#731 - *தர்ம காரியம் / காணிக்கை - விளக்கம் தரவும்*
1)
தர்ம காரியம் சபை செய்ய தேவையில்லை விசுவாசிகள்தான் செய்யணும் சபைக்கு
கொடுக்க பட்டது வேறு வேலை என்கிறார்கள். வேதத்தில் பதில் உண்டா?
காணிக்கை / தசமபாகத்தில் : கட்டிட வாடகை, மின் வரி , தண்ணீர் வரி, ஊழியர் சம்பளம், மிஷனரியை தாங்குதல், கட்டிட பராமரிப்பு, இதற்கு மட்டுந்தான் வேதம்
அனுமதிக்கிறதா? இல்லை என்பது என் பதில்.
தரித்திரரை நினைப்பது, தான தர்மம், ஏழை விசுவாச
குடும்பத்தாருக்கு, புறஜாதிகளுக்கு நற்செய்தி மூலம்
உதவுவது சபை பொறுப்புதானே?
2)
(இது தொடர்பான இன்னுமொருவரின் கேள்வி) – காணிக்கைக்கும் தர்மபணத்திற்கும்
என்ன வித்தியாசம்?
*பதில்*
காணிக்கை
மற்றும் தர்ம பணத்தின் அர்த்தத்தை அறியும் போது பதிலும் புரிதலும் எளிதாகும் என்று
நினைக்கிறேன்.
காணிக்கை
– தொழுகையின் ஒரு பகுதி.
எருசலேமில்
உள்ள பரிசுத்தவான்களுக்கு வழங்கப்பட்ட உதவி தேவனை மகிமைப்படுத்தியது - II கொரி. 9: 10-15
அது
தேவனுக்கு சுகந்த வாசனையானதும் தேவனுக்கு உகந்த பலியாகவும் இருக்கிறது - பிலி. 4:
15-18
எப்போதும்
கொடுப்பதற்கு ஒரு தயார்நிலை அல்லது விருப்பம் இருத்தல் அவசியம் - 2 கொரி. 8:11-12
1
கொரி. 16: 1-2 – திட்டம் செய்து கொடுப்பதை அறிகிறோம்.
மற்றவர்
வற்புறுத்தலின் படியல்ல, தன் மனதில் நினைத்தபடி மகிழ்ச்சியோடு கொடுக்க வேண்டும் – 2 கொரி. 9:7
வறுமையில்
இருந்தாலும் மக்கதோனிய கிறிஸ்தவர்கள் தாராளமாகக் கொடுத்தனர் – 2 கொரி. 8:1-4
தாராளமாக
கொடுத்தல் தேவனை மகிமைபடுத்துகிறது – 2 கொரி. 9:13
கடன்
வாங்கி காணிக்கை கொடுப்பது அல்ல – உள்ளதை கொடுக்க வேண்டும் 2 கொரி. 8:12
எவ்வளவு
வளர்ந்திருக்கிறோமோ அவ்வளவாய் கொடுக்க வேண்டும் - 1 கொரி. 16: 1-2
தங்கள்
திராணியின் அடிப்படையில் நிவாரண நிதி கொடுக்கப்பட்டது. அப்போஸ்தலர் 11:29
செல்வந்தர்கள்
/ ஐஸ்வரியவான்கள் / பணக்காரர்கள் – கொடுப்பதிலும் ஐஸ்வரியவானாக இருக்க வேண்டும் – 1
தீமோ. 6:18
தனக்கு
பாதிப்பு ஏற்படுத்தாததை தாவீது காணிக்கையாக செலுத்த மறுத்தார் என்பது நமக்கு
மிகப்பொிய பாடம். 2 சாமு. 24:24
*சபையின்
காணிக்கை எவ்வாறு பயன்படுத்தப்பட்டது*?
சபையின்
காணிக்கையை நிர்வகிக்க (சேர்க்குதல்) குழு இருந்தது. – 1 கொரிந்தியர் 16: 1-2
தனிப்பட்ட
சேமிப்புகளைப் பற்றி பேசப்படவில்லை. பவுல் வரும்முன்பே சேர்க்குதல் நடந்தது.
பரிசுத்தவான்கள்
தங்கள் பணத்தை முன்கூட்டியே சேர்த்தார்கள்.
எருசலேமில்
உள்ள பரிசுத்தவான்களின் தேவைகளை பூர்த்தி செய்ய பணம் (அப்போஸ்தலர்களின் காலடியில்
போடப்பட்டது) வைக்கப்பட்டது – அப். 4:34-37
அந்த
பணம் தேவனுக்காக கொடுக்கப்பட்டது என்றும் தனி நபர் கட்டுபாட்டில் இல்லை என்றும் /
உபயோகப்படுத்த முடியாது என்றும் பேதுரு கூறினார் - அப்போஸ்தலர் 5:1-4
ஊழியக்காரர்களுக்கு
அந்த பணம் உதவியாக கொடுக்கப்படுகிறது – 1 கொரிந்தியர் 9:13-14
வேறு
இடங்களில் தேவ ஊழியம் செய்பவர்களுக்கு உதவினார்கள் - பிலிப்பியர் 4:14-19
மூப்பர்களுக்கு
உதவினார்கள் – 1 தீமோத்தேயு 5:17-18
அவசியப்படும்
/ கவனிப்பு தேவைப்படும் விதவைகளுக்கு உதவினார்கள் – 1 தீமோத்தேயு 5:9-12, 16
விதவைகளுக்கு
அநுதின உணவு பரிமாறப்பட்டது - அப்போஸ்தலர் 6:1-4
பேரழிவுகள்
நிகழும்போது சகோதரர்களுக்கு நிவாரணம் அனுப்பப்பட்டது - அப்போஸ்தலர் 11: 28-30
பணம்
சேர்க்குதல் – மனமுவந்து நடந்தது. சபைக்குள் சபையார் மத்தியில் வியாபாரம் செய்து /
ஏலம் விட்டு பணம் ஈட்டப்பட்டதாக வேதாகமத்தில் எங்கும் உதாரணம் இல்லை.
வேதாகமம்
எழுதப்பட்ட காலங்களில் அல்லது ஆதி கிறிஸ்தவர்கள் சபையாக ஆங்காங்கே அவரவர்
வீடுகளில் கூடினார்கள். மேலும் இப்படி கூடுவதனால் பிரத்யேகமான அனுமதி பெற வேண்டும்
என்றோ மின்சாரம் அப்போது கண்டு பிடிக்காததினால் அதற்கான செலவுகளும் இல்லாமல்
இருந்தது.
அவ்வாறு
அநேகர் கூடும் போது அவர்களுக்கான தேவை ஆகாரம் ஒன்றே அவசியமாக இருந்தது. அதை
தங்களுக்குள்ளாக பகிர்ந்து அவரவர்கள் தங்கள் பங்கிற்கு எடுத்து வந்திருக்கிறார்கள்
– 1கொரி. 11:20, அப். 2:44
இக்காலங்களில்
வீடுகளில் கூடுவது என்பது சட்டப்படியும் சமுதாயத்தின் கட்டாயத்திலும் தனி தனி
கட்டிடங்கள் / இடங்கள் ஒதுக்கப்பட்டு சபை கூடிவருதல் நடந்தேறுகிறது.
அதன்
தேவைகளை சந்திப்பது சபையாரின் கடமையாக இருக்கிறது. அப். 6:1-2
சபை
கூடிவரும் இடத்திற்கான மின்சார கட்டணம், முழு நேரமாக சபையாருக்கென்று சபையால்
நியமிக்கப்பட்ட ஊழியருக்கான தேவைகளை அந்தந்த பிராந்திய சபை தாங்க வேண்டிய
கடமையுள்ளது. ரோ. 15:27,
கலா. 6:6
தங்கள்
சபையின் ஏழைகள் விதவைகளை் திக்கற்றவர்களை தாங்க வேண்டிய பொருப்பும் சபைக்கு உள்ளது
– 2கொரி. 9:1,
மற்ற
சபையினர் உங்கள் சபையை நாடி தங்கள் தேவையை தெரிவிக்கும் பட்சத்தில் அவர்களுக்கும் உதவ
வேண்டிய உதாரணத்தை வேதத்தில் காண்கிறோம் - 2கொரி.
8:4, 1கொரி.
16:3
எவ்வளவு
கொடுக்கிறீர்கள் என்பதல்ல முக்கியம் – எவ்வளவு வைத்திருக்கிறீர்கள் என்பதே கணக்கு.
மற்ற
நாளில் கூடின போது அல்ல வாரத்தின் முதல் நாளில் கொடுத்தார்கள் - 1கொரி. 16:2
தேவைபட்டு
யாராவது கேட்கும்போது உதவினார்கள் - மத். 5:42
நமக்கு
ஒரு வாய்ப்பு கிடைக்கும்போது நன்மை செய்தார்கள் - கலா. 6:10
உதவியும்
நன்மையும் பிற்காலத்தில் நிச்சயமாக திரும்ப பெறப்படுகிறது - பிர. 11:1
உதவி
செய்ததற்கு இணையாக வளர்ச்சியும் இருக்கும் – நீதி. 11:25
கொடுக்கும்
அளவிலேயே அது திரும்பப் பெறப்படும் - லூக்கா 6:38
விதைக்கும்போது
அறுவடையும் செய்வோம் - 2
கொரி. 9: 6-10
தர்மபணத்தை
நாம் உண்மையாக கஷ்டப்படும் மனிதனுக்காக பகிரும்போது - தேவன் அதை தன் கணக்கில்
வைத்துக் கொள்கிறார் !! மத். 25:40, நீதி.
19:17
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Book ஆர்டர் செய்ய* :
https://kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
வலைதளம் :
http://www.kaniyakulamcoc.wordpress.com
YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக