதர்கள் என்று தெரிகிறது.

அவை ஒரு உள் வட்டத்தை உருவாக்கி சிங்காசனத்தையும் தேவனையும் சூழ்ந்து கொள்கின்றன (எசே. 1:12). அவை சேராஃபிம் (ஏசா. 6:2) மற்றும் அதிகமான கேருபீம்களைப் போலவே தோன்றுகின்றன (எசே. 1: 4-14; 9:3;10).

ஆனால் வேறுபாடுகள் காரணமாக அவை தாங்களாகவே ஒரு வகுப்பில் இருப்பதாகத் தெரிகிறது.

அவை நீதியை செயல்படுத்தும் கருவிளாக செயல்படுவதாக தோன்றுகிறது (வெளி. 6:1, 3, 5, 7, 9-11; வெளி. 15:7).

அவர்களின் பல கண்கள் அவர்களின் ஊடுருவக்கூடிய புத்திசாலித்தனத்தை அடையாளப்படுத்துகின்றன. அதாவது நீதிக்கு விரோதமாக என்ன நடந்தாலும் உடனடியாக அறிந்துகொள்ள வைக்கிறது (எசே. 1:18; 10:12) என்று சொல்லப்படுகிறது.

எப்படியாயினும் வெளிபடுத்தல் புத்தகத்தை யாராலும் துல்லியமாக எல்லாவற்றையும் வெளிபடுத்த இயலாது.

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

*Q&A Book ஆர்டர் செய்ய* :
https://kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

வலைதளம் :
http://www.kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக