வியாழன், 23 ஜனவரி, 2020

#723 - தானியேல் 3:25ல் சொல்லப்படும் தேவ புத்திரன் என்ற 4வது நபர் யாரை குறிக்கிறது?

#723 - *தானியேல் 3:25ல் சொல்லப்படும் தேவ புத்திரன் என்ற 4வது நபர் யாரை குறிக்கிறது?*

*பதில்*
நான்காவது நபரை, தேவ குமாரனைப் போல தோற்றமளிக்கிறார் அழைப்பவர் நேபுகாத்நேச்சார் மன்னர் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

தானியேல் 3:28ல் நேபுகாத்நேச்சார் வசனித்து: சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களுடைய தேவனுக்கு ஸ்தோத்திரம்; அவர்கள் தங்களுடைய தேவனைத்தவிர வேறொரு தேவனையும் சேவித்துப் பணியாமல், அவரையே நம்பி, ராஜாவின் கட்டளையைத் தள்ளி, தங்கள் சரீரங்களை ஒப்புக்கொடுத்ததினால், அவர் *தமது தூதனை அனுப்பி*, தம்முடைய தாசரை விடுவித்தார் என்று சொல்வதை காணும் போது ந்த 4வது நபர் யார் என்பது இன்னும் துல்லியமான அறிகுறியாகும்.

தேவதூதர்கள் தேவ குமாரர்கள் / புத்திரர் என்று அழைக்கப்படுகிறார்கள் - யோபு 1: 6.

எனவே இந்த 4வது நபர் தேவதூதராக இருப்பதற்கு அதிகமான சாத்தியக்கூறுகள் உள்ளது.

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +918144776229
    
*கேள்வியும் அதற்கான வேதாக பதில்களும் பகிரப்படும் வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்ய வேண்டிய லிங்க்:
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

எமது வலைதளம்
http://www.kaniyakulamcoc.wordpress.com
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக