வெள்ளி, 24 ஜனவரி, 2020

#730 - சாயலுக்கும், ரூபத்திற்குமுரிய வேறுபாடு என்ன??

#730 - *ஆதாம் தன் சாயலாக, தன் ரூபத்தின்பட, ஒரு குமாரனை பெற்றான், (ஆதி. -5:3), சாயலுக்கும், ரூபத்திற்குமுரிய வேறுபாடு என்ன??*

*பதில்*
ஆதி. 1:26ல் தேவன் மனிதனை தம்முடைய சாயலின்படியும் ரூபத்தின்படியும் படைத்தார் என்று பார்க்கிறோம். அதே போல ஆதாமின் வாழ்க்கையிலும் இந்த பதம் வருகிறது.

தாயைப் போல பிள்ளை நூலைப்போல சேலை என்ற தமிழ் பழமொழி உண்டு.

தேவ சாயலாக மனிதனை தேவன் உருவாக்கினார் என்று வேதம் சொல்கிறது -  ஆதி. 5:1

மனுஷன் செம்மையானவனாக உருவாக்கப்பட்டான் – பிர. 7:29

தேவ சாயலை கண்டு கொள்ளாமல் இருக்க பிசாசு மனிதனின் மனதை குருடாக்கினான் என்கிறார் பவுல் - 2கொரி. 4:4

மெய்யான நீதியிலும் பரிசுத்தத்திலும் தேவனுடைய சாயலாக மனிதன் சிருஷ்டிக்கப்பட்டான் என்று எபேசியருக்கு எழுதப்பட்ட நிருபத்தில் பரிசுத்த ஆவியானவர் குறிப்பிடுகிறார் – எபே. 4:24

விழுந்து போனவர்கள் / மனதை கெடுத்துக்கொண்டவர்கள் மீண்டும் தேவ சாயலைப்பெற கிறிஸ்துவை சேர வேண்டும் – கொலோ. 3:10

சாயல் என்பது – தேவனுடைய பரிசுத்தமான எண்ணங்களை குறிக்கிறது.
ரூபம் என்பது – இமேஜ் என்று சொல்லப்படும் அமைப்பை குறிக்கிறது.

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
ஆசிரியர் - கணியாகுளம் வேதாகம பள்ளி,
தொடர்பு : +91 81 44 77 6229
 
*Q&A Biblical Whatsappல் இணைய (locked group)* :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

எங்களது வலைதளம் : www.kaniyakulamcoc.wordpress.com
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக