#736 - *தாவீது நடனம் ஆடினார் என்று சொல்லி சபையில் தொழுகைளில் நடனம் ஆடலாமா?*
*பதில்*
தாவீது
நடனம் ஆடினது – ஆலயத்தில் அல்ல.
அவர்
தெருவில் ஆடினார் – 2சாமு. 6:14-16
ஆலயத்திலோ
– பயத்துடனே கர்த்தரை சேவியுங்கள் நடுக்கத்துடனே களிகூருங்கள் என்று சங். 2:11 சொல்கிறது.
ஆராதனையில் (தொழுகையில்) கீழ்கண்டவாறு நாம் இருத்தல்
அவசியம்:
ஏசா. 66:2 என்னுடைய கரம் இவைகளையெல்லாம் சிருஷ்டித்ததினால்
இவைகளெல்லாம் உண்டாயின என்று கர்த்தர் சொல்லுகிறார்; ஆனாலும்
சிறுமைப்பட்டு, ஆவியில் நொறுங்குண்டு, என்
வசனத்துக்கு நடுங்குகிறவனையே நோக்கிப்பார்ப்பேன்.
எஸ்றா 9:4 அப்பொழுது சிறையிருப்பிலிருந்து வந்தவர்களுடைய
குற்றத்தினிமித்தம் இஸ்ரவேலுடைய தேவனின் வார்த்தைகளுக்கு நடுங்குகிற யாவரும்
என்னோடே கூடிக்கொண்டார்கள்; நானோ அந்திப்பலி
செலுத்தப்படுமட்டும் திகைத்தவனாய் உட்கார்ந்துகொண்டிருந்தேன்.
1பேதுரு 1:17 அன்றியும், பட்சபாதமில்லாமல் அவனவனுடைய கிரியைகளின்படி
நியாயந்தீர்க்கிறவரை நீங்கள் பிதாவாகத் தொழுதுகொண்டுவருகிறபடியால், இங்கே பரதேசிகளாய்ச் சஞ்சரிக்குமளவும் பயத்துடனே நடந்துகொள்ளுங்கள்.
2கொரி.
7:1 இப்படிப்பட்ட வாக்குத்தத்தங்கள் நமக்கு உண்டாயிருக்கிறபடியினால், பிரியமானவர்களே, மாம்சத்திலும் ஆவியிலும் உண்டான
எல்லா அசுசியும் நீங்க, நம்மைச் சுத்திகரித்துக்கொண்டு,
பரிசுத்தமாகுதலை தேவபயத்தோடே பூரணப்படுத்தக்கடவோம்.
பிலி. 2:12 ஆதலால், எனக்குப்
பிரியமானவர்களே, நீங்கள் எப்பொழுதும் கீழ்ப்படிகிறபடியே,
நான் உங்களுக்குச் சமீபமாயிருக்கும்பொழுது மாத்திரமல்ல, நான் தூரமாயிருக்கிற இப்பொழுதும், அதிக பயத்தோடும்
நடுக்கத்தோடும் உங்கள் இரட்சிப்பு நிறைவேறப் பிரயாசப்படுங்கள்.
எபி. 4:1 ஆனபடியினாலே, அவருடைய
இளைப்பாறுதலில் பிரவேசிப்பதற்கேதுவான வாக்குத்தத்தம் நமக்குண்டாயிருக்க, உங்களில் ஒருவனும் அதை அடையாமல் பின்வாங்கிப்போனவனாகக் காணப்படாதபடிக்குப்
பயந்திருக்கக்கடவோம்.
எபி. 12:28 ஆதலால், அசைவில்லாத ராஜ்யத்தைப்
பெறுகிறவர்களாகிய நாம் பயத்தோடும் பக்தியோடும் தேவனுக்குப் பிரியமாய் ஆராதனை
செய்யும்படி கிருபையைப் பற்றிக்கொள்ளக்கடவோம்.
சங். 2:11 பயத்துடனே கர்த்தரைச் சேவியுங்கள், நடுக்கத்துடனே களிகூருங்கள்.
சங். 89:7 தேவன் பரிசுத்தவான்களுடைய ஆலோசனைச் சபையில் மிகவும்
பயப்படத்தக்கவர், தம்மைச் சூழ்ந்திருக்கிற அனைவராலும்
அஞ்சப்படத்தக்கவர்.
சங். 99:1 கர்த்தர் ராஜரிகம்பண்ணுகிறார், ஜனங்கள்
தத்தளிப்பார்களாக; அவர் கேருபீன்களின் மத்தியில்
வீற்றிருக்கிறார், பூமி அசைவதாக.
*** இப்படி இன்னும் ஏராளமான வசனம் !!!
கையை தூக்கவும், டான்ஸ் ஆடவும்,
ஆர்ப்பரிக்கவும், ஊளையிடுவதும், கத்துவதும்,
கதறுவதும், உருளுவதற்கும் – தேவனுடைய தொழுகை கூடுகையில்
இடமில்லை...
ஒரு
சாதாரண அரசாங்க அலுவலகம் போய் கொஞ்சம் சப்தமாக பேசி பாருங்கள் – அமைதலாக பேசுங்கள்
என்பார் அலுவலர். கீழ்படியவில்லை என்றால் போலீஸ் வரும் !!
ஆண்டு
விழாவில் மேடையில் ஆடும் போது முதலாளி கீழே உட்கார்ந்து நம்மை உற்சாக படுத்துவார்.
அவர் அன்று சந்தோஷப்பட்டார் என்று நாம் அவர் அலுவலகத்திற்குள்ளாக போய் நடனம் ஆடினால்
என்ன கதியாகும் ??
தேவனுக்கு முன்பாக நாம் பயப்படவில்லை என்றால் – *அவர்
வெளியேறிவிடுவார்*.
கிளப்புகளில் இவைகளை செய்ய எந்த ஆட்சேபனையும் இல்லை.
அவரவர்
விருப்பமே..
சபை
கூடும் போது – வல்லமையுள்ள பராக்கிரமமுள்ள சர்வ வல்லமையுள்ள தேவன் அங்கு
இருக்கிறார் – மத். 18:20, பிர. 5:2
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Book ஆர்டர் செய்ய* :
https://kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
வலைதளம் :
http://www.kaniyakulamcoc.wordpress.com
YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக