செவ்வாய், 28 ஜனவரி, 2020

#732 - தேவசமுகத்து அப்பங்களைக்கேட்டு வாங்கி, தான் புசித்ததுமன்றி, தன்னுடனேகூட இருந்தவர்களுக்கும் கொடுத்தானே

#732 - *தேவசமுகத்து அப்பங்களைக்கேட்டு வாங்கி புசித்த செயல் லேவி. 24:9ன் படி தாவீது செய்த இந்த காரியம் ஏன் தவறாக வேதத்தில் சொல்லப்படவில்லை*?
 
இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: தாவீதும் அவனோடிருந்தவர்களும் பசியாயிருந்தபோது செய்ததை நீங்கள் வாசிக்கவில்லையா? அவன் தேவனுடைய வீட்டில் பிரவேசித்து, ஆசாரியர்மாத்திரமே தவிர வேறொருவரும் புசிக்கத்தகாத தேவசமுகத்து அப்பங்களைக்கேட்டு வாங்கி, தான் புசித்ததுமன்றி, தன்னுடனேகூட இருந்தவர்களுக்கும் கொடுத்தானே என்று சொன்னார். (லூக்கா 6:3-4)

அது ஆரோனையும் அவன் குமாரரையும் சேரும்; அதைப் பரிசுத்த இடத்திலே புசிக்கக்கடவர்கள்; நித்திய கட்டளையாகக் கர்த்தருக்கு இடப்படும் தகனபலிகளில் அது அவனுக்கு மகா பரிசுத்தமாயிருக்கும் என்றார்.
(லேவி. 24:9)

லேவி. 24:9ன் படி இங்கு *தாவீது செய்த இந்த காரியம் ஏன் தவறாக வேதத்தில் சொல்லப்படவில்லை*?

*பதில்*
ஆசாரியர்களுக்காக மட்டுமே உள்ள அந்த அப்பத்தை தாவீது பசியுடன் இருந்தபோது தேவனுடைய வீட்டிற்குள் நுழைந்து அவர் மாத்திரம் அல்லாமல் அவருடன் இருந்தவர்களுக்கும் கொடுத்திருக்கிறார்.  

தாவீது செய்தது சட்டவிரோதமானது என்று இயேசுவும் கூறுகிறார். இயேசு தாவீதைக் காப்பாற்றினார் என்று பலர் கருதுகிறார்கள்.

தாவீது தவறு செய்தார் என்ற உண்மையை இயேசு முன்வைக்கிறாரேயன்றி சரி என்று சொல்லவில்லை. அந்த நேரத்தின் செயலை தண்டிக்க வேண்டாம் என்று தேவன் தேர்ந்தெடுத்த ஒன்று என்றாலும் அது சட்டத்தை மீறிய செயல்.

பரிசேயர்கள் இரட்டைத் தரங்களைக் கொண்டிருந்ததால் இயேசு இந்த முன்மாதிரியைக் கொண்டுவந்தார் என்று வேத வல்லுனர்கள் கருதுகிறார்கள்.

தாவீதும் தன்னுடைய வீரர்களும் பசியாக இருந்தால் அவர்கள் மன்னிப்பார்கள், ஆனால் பசியுடன் இருந்த தங்கள் காலத்தின் தாழ்ந்த / ஏழை மனிதர்களை பொருத்துக்கொள்ள அவர்களுக்கு மனமில்லை என்பதை சுட்டிக்காட்டுகிறார் என்றே கருதுகிறேன்.

இருந்தபோதிலும் சீஷர்கள் சட்டத்தை மீறவில்லை என்பதே உண்மை. பிறனுடைய விளைச்சலில் பிரவேசித்தால், உன் கையினால் கதிர்களைக் கொய்யலாம்; நீ அந்த விளைச்சலில் அரிவாளை இடலாகாது - உபாகமம் 23:25 என்பது நியாயபிரமாண கட்டளை.

சீஷர்கள் நியாயப்பிரமாணத்தை மீறியதாக இயேசு ஒருபோதும் கூறவில்லை, ஆனால் தாவீது நியாயப்பிரமாணத்தை மீறியதை சுட்டிக்காட்டினார்.

கிறிஸ்துவின் காலத்தில் இருந்த சராசரி பரிசேயர்கள் எப்போதும் குற்றஞ்சாட்டும் குணம் உடையவர்கள் என்றும் இரக்கம் இல்லாதவர்கள் என்பதை வலியுறுத்துகிறது இந்த பகுதி.

பரிசேயர்கள் தாவீதை மிகவும் மதிக்கிறார்கள் என்பதை நாம் அறிவோம். (மாற்கு 11: 9-10).

ஆகவே தான் தாவீதை கோடிட்டு காட்டும் போதெல்லாம் (மத்தேயு 22: 42-45)  இயேசுவின் கேள்விக்கு பதிலளிக்க அவர்களுக்கு கடினமாக இருந்தது.

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக