#721 -*தேவனுடைய ஆலயங்களாக இருக்கிற நீங்களும் நானும் கூடிவரும் இடம் சபை அல்லது ஜெபவீடு ஆராதனை வீடு தேவாலயம் என்று சொல்லலாமா சொல்லக்கூடாதா?*
நல்ல ஆவிக்குரிய மனிதர்களே இதில் தவறு செய்கிறார்கள் ஒரு சகோதரியை ஆண்களுக்கு நீங்கள் உபதேசம் பண்ணக்கூடாது என வேதம் சொல்லுகிறது என்று எச்சரித்தேன் ஆனால் அவர்களோ ஒரு வசனத்தை பிடித்துக்கொண்டு கிறிஸ்துவுக்குள் ஆண் என்றும் இல்லை பெண்ணென்றும் இல்லை என்று வாதாடுகிறார்கள் இதற்கு என்ன பதில்?
*பதில்*
யாத். 12:3ல் முதலாவது சபை என்ற வார்த்தையை தமிழ் வேதாகமத்தில் காணலாம். அதற்கு மூல பாஷையில் கூட்டம் என்ற அர்த்தத்தில் வருகிறது. இப்படி பழைய ஏற்பாட்டில் (காங்க்ரிகேஷன் என்று ஆங்கிலத்திலும் அஐடா என்று எபிரேயத்திலும்) 149 முறை உபயோகப்படுத்தப்பட்டுள்ளது.
அதே போல பழைய ஏற்பாட்டில் கடைசியாக சபை என்ற வார்த்தை செப்பனியா 3:18ல் காணலாம். இதற்கும் மூல பாஷையில் கூட்டம் என்ற அர்த்தத்தில் வருகிறது. இந்த வார்த்தையை (அசம்ப்ளி என்று ஆங்கிலத்திலும், முவாடே என்று எபிரேயத்திலும்) 223 முறை உபயோகப்படுத்தப்பட்டுள்ளது.
ஆனால் ஆச்சரிய விதமாக முதல் முதலாக சபை என்ற வார்த்தை புதிய ஏற்பாட்டில் மத்தேயு 16:18ல் உபயோகப்படுத்தப்படுவதை மூல பாஷையான கிரேக்கத்தில் பார்க்கும் போது எக்லீஷியா என்று வருகிறது. அதற்கு பிரித்தெடுக்கப்பட்டவர்கள் என்று பொருள் !!
நான் தேடி பார்த்த வரை 116 இடங்களில் புதிய ஏற்பாட்டில் சபை என்ற அனைத்து இடங்களிலும் எக்லீஷியா என்றே அதாவது பிரித்தெடுக்கப்பட்டவர்கள் என்ற பதத்தையே உபயோகப்படுத்தியிருக்கிறார்கள் !!
ஆலயம் என்ற வார்த்தை கிரேக்கத்தில் நாவோஸ் அதாவது ஆங்கிலத்தில் டெம்பிள் – புனித ஸ்தலம் என்ற அர்த்தத்தில் 46 முறை வருகிறது.
அந்த புனித ஸ்தலம் என்ற வார்த்தை கூட நம் சரீரம் என்று வேதம் சொல்கிறது – 1கொரி. 3:16, 1 கொரி. 6:19
நட்புக்காக ஒருவரை மாமா என்பதும் இரத்த பந்தத்தில் ஒருவரை மாமா என்று அழைப்பதற்கும் வேறுபாடு உள்ளது.
அர்த்தம் புரிந்துகொண்ட நாம் வேதத்தின்படி - கிறிஸ்தவர்கள் கூடிவரும் இடத்தை ஆலயம் என்றோ சபை என்றோ சொல்லாமல் கூடிவரும் இடம் கிறிஸ்தவர்கள் கூடும் இடம் என்று அழைப்பதே சரியான வார்த்தை. எங்கள் கட்டிடத்தை நாங்கள் கணியாகுளம் கிறிஸ்துவின் சபையார் கூடும் இடம் என்று அழைப்போம்.
கிறிஸ்தவர்களை சபை என்றும் ஆலயம் என்றும் சொல்வது தான் வேதத்தின்படி சரியானது.
சபையில் பெண்கள் ஆண்களுக்கு புத்தி சொல்வது தவறு / தடுக்கப்பட்டது / வேதத்திற்கு முரணானது. 1கொரி. 14:35
ஆணென்றும் பெண்னென்றும் இல்லை என்பது – இரட்சிப்பின் திட்டத்தில் !!
சபை நிர்வாகத்திலோ பிரசங்கம் செய்வதிலோ அல்ல.
கலா. 3:27-28 ஏனெனில், *உங்களில் கிறிஸ்துவுக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்றவர்கள் எத்தனைபேரோ, அத்தனைபேரும் கிறிஸ்துவைத் தரித்துக்கொண்டீர்களே*. யூதனென்றும் கிரேக்கனென்றுமில்லை, அடிமையென்றும் சுயாதீனனென்றுமில்லை, ஆணென்றும் பெண்ணென்றுமில்லை; நீங்களெல்லாரும் கிறிஸ்து இயேசுவுக்குள் ஒன்றாயிருக்கிறீர்கள்.
ஆண் பெண் வித்தியாசம் இல்லாமல் இரட்சிப்பு என்பது பூமியிலுள்ள அனைவருக்கும் பொதுவானது (மத். 28:19)
கிறிஸ்துவின் சிலுவை மரணம் அனைவருக்காகவும் செலுத்தப்பட்ட பாவநிவாரண பலி. அதில் ஆண் / பெண் என்ற எந்த பாகுபாடும் இல்லை. (2கொரி. 5:15, ரோ. 10:12-15)
ஆனால் ஆண்கள் முன்னிலையில் பிரசங்கம் / அதிகாரம் செய்வதற்கு பெண்களுக்கு அதிகாரமில்லை.
*Eddy Joel Silsbee*
Preacher – The Churches of Christ
Teacher – Kaniyakulam Bible School
+91 8144 77 6229 / joelsilsbee@gmail.com
* கேள்வி & வேதாகம பதில் Whatsapp (Locked) குழுவில் இணைய: https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
* YouTube Channel https://www.youtube.com/joelsilsbee (Subscribe பண்ணவும்)
*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக