#735 - *ஞாயிறு ஆராதனை என்றால் அது என்ன? அதில் பங்கு பெறுவோர் எப்படி செயல்பட வேண்டும்?*
இசைக்கருவிகளின் துணையோடு தான் பாட்டு பாட வேண்டிய அவசியம் உண்டா?
கட்டாயமாக சாட்சி சொல்லித்தான் ஆக வேண்டுமா? இல்ல சாட்சியாக வாழ வேண்டுமா?
பாவ அறிக்கை எத்தனை முறை வாசிக்கப் படவேண்டும்?
திருவிருந்து எடுத்ததும் ஆலயத்தை விட்டு வெளியேறலாமா?
*பதில்*
1) *ஞாயிறு ஆராதனை என்றால் அது என்ன? அதில் பங்கு பெறுவோர் எப்படி செயல்பட வேண்டும்*?
2) *இசைக்கருவிகளின் துணையோடு தான் பாட்டு பாட வேண்டிய அவசியம் உண்டா*?
ஞாயிறு ஆராதனை என்று சொல்லியே பழகி விட்டோம் – கிறிஸ்தவர்கள் சகலத்திலும் ஒழுக்கத்தை கடைபிடிக்க வேண்டும் என்பது தேவனுடைய எதிர்பார்ப்பு. எபி. 12:10
ஞாயிறை அல்ல "தேவனை" தொழுது கொள்கிறோம். ஞாயிறு ஆராதனை என்று அழைப்பதை விட தொழுகையின் நேரம் என்பது உசிதமானது. வாரத்தின் முதலாம் நாள் தொழுகை !! அப். 20:7
*ஆராதனை / தொழுகை இந்த இரண்டு வார்த்தைக்கும் வித்தியாசம் என்ன*?
ஆங்கில வேதாகமத்தில் Service என்றும் Worship என்றும் வரும் அநேக இடங்களில் தமிழ் வேதாகமத்தில் ஆராதனை என்றே போடப்பட்டிருக்கிறது.
*எ.கா.*: யாத். 3:12 அதற்கு அவர்: நான் உன்னோடே இருப்பேன்; நீ ஜனத்தை எகிப்திலிருந்து அழைத்துவந்தபின், நீங்கள் இந்த மலையில் தேவனுக்கு ஆராதனை செய்வீர்கள்; நான் உன்னை அனுப்பினேன் என்பதற்கு இதுவே அடையாளம் என்றார்.
Exodus 3:12
(BBE) And he said, Truly I will be with you; and this will be the sign to you that I have sent you: when you have taken the children of Israel out of Egypt, you will give worship to God on this mountain.
(KJV) And he said, Certainly I will be with thee; and this shall be a token unto thee, that I have sent thee: When thou hast brought forth the people out of Egypt, ye shall serve God upon this mountain.
ஆபாத் என்கிற எபிரேய வார்த்தை உபயோகப்படுத்தப்பட்டிருக்கிறது. அதற்கு தமிழில் சேவை என்று பொருள்படுகிறது.
*தமிழ் அகராதியில் ஆராதனை என்ற வார்த்தைக்கு*:
நாளின் கடைசி ஆராதனை; துயில் கொள்ளும் முன் ஓவம் செபம்; விக்கிரக ஆராதனை செய்பவர்; மகம்; ஓமகுண்டம்; இறந்தவர்களை பூஜிக்கிறது; இறந்த சன்னியாசிகளுக்கு வருஷந்தோறுஞ் செய்யும் சடங்கு என்று போடப்பட்டிருக்கிறது. ”ஆதாரம் கடைசியில் காணவும்”
தமிழ் வேதாகமத்தை மொழிபெயர்த்ததில் சமஸ்கிருதம் படித்த பண்டிதர்களின் பங்கு அதிகமாகையாலோ என்னவோ 103 முறை ஆராதனை என்ற வார்த்தை உபயோகப்படுத்தப்பட்டிருக்கிறது.
தொழுகை என்ற வார்த்தைக்கு தமிழ் அகராதியில் கொடுக்கப்பட்டுள்ள அர்த்தங்கள்:
பிரார்த்தனை; சேவை; வணக்கம்; சங்கை; பணிவு
இறைவனை, இறைவியை வணங்குதல்; வழிபாடு;
ஆகவே 1கொரிந்தியர் 13:11ம் வசனத்தின் படி – வளர்ந்தவர்களாகிய நாம் உபயோகபடுத்தும் வார்த்தைகளை அர்த்தத்தோடு பயன்படுத்தவேண்டும்.
1கொரி. 13:11 நான் குழந்தையாயிருந்தபோது குழந்தையைப்போலப் பேசினேன், குழந்தையைப்போலச் சிந்தித்தேன், குழந்தையைப்போல யோசித்தேன்; நான் புருஷனானபோதோ குழந்தைக்கேற்றவைகளை ஒழித்துவிட்டேன்.
தொழுகை என்ற வார்த்தையை உபயோகிப்பதே சரி.
*அதில் பங்கு பெறுவோர் எப்படி செயல்பட வேண்டும்*?
அநேகருக்கு இந்த பதிவு முகச்சுளிவை தரும்... நான் என்ன செய்வது? வசனம் பட்டயமாயிற்றே... மனந்திரும்பும் போது தேவன் பிரியப்படுவார் !!! நாட்களை பிரயோஜனபடுத்துவோம் – ஜனங்களுக்கு பயப்படாமல், தேவனுக்கு கீழ்படியும் போது – அவர் சகலவற்றையும் சீர்படுத்துவார்.
கொஞ்சம் நீளமான பதிவு இது - மிக முக்கியமான தலைப்பானதால் பொறுமையாய் படிக்கவும்.
ஆரம்ப காலங்களில் மனிதர்கள் தேவனை பலியோடு தொழுது கொண்டார்கள் (ஆதி. 4:5)
சவுல் இராஜா தவறாக தொழுது கொண்ட போது, பலியை பார்க்கிலும் கீழ்படிதல் அவசியம் என்று அவருக்கு வலியுறுத்தப்பட்டது (1சாமு. 15:22)
தேவன் சொன்னபடி அவரை தொழுது கொண்டவர்மீது அவர் பிரியமாயிருந்தார் (யோசு. 1:7, 1இரா. 11:38, எரே. 7:23)
பரிசேயனுடைய ஜெபத்தை தேவன் ஏற்காதது ஏன் என்பதை இயேசு கிறிஸ்து நமக்கு விளக்கி காண்பித்தார் (மத். 6:5, லூக். 18:10-14)
தேவன் ஆவியாயிருக்கிறார், அவரைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் அவரைத் தொழுதுகொள்ளவேண்டும். யோ. 4:24
இதற்கு மிஞ்சினது – வீணான ஆராதனை !!
மனுஷருடைய கற்பனைகளை உபதேசங்களாகப் போதித்து, வீணாய் எனக்கு ஆராதனை செய்கிறார்கள் என்று, ஏசாயா தீர்க்கதரிசி நன்றாய்ச் சொல்லியிருக்கிறான் என்றார் (மத். 15:9)
*தேவனுக்கு பிரியமான ஆராதனை எது*?
மனுஷனுடைய கற்பனைகளை உட்புகுத்தாமல் – சத்தியத்தை மாத்திரம் கடைபிடித்து ஆராதிப்பது என்பது தேவ கட்டளைக்கு உட்பட்டவை. அவர் அதில் பிரியபடுகிறவர்.

*எப்படி தொழுது கொள்வது*?
*கிறிஸ்தவ தொழுகை முறை*:
தேவனை தொழுது கொள்ளும்படி கிறிஸ்தவர்கள் வாரத்தின் முதல் நாளில் கூட வேண்டும் (அப். 20:7, 1 கொரி. 16:2)
கூடுவதில் தவறக் கூடாது (எபி. 10:25)
அனைத்தையும் ஒழுங்கும் கிரமமுமாக செய்ய வேண்டும் (1கொரி. 14:40)
*ஜெபம்*: கிறிஸ்துவின் மூலமாக பிதாவினிடத்தில் ஜெபிக்கிறோம். ஆகவே ஆண்டவரே கர்த்தாவே என்று ஜெபத்தில் பயன்படுத்துவது கிறிஸ்துவை குறிக்கிறது என்பதை நாம் அறியவேண்டும். (அப். 2:36, பிலி. 2:11, (எபி. 4:14-18, கொலோ. 3:17, யோ. 14:6, 14).
ஜெபம் என்பது தேவனோடு தொடர்பு கொள்ளுவது (பிலி. 4:6)
நம்மோடு தம் வார்த்தையின் மூலமாக தேவன் தொடர்பு கொள்கிறார் (எபி. 1:1-2)
கூடுகையில் ஜெபம் இன்றியமையாதது (அப். 12:5, 12)
கீழ்கண்டவற்றிற்காக கிறிஸ்தவர்கள் ஜெபிக்க வேண்டும் என்று கற்றுக்கொடுக்கப்பட்டிருக்கிறது.
பெலவீனத்தாலும் அறியாமலும் செய்த பாவத்திற்கு மன்னிப்பு கோரி ஜெபிக்கவேண்டும் (அப். 8:18-24, I யோ. 1:9).
அர்ப்பணித்தும் தேவனை துதித்தும் ஜெபிக்க வேண்டும் (மத். 6:9)
தேவன் தந்த எண்ணிமுடியாத ஆசீர்வாதங்களுக்காக ஜெபிக்க வேண்டும் (எபே. 5:20)
நன்கு புரிந்து கொள்ளும் ஆற்றல் வேண்டி ஜெபிக்க வேண்டும் (யாக். 1:5)
கிறிஸ்தவர்களுக்காகவும், மற்றவர்களுக்காகவும் அதிகாரிகளுக்காகவும், நம் எதிரிகளுக்காகவும் ஜெபிக்க வேண்டும் (எபே. 6:18, I தீமோ. 2:1-2, மத். 5:44)
சோதனையிலிருந்து நாம் விடுபட (மத். 26:41, யாக். 1:13, 1கொரி. 10:13)
தேவனை நம்பும் அனைவரின் மத்தியிலும் நல்ல ஐக்கியம் பெலப்பட ஜெபிக்கவேண்டும் (யோ. 17:20-21)
நம் அநுதின தேவைக்காக ஜெபிக்க வேண்டும் (மத். 6:11)
தேவனுடைய சித்தப்படி நாம் ஜெபிக்கும் போது அதை பெற்றுக்கொள்கிறோம் (மத். 7:7-11, 21:22, 1யோ. 5:14)
*பாடல் முறை*
இயேசுவும் அப்போஸ்தலரும் பாடினார்கள் (மத். 26:30, அப். 16:25)
கிறிஸ்தவர்கள் கர்த்தரை பாடி கீர்த்தனம் பண்ண வேண்டும் (எபே. 5:19)
சங்கீதங்களினாலும் கீர்த்தனைகளினாலும் ஞானப்பாட்டுகளினாலும் ஒருவருக்கொருவர் புத்திசொல்லிக்கொண்டு, பாடவேண்டும்.
இசைப்பதோ தட்டுவதோ ஆடுவதோ குறிப்பிடப்படவில்லை.
*இரண்டு காரியத்திற்காக பாடல் உதவுகிறது*:
1) பாடி தேவனை துதிக்கிறோம். நம் சந்தோஷத்தை பாடலின் மூலம் வெளிபடுத்தி அவரை புகழ்கிறோம் (சங். 66:1-2, யாக். 5:13)
2) சக கிறிஸ்தவர்களுக்கு போதிக்கவும் ஊக்கப்படுத்தவும் பிரயோஜனபடுகிறது (கொலோ. 3:16)
கொயர் அல்லது பாடகர் குழு வைத்து அவர்கள் மாத்திரம் தணித்து பாடுவது வேதத்தில் சொல்லப்பட்ட முறையல்ல. கூடியிருக்கும் அனைவரும் பாடவேண்டும்.
இசைகருவிகளை ஆராதனையில் உபயோகித்து பாடினதாக புதிய ஏற்பாட்டில் *எங்கும் காணமுடியாது*. இசைகருவிகள் பேசவோ, உபதேசிக்கவோ வாழ்த்தவோ முடியாதாகையால் அவைகளை சேர்த்துக்கொண்டு பாடுவது அந்நிய அக்கினியை கொண்டு வந்தது போலாகிவிடுகிறது. வேதத்தில் இல்லாதவற்றை நாம் அங்கீகரிக்க முடியாது (எபே. 5:19, கொலோ. 3:16)
*காணிக்கை*
கொடுப்பதே பாக்கியம் (அப். 20:35)
ஒவ்வொரு வாரத்தின் முதல் நாளிலும் காணிக்கை கொடுக்க வேண்டும் (1கொரி. 16:2)
எல்லாம் கர்த்தருடையது என்பதை மறக்கக்கூடாது (சங். 24:1)
திட்டம் செய்து ஒரு தொகையை நாம் கூடும் சபை வளர்ச்சிக்கென்று தவறாமல் கொடுக்க வேண்டும் (1கொரி. 16:1-2)
10சதவீதம் அல்ல அதை காட்டிலும் அதிகமாக உதாரத்துவமாய் கொடுக்கவேண்டும் (2கொரி. 8:1-5)
ஐயோ கொடுக்க வேண்டுமே என்று கட்டாய மனதோடு அல்ல – காணிக்கை நேரம் வந்து விட்டதே என்று விசனத்தோடும் அல்ல – நாம் உற்சாகமாய் காணிக்கை செலுத்த வேண்டும் (2கொரி. 9:7).
அப்படி கொடுக்கும் போது – தேவன் அதற்கு பதிலளிப்பார் (லூக். 6:38)
அவசியபடுகிறவர்களுக்கும் சபை தேவைக்கும் அதை பயன்படுத்தவேண்டும் (அப். 2:45, ரோ. 10:14-15, I கொரி. 9:14).
*கர்த்தருடைய பந்தி*
தன் சிலுவை மரணத்திற்கு முன்னர் கிறிஸ்துவானவர் தன் பந்தியை பிரகடனபடுத்தினார் (மத். 26:26-29, மாற்கு 14:22-25, லூக். 22:17-20, 1 கொரி. 11:23-26)
ஒரு கிறிஸ்தவன், தான் தன் பாவத்திலிருந்து விடுபட – தேவன் தனக்கென்று என்ன செய்தார் அல்லது எப்படி தன் பாவத்திலிருந்து மீட்டார் என்று நினைவு கொள்ளும் பந்தி இது.
ஒரு காலத்தில் பாவியாக அலைந்து திரிந்ததை நினைவு கொண்டு கிறிஸ்துவின் மரணத்தினால் தற்போது தேவ பிள்ளையாக இருக்கிறோம் என்று நினைவு கொள்ள வேண்டும்.
புதிய சட்டத்திற்குள் இருக்கிறோம் என்பதை நினைவு கொள்ள வேண்டும் (Iகொரி. 11:27-29).
கிறிஸ்துவின் பந்தியில் 2 பொருட்கள் உபயோகப்படுகிறது. (1கொரி. 11:26)
ஒன்று – அப்பம்
இரண்டு – திராட்சை ரசம்
புளிப்பில்லாத அப்பம் – கிறிஸ்துவின் சரீரத்தை குறிக்கிறது (லூக்கா 22:19)
புளிப்பு பாவத்தை குறிக்கிறது – அப்பம் புளிப்பற்றதாய் இருத்தல் அவசியம் (எபி. 7:26) ஆகவே ஈஸ்ட், முட்டை போன்ற பொருட்களை கலக்காமல் செய்யப்படவே முடியாத, கடையில் விற்கும் பிரட்/bread போன்றவற்றை கர்த்தருடைய பந்தியில் பயன்படுத்துவது *100% தவறு*
திராட்சை ரசம் – கிறிஸ்துவின் இரத்தத்தை பிரதிபளிக்கிறது (மத். 26:28)
ஆதி கிறிஸ்தவர்கள் வாரத்தின் முதல் நாளில் பந்தியை அநுசரித்தனர் (அப். 20:7)
கிறிஸ்து உயிர்த்தெழுந்த நாளாகிய வாரத்தின் முதல் நாளில் கர்த்தருடைய பந்தியை எடுக்க வேண்டும்... ஒவ்வொரு வாரமும்.... மாதத்திற்கு ஒரு முறை என்பது – வேதத்தில் இல்லாத கட்டளை !!
*பிரசங்கம்*
வேத வாசிப்பும், போதனையும், உபதேசமும் – ஆராதனையின் (தொழுகையின்) ஒரு அங்கம் (1தீமோ. 4:13, அப். 20:7)
*ஆண்கள் தான்* பிரசங்கிக்க வேண்டும் (1கொரி. 14:34). (வருடத்திற்கு ஒரு முறை பெண்கள் தினம் என்பதாலோ, பாஸ்டர் மனைவி, வயதான பரிசுத்த தாய், தீர்க்கதரிசினி, சாட்சித் தாய் போன்று எந்த சூப்பர் பட்டங்களை கொண்டு அழைக்கப்பட்டாலும் பெண்கள் ஒரு போதும் ஆண்களுக்கு பிரசங்கிக்க வேதம் அனுமதி கொடுக்கவில்லை).
தேவன் சொன்னவற்றை பிரசங்கிக்க வேண்டும் (யோனா 3:2) - தன் பிரயாண கதை, சொந்த அனுபவங்களை அல்ல..
தேவனை மாத்திரம் பிரியபடுத்த பிரசங்கியாளர்கள் கவனமாய் இருக்க வேண்டும். (அப். 4:19-20, கலா. 1:10, I தெச. 2:4).
திருக்குறள்களும் பழமொழிகளும் மேடை பேச்சுகளும் நாடக முறைகளும் பின்பற்றபடாமல் (நீதி. 28:4) தேவனுடைய வார்த்தையை மாத்திரம் பேச வேண்டும் (I தீமோ. 4:13, II தீமோ. 2:15, அப். 2:16, 25, 34; அப். 7; அப். 8:35; அப். 18:28).
தேவனுடைய வார்த்தை ஒன்றே போதுமானது – பிரசங்கத்திற்கு !! (II தீமோ. 3:16-17, I கொரி. 4:6).
தவறான போதனையை கண்டித்து பேசவேண்டும் - கலா. 1:6-9, I தீமோ. 1:6-7, I தீமோ. 4:1-3, II தீமோ. 2:16-18, II தீமோ. 3:5-9, தீத்து 1:9-11).
ஃபாதர், ரெவரென்டு, பாஸ்டர் என்று தங்களுக்கு விசேஷ பட்டங்களை போட்டுக்கொள்ள இடமில்லை (மத். 23:8-12)
மூப்பர்கள் சபையை நிர்வாகம் செய்ய வேண்டும் (அப். 20:28)
(பாஸ்டர்/கண்காணிகளும் இந்த இரண்டு வார்த்தைகளும் ஒரே அர்த்தம் தான்)
பிரசங்கியாளர் / சுவிசேஷகர்கள் போதிக்க வேண்டும் – 2தீமோ. 4:1-2
பிரசங்கியாளரே சபையை நிர்வாகிப்பது தேவ கட்டளையல்ல !!
நிர்வாகம் வேறு – பிரசங்கியாளர்/உபதேசியாளர் வேறு
ஆதலால், அசைவில்லாத ராஜ்யத்தைப் பெறுகிறவர்களாகிய நாம் பயத்தோடும் பக்தியோடும் தேவனுக்குப் பிரியமாய் ஆராதனை செய்யும்படி கிருபையைப் பற்றிக்கொள்ளக்கடவோம் (எபி. 12:28)
3) *கட்டாயமாக சாட்சி சொல்லித்தான் ஆக வேண்டுமா? இல்ல சாட்சியாக வாழ வேண்டுமா*?
சாட்சி என்றால் “மற்றவர்களுக்கு” நடந்தவற்றை நேரில் பார்த்தவர்கள் சபையில் அறிவிப்பது !! தனக்கு நடந்தவற்றை தானே சொல்வது சாட்சி அல்ல. அதன் பெயர் வாக்குமூலம்! நீதி மன்றத்தில் *சொந்த சாட்சி செல்லாது* !!!! ஆங்கிலத்தில் விட்னஸ் என்று சொல்வார்கள்.
கிறிஸ்துவிற்கு சாட்சியாக நாம் வாழ வேண்டியதே அவசியம்... அவரை நாம் நேரடியாக யாரும் பார்த்ததில்லை. ஆகவே அவர் வார்த்தைகளை உணர்ந்து கீழ்படிந்து செயல்படுகிறோம்.. சபைநடுவில் அவர் நமக்கு செய்தவைகளை சொல்லி தேவனை மகிமைபடுத்துகிறோம். அது வாக்குமூலம் !! ஆங்கிலத்தில் டெஸ்சிமோனி...
கிறிஸ்துவை நேரடியாக பார்த்த அப்போஸ்தலர்கள் சாட்சி சொன்னார்கள். நாம் சாட்சியாக வாழ வேண்டும். நம்மை பார்த்து ஜனங்கள் கிறிஸ்துவை அறிய வேண்டும் – கலா. 3:27
(தொழுகையின் போது அல்லாமல், மற்ற நேரங்களில்) சபையில் அநேகருக்கு முன்பதாக – நேர விரயம் செய்யாமல் போதிக்காத வண்ணம் சொந்த தாலந்தை வெளிப்படுத்தாத வண்ணமும் தேவன் நமக்கு செய்த கிருபையை மற்றவர் முன்பு பகிர்ந்து கொண்டால் அது தேவனுக்கு மகிமையை தருகிறது.
அப்படிப்பட்ட காரியம் புதிய ஏற்பாட்டு ஆராதனை ஒழுங்கின் நடுவே நடந்ததாக வேதத்தில் நான் காணவில்லை
4) *பாவ அறிக்கை எத்தனை முறை வாசிக்கப் படவேண்டும்*?
தேவன் நம் இருதயத்தில் இருக்கிறார். கட்டிடத்தில் அல்ல. நாம் எப்போதும் தேவனிடத்தில் தொடர்பில் இருக்கிறோம். எப்போதெல்லாம் ஜெபிக்கிறோமோ – தேவனிடத்தில் நம்மை தாழ்த்துவது அவசியம். யாக். 5:16, மத். 5:24
5) *திருவிருந்து எடுத்ததும் ஆலயத்தை விட்டு வெளியேறலாமா*?
ஆலயம் என்பது சொந்த சரீரம். கூடும் இடத்திற்கு முக்கியத்துவம் அல்ல. தேவன் கட்டிடத்தில் வசிக்கவில்லை – 1கொரி. 3:16, அப். 17:24
சபை தொழுகை என்பது – பாடல் ஜெபம் செய்தி பந்தி காணிக்கை என்று 5 பாகங்கள் கொண்டது. முழுவதிலும் பங்கு பெற வேண்டும்.
கூடுகை முடிந்ததும் வந்தவர்களுடன் கலந்து உரையாடினாலன்றி எபி. 10:24ஐ நிறைவேற்ற முடியாது.

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் : https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
வலைதளம் : http://www.kaniyakulamcoc.wordpress.com
YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*
ஆதாரம் :
1- https://ta.wiktionary.org/wiki/%E0%AE%86%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88
2- http://dictionary.tamilcube.com/
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக