#733 - இயேசு கிறிஸ்து கூறும் 10 கட்டளைகள் பற்றி தகுந்த உதாரணத்துடன் தெளிவாக
விளக்கவும் சகோதரரே*
*பதில்*
10
கட்டளைகளை தேவன் கொடுத்தார் – யாத். 20:1,
உபா. 5:22.
அந்த
கட்டளைகளை உலகத்தில் உள்ள அனைத்து ஜனங்களுக்கும் அல்ல – இஸ்ரவேல் ஜனங்களுக்கு
மாத்திரம் கொடுத்தார் – உபா. 5:1
10
பிரதான கட்டளைகளும் 603 உபகட்டளைகளையும் கொடுத்தார்.
இவை
அணைத்தும் கிறிஸ்துவின் சிலுவையில் நிறைவேறி முடிவுற்றது – ரோ. 10:4.
நியாயபிரமாணத்தை
கடைபிடித்து அவர்கள் (இஸ்ரவேலர்கள்) கிறிஸ்துவின் அண்டை சேரும்படியாக தேவன் இந்த
ஏற்பாடை செய்திருந்தார் –
கலா. 3:24
இஸ்ரவேலருக்கு
இந்த நியாயபிரமாணம் முடிவுக்கு வரும் என்றும் புதிய பிரமாணம் கொடுக்கப்படும்
என்றும் தீர்க்கதரிசனம் சொல்லப்பட்டிருந்தது – எரே. 31:33
அந்த
புதிய பிரமாணம் சிலுவை மரணத்தில் துவங்கியது – 1கொரி. 11:25, லூக்கா 22:20.
பழைய மற்றும் புதிய ஏற்பாடுகளுக்கு இடையில் வேறுபடுத்துவது
(அல்லது வேறுபடுத்தத் தவறியது) உண்மையில் கிறிஸ்தவம் மற்றும் கிறிஸ்தவ மதப்பிரிவு
என நாம் விவரிக்கக்கூடிய விஷயங்களுக்கிடையேயான வேறுபாடுகளில் ஒன்றாகும்.
அப்பொழுது இயேசு தம்மை நம்பிய யூதர்களிடம், “நீங்கள் என் உபதேசத்தில்
நிலைத்திருந்தால் மெய்யாகவே என் சீஷராயிருப்பீர்கள்
என்றார் - யோவான் 8:31.
அதே
போல பவுல், அப்படியே
நீங்களும், உங்களைப்
பாவத்திற்கு மரித்தவர்களாகவும்,
நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்குள் தேவனுக்கென்று
பிழைத்திருக்கிறவர்களாகவும் எண்ணிக்கொள்ளுங்கள் என்றார் - ரோமர்
6:11.
இரண்டு பத்திகளிலும் உண்மையில் இந்த வார்த்தையின்
முக்கியத்துவம் என்னவென்றால்,
சொல்லாட்சிக்கும் யதார்த்தத்திற்கும் இடையில் பெரும்பாலும்
துண்டிக்கப்படுகிறது.
இன்று,
பொதுவான பயன்பாட்டில்,
கிறிஸ்தவர் என்றால்
பல பிரிவுகளை
பேசுகிறார்கள். வேதத்தின்படியோ, இயேசு
கிறிஸ்துவை விசுவாசித்து
ஞானஸ்நானம் பெற்ற விசுவாசி என்று பொருள்படுகிறது.
எனவே,
பத்து கட்டளைகள் என்றால்
என்ன? அவற்றை
மீறுவது சரியா? ஓய்வு நாளின் காரியத்தை தவிர, அவை
ஒவ்வொன்றும் ஒரு புதிய ஏற்பாட்டுக் குறியீட்டைக் கொண்டுள்ளன. புதிய ஏற்பாட்டில்
கிறிஸ்தவர்களுக்கு கற்பிப்பதை சமர்ப்பிப்பது என்பது பத்து கட்டளைகளில் ஒன்பது
கட்டளைகளை சமர்ப்பிப்பதாகும்,
ஏனெனில் அவை புதிய ஏற்பாட்டில் உள்ளன.
அனைவருக்கும்
புரியும் வண்ணம் நீங்கள் கேட்ட கேள்வியை *புதிய ஏற்பாட்டோடு ஒப்பிட்டு என்னுடைய
விளக்கத்தை கீழே வைக்கிறேன்*.
*#1 - என்னையன்றி உனக்கு
வேறே தேவர்கள் உண்டாயிருக்கவேண்டாம் – யாத். 20:3*
நீங்கள் கர்த்தருடைய பாத்திரத்திலும் பேய்களுடைய
பாத்திரத்திலும் பானம் பண்ணக்கூடாதே;
நீங்கள் கர்த்தருடைய போஜனபந்திக்கும் பேய்களுடைய போஜனபந்திக்கும்
பங்குள்ளவர்களாயிருக்கக்கூடாதே.
நாம் கர்த்தருக்கு எரிச்சலை மூட்டலாமா?
அவரிலும் நாம் பலவான்களா? 1
கொரி 10:21-22
*#2 - மேலே வானத்திலும்,
கீழே பூமியிலும், பூமியின் கீழ்த் தண்ணீரிலும்
உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான ஒரு சொரூபத்தையாகிலும் யாதொரு விக்கிரகத்தையாகிலும்
நீ உனக்கு உண்டாக்கவேண்டாம்; யாத். 20:4*
அநியாயக்காரர் தேவனுடைய ராஜ்யத்தைச்
சுதந்தரிப்பதில்லையென்று அறியீர்களா?
வஞ்சிக்கப்படாதிருங்கள்;
வேசிமார்க்கத்தாரும்,
*விக்கிரகாராதனைக்காரரும்*, விபசாரக்காரரும்,
சுயபுணர்ச்சிக்காரரும்,
ஆண்புணர்ச்சிக்காரரும்,
திருடனும், பொருளாசைக்காரரும், வெறியரும், உதாசினரும், கொள்ளைக்காரரும்
தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லை. 1கொரி.
6:9-10
*#3 - உன்
தேவனாகிய கர்த்தருடைய நாமத்தை வீணிலே வழங்காதிருப்பாயாக; கர்த்தர்
தம்முடைய நாமத்தை வீணிலே வழங்குகிறவனைத் தண்டியாமல் விடார். யாத் 20:7*
அநியாயக்காரர் தேவனுடைய ராஜ்யத்தைச்
சுதந்தரிப்பதில்லையென்று அறியீர்களா?
வஞ்சிக்கப்படாதிருங்கள்;
வேசிமார்க்கத்தாரும்,
விக்கிரகாராதனைக்காரரும்,
விபசாரக்காரரும், சுயபுணர்ச்சிக்காரரும், ஆண்புணர்ச்சிக்காரரும், திருடனும், பொருளாசைக்காரரும், வெறியரும், *உதாசினரும்*, கொள்ளைக்காரரும்
தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லை. 1கொரி.
6:9-10
*#4 - ஓய்வுநாளைப்
பரிசுத்தமாய் ஆசரிக்க நினைப்பாயாக;
யாத். 20:8*
ஒய்வு
நாள் ஆசரிப்பை புதிய ஏற்பாட்டில் கிறிஸ்தவர்கள் கடைபிடிக்கவில்லை.
என்ன காணப்படுகிறது?
ஆகையால்,
போஜனத்தையும் பானத்தையும்குறித்தாவது,
பண்டிகை நாளையும் மாதப்பிறப்பையும் ஓய்வுநாட்களையுங்குறித்தாவது, ஒருவனும்
உங்களைக் குற்றப்படுத்தாதிருப்பானாக. அவைகள்
வருங்காரியங்களுக்கு நிழலாயிருக்கிறது;
அவைகளின் பொருள் கிறிஸ்துவைப்பற்றினது. (கொலோசெயர் 2: 16-17).
வாரத்தின்
முதல் நாளாக மாறியிருப்பதை கவனிக்கவும்.
"கர்த்தருடைய நாளில் நான் ஆவிகுள்ளானேன் ..."
(வெளிப்படுத்துதல் 1:10).
"வாரத்தின் முதல்நாளிலே, அப்பம் பிட்கும்படி சீஷர்கள் கூடிவந்திருக்கையில், பவுல்
மறுநாளிலே புறப்படவேண்டுமென்றிருந்து,
அவர்களுடனே சம்பாஷித்து,
நடுராத்திரிமட்டும் பிரசங்கித்தான்." (அப்போஸ்தலர் 20: 7).
*#5 –உன்
தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கிற தேசத்திலே உன் நாட்கள் நீடித்திருப்பதற்கு, உன்
தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக. யாத்.
20:12*
உனக்கு நன்மை உண்டாயிருப்பதற்கும், பூமியிலே உன்
வாழ்நாள் நீடித்திருப்பதற்கும், உன்
தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக என்பதே வாக்குத்தத்தமுள்ள முதலாங்
கற்பனையாயிருக்கிறது.
எபே. 6:2-3
*#6 - கொலை
செய்யாதிருப்பாயாக.
யாத். 20:13*
எப்படியென்றால்,
விபசாரம் செய்யாதிருப்பாயாக,
*கொலை செய்யாதிருப்பாயாக*, களவு செய்யாதிருப்பாயாக, பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக, இச்சியாதிருப்பாயாக
என்கிற இந்தக் கற்பனைகளும்,
வேறே எந்தக் கற்பனையும்,
உன்னிடத்தில் நீ அன்புகூருகிறதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்கிற
ஒரே வார்த்தையிலே தொகையாய் அடங்கியிருக்கிறது. ரோ. 13:9
*#7 -
விபசாரம் செய்யாதிருப்பாயாக.
யாத். 20:14*
எப்படியென்றால்,
*விபசாரம் செய்யாதிருப்பாயாக*, கொலை செய்யாதிருப்பாயாக, களவு செய்யாதிருப்பாயாக, பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக, இச்சியாதிருப்பாயாக
என்கிற இந்தக் கற்பனைகளும்,
வேறே எந்தக் கற்பனையும்,
உன்னிடத்தில் நீ அன்புகூருகிறதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்கிற
ஒரே வார்த்தையிலே தொகையாய் அடங்கியிருக்கிறது. ரோ. 13:9
*#8 - களவு
செய்யாதிருப்பாயாக. யாத்.
20:15*
எப்படியென்றால்,
விபசாரம் செய்யாதிருப்பாயாக,
கொலை செய்யாதிருப்பாயாக,
*களவு செய்யாதிருப்பாயாக*, பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக, இச்சியாதிருப்பாயாக
என்கிற இந்தக் கற்பனைகளும்,
வேறே எந்தக் கற்பனையும்,
உன்னிடத்தில் நீ அன்புகூருகிறதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்கிற
ஒரே வார்த்தையிலே தொகையாய் அடங்கியிருக்கிறது. ரோ. 13:9
*#9 - பிறனுக்கு
விரோதமாய்ப் பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக. யாத். 20:16*
எப்படியென்றால்,
விபசாரம் செய்யாதிருப்பாயாக,
கொலை செய்யாதிருப்பாயாக,
களவு செய்யாதிருப்பாயாக,
*பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக*, இச்சியாதிருப்பாயாக என்கிற இந்தக் கற்பனைகளும், வேறே எந்தக்
கற்பனையும், உன்னிடத்தில்
நீ அன்புகூருகிறதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்கிற ஒரே வார்த்தையிலே
தொகையாய் அடங்கியிருக்கிறது.
ரோ. 13:9
*#10 - பிறனுடைய
வீட்டை இச்சியாதிருப்பாயாக;
பிறனுடைய மனைவியையும்,
அவனுடைய வேலைக்காரனையும்,
அவனுடைய வேலைக்காரியையும்,
அவனுடைய எருதையும்,
அவனுடைய கழுதையையும்,
பின்னும் பிறனுக்குள்ள யாதொன்றையும் இச்சியாதிருப்பாயாக என்றார். யாத். 20:17*
எப்படியென்றால்,
விபசாரம் செய்யாதிருப்பாயாக,
கொலை செய்யாதிருப்பாயாக,
களவு செய்யாதிருப்பாயாக,
பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக,
*இச்சியாதிருப்பாயாக* என்கிற இந்தக்
கற்பனைகளும், வேறே
எந்தக் கற்பனையும், உன்னிடத்தில்
நீ அன்புகூருகிறதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்கிற ஒரே வார்த்தையிலே
தொகையாய் அடங்கியிருக்கிறது.
ரோ. 13:9
போதகரே,
நியாயப்பிரமாணத்திலே எந்தக் கற்பனை பிரதானமானது என்று கேட்டான். இயேசு அவனை நோக்கி: உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு
இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்புகூருவாயாக; இது முதலாம் பிரதான
கற்பனை.
இதற்கு ஒப்பாயிருக்கிற இரண்டாம் கற்பனை என்னவென்றால், உன்னிடத்தில்
நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்பதே. இவ்விரண்டு
கற்பனைகளிலும் நியாயப்பிரமாணம் முழுமையும் தீர்க்கதரிசனங்களும் அடங்கியிருக்கிறது
என்றார் - மத்தேயு
22:36-40.
அப்பொழுது,
ஒரு மேகம் அவர்கள்மேல் நிழலிட்டது: இவர் என்னுடைய நேசகுமாரன், இவருக்குச்
செவிகொடுங்கள் என்று அந்த மேகத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாயிற்று - மாற்கு 9:7
இயேசுவை விசுவாசிக்கும் எந்த கிறிஸ்தவனும் அவருடைய
கட்டளைக்கே கீழ்படிய அவசியமானது. தசமபாகம் அல்லது பத்து கட்டளை ஓய்வு நாள் போன்ற
சொற்றொடர்கள்
பழைய சட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தன. இயேசு தம்முடைய சீஷர்களிடம், “நானே வழி, சத்தியம், ஜீவன்: என்னாலேயன்றி ஒருவனும் பிதாவினிடத்தில்
வரான்
என்றார் (யோவான் 14: 6).
இயேசு சொன்னதை நம்பவில்லை என்றால், இயேசுவை
நம்புவதாக நாம் கூற முடியாது. அவரையே பின்பற்றுவோம் !
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/DdQM79dFf5v6GQMRfbDc2H
*Q&A Book ஆர்டர் செய்ய* :
https://kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html
வலைதளம் :
http://www.kaniyakulamcoc.wordpress.com
YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/DdQM79dFf5v6GQMRfbDc2H
*Q&A Book ஆர்டர் செய்ய* :
https://kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html
வலைதளம் :
http://www.kaniyakulamcoc.wordpress.com
YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக