#729 - *மோசேயின்
இருதயம் ஜீவனுள்ள தேவனை விட்டுவிலகியதா?*
உங்களின் #697ற்கான பதிலை முன்னிட்டு கேட்கப்டுகின்ற கேள்வி:
உங்களின் #697ற்கான பதிலை முன்னிட்டு கேட்கப்டுகின்ற கேள்வி:
எபிரேயர்
- 3:12- 4:11 குறித்து,
1. மோசேயின்
இருதயம் ஜீவனுள்ள தேவனை விட்டுவிலகியதா??
2. மோசேக்கு
கிறிஸ்துவினிடத்தில் பங்கு இல்லையா??
3. மோசேயை
தேவன் அரோசித்தாரா??
4. அவிசுவாசத்தினால்
கானானுக்குள் பிரவேசிக்க முடியாமல் போன மோசே, இயேசுவோடு அந்த மறுரூப மலையில் பேசிக்கொண்டு நின்றாரே,
எப்படி??
5. மோசேக்கும் மற்றும் இஸ்ரவேலருக்கு அறிவிக்கப்பட்ட
சுவிசேஷம் என்ன சுவிசேஷம்??
6. தேவனுடைய
ஜனங்களுக்கு இளைப்பாறுகிற காலம் இனி வருகிறதாயிருக்கிறது என்பதின் அர்த்தம் என்ன??
அது what type of rest??
7. மோசே
என்ன விழுந்துபோனவரா?? (வ -11)
*பதில்*
நீங்கள்
கேட்டிருக்கும் சில கேள்விக்கும் என்னுடைய #697ன் பதிவிற்கும் எவ்வளவு சம்பந்தம் இருக்கிறது என்று என்னால் யூகிக்க
முடியவில்லை. அந்த பதிவின் கடைசி வரியை தவிர. அந்த வரியின் அர்த்தம் வாக்குத்தத்தை
பெற்றுக்கொள்வதை பற்றியது.
1.*மோசேயின்
இருதயம் ஜீவனுள்ள தேவனை விட்டுவிலகியதா*??
ஜனங்களின்
விரக்தியினால் மோசே தேவனுக்கு மகிமையை செலுத்தாமல் இருந்த போதும் பொதுவாக தேவனுடைய
வீட்டில் எங்கும் உண்மையுள்ளவராக இருந்தார் என்று தேவன் சாட்சி கொடுத்திருக்கிறார்
– எபி. 3:5
2.*மோசேக்கு
கிறிஸ்துவினிடத்தில் பங்கு இல்லையா*??
கிறிஸ்துவினிடத்திற்கு
வழி நடத்தின உபாத்தி என்று சொல்லப்படுகிற நியாயபிரமாணத்தை இஸ்ரவேல் ஜனங்களுக்கு
இந்த மோசேயின் மூலமாக தான் பிதாவானவர் கொடுத்தார். அந்த வகையில் கிறிஸ்துவின் முன்னோடியாக
மோசே இருந்துள்ளதே எந்த அளவிற்கு கிறிஸ்துவோடு தன் பங்கு உள்ளது என்பதை வெளிப்படுத்துகிறதே.
உபா. 18:15-18; அப். 3:22;
அப்.
7:37
3.*மோசேயை
தேவன் அரோசித்தாரா*??
மோசேயின்
மீது கோபப்பட்டிருக்கிறார் – யாத். 4:14
மோசேயின்
மனைவியின் நிமித்தம் மோசேயை கொல்லப்பார்த்தார் – யாத். 4:24
ஆனால்
அரோசித்தார் (அருவருத்தார்) என்று வேதத்தில் எங்குமே இல்லை.
4.*அவிசுவாசத்தினால்
கானானுக்குள் பிரவேசிக்க முடியாமல் போன மோசே, இயேசுவோடு அந்த மறுரூப மலையில் பேசிக்கொண்டு நின்றாரே,
எப்படி*??
கர்த்தர் மோசேயையும்
ஆரோனையும் நோக்கி: இஸ்ரவேல் புத்திரரின் கண்களுக்கு முன்பாக என்னைப் பரிசுத்தம்பண்ணும்படி,
நீங்கள் என்னை விசுவாசியாமற்போனபடியினால், இந்தச் சபையாருக்கு நான் கொடுத்த தேசத்துக்குள்
நீங்கள் அவர்களைக் கொண்டுபோவதில்லை என்றார். எண். 20:12
பரலோகத்திற்கும்
பூமியில் பெற்றுக்கொள்ளும் / சுதந்தரித்துக்கொள்ளும் வாக்குத்தத்தத்ற்கும் வித்தியாசம்
உள்ளது !!
மோசேயின்
செயல் மற்ற ஜனங்களை தேவனுக்கு நேராக மகிமையை செலுத்த ஏதுவல்லாமல் போனது. ஆகவே தேவன்
கானானுக்குள் பிரவேசிக்க அனுமதிக்கவில்லை.
5.மோசேக்கும் மற்றும் இஸ்ரவேலருக்கு அறிவிக்கப்பட்ட
சுவிசேஷம் என்ன சுவிசேஷம்??
சுவிசேஷம் என்றால் “நற்செய்தி”. நன்மையான வாக்குறுதிகள் பற்றிய எந்த அறிவிப்பும்
சுவிசேஷம் என்று சரியாக அழைக்கப்படுகிறது.
இஸ்ரவேலருக்கு
அவர்கள் அலைந்து திரிவதிலிருந்து ஓய்வு நிலம் வழங்கப்படவுள்ளது என்ற நல்ல தகவல் இருந்தது.
கிறிஸ்துவின்
சீஷர்கள் இந்த வாழ்க்கை
முடிந்தபின், தங்கள் உலக அக்கறையிலிருந்து ஓய்வு பெறுவதற்கான வாக்குறுதியை பெறுகிறார்கள்.
அவர்கள் இறுதிவரை
உண்மையுள்ளவர்களாக இல்லாததால்
அந்த வாக்குறுதியை இஸ்ரவேலர் அடையாமல் போனார்கள் (எபி. 3:18-19)
6.தேவனுடைய
ஜனங்களுக்கு இளைப்பாறுகிற காலம் இனி வருகிறதாயிருக்கிறது என்பதின் அர்த்தம் என்ன??
அது what type of rest??
எபி. 4:9ல் நீங்கள் குறிப்பிடும் வசனம் உள்ளது. முந்தைய வசனங்களில் உள்ள அறிவின் முடிவாகும்.
இனி வரும் இளைப்பாறுதல் என்பது எதிர்காலத்தில்
இருப்பதை
குறிக்கிறது.
அவிசுவாசத்தின்
காரணமாக அதை தவறவிடக்கூடாது
என்று கிறிஸ்தவர்களுக்கு எச்சரிக்கப்படுகிறது.
இங்கு எழுத்தாளர் மூன்று
இளைப்பாறுதலை
பற்றி விவாதித்திருப்பதைக்
கவனிப்பது நல்லது.
"என் இளைப்பாறுதல்" என்று தேவன் குறிப்பிடுவதை
காட்டுகிறார். ஏனென்றால்,
அவர் அவற்றைத் தோற்றுவித்து, அவற்றைப் பாதிக்கும் நிலைமைகளைத் தீர்மானித்தார்.
படைக்கப்பட்ட
ஏழாம் நாள் – 1
கானானில் தேசிய
ஓய்வு – 2
நியாயதீர்ப்பிற்கு பின்னர் பரலோகத்தில் உள்ள இளைப்பாறுதல் - 3
7.மோசே
என்ன விழுந்து போனவரா?? (வ 11)
ஒரு
சில விஷயத்தில் தேவனுக்கு கோபம் மூட்டினாலும் தேவனுடைய வீட்டில் எங்கும் உண்மையுள்ளவராக
இருந்த மோசே வெற்றி சிறந்த வாழ்க்கையை வாழ்ந்து ஜீவ கிரீடத்திற்கு தகுதியானவர்
என்பதை மோசேயும் எலியாவும் மறுரூபமலையில் கிறிஸ்துவுடன் இருந்ததை வெளிப்படுத்தும்
வசனமே நமக்கு ஆதாரம்
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html
வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com
YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக