வியாழன், 23 ஜனவரி, 2020

#724 - மூன்றாம் வானம்வரைக்கும் எடுக்கப்பட்டான்; விளக்கவும்

#724 - *மூன்றாம் வானம் வரைக்கும் எடுக்கப்பட்டதை விளக்கவும்* - 2கொரிந்தியர் 12:2ஐ விளக்கவும். கிறிஸ்துவுக்குள்ளான ஒரு மனுஷனை அறிவேன்; அவன் பதினாலு வருஷத்திற்கு முன்னே மூன்றாம் வானம்வரைக்கும் எடுக்கப்பட்டான்; அவன் சரீரத்திலிருந்தானோ, சரீரத்திற்குப் புறம்பேயிருந்தானோ, அதை அறியேன்; தேவன் அறிவார்*.

*பதில்*
சொர்க்கம் என்ற தமிழ் அர்த்தத்தில் வரும் ஹெவன் என்ற ஆங்கல வார்ததைக்கு மூல பாஷையில் ஊரானஸ் என்ற கிரேக்க பதம் இருக்கிறது. அந்த வார்த்தைக்கான சரியான மொழிபெயர்ப்பு வானம் என்பதை நம் மொழியாக்கத்தில் சரியாக உபயோகப்படுத்தப்பட்டுள்ளது.

வேதத்தில், சொர்க்கம் / வானம் என்ற சொல் மூன்று வெவ்வேறு புலன்களில் பயன்படுத்தப்படுகிறது.

பறவைகள் பறக்கும் சொர்க்கம் / வானம் இருக்கிறது; அதுவே நமது வளிமண்டலம் (எரேமியா 4:25).

சூரியன், சந்திரன் மற்றும் நட்சத்திரங்கள் இருக்கும் வானம் இருக்கிறது; அதாவது விண்வெளி (ஏசாயா 13:10). ஆங்கிலத்தில் வாசிக்கவும்.. வார்த்தைகள் புரியும் !! For the stars of heaven and its bright armies will not give their light: the sun will be made dark in his journey through the heaven, and the moon will keep back her light.

தேவன் இருப்பது ஒரு ஆன்மீக சாம்ராஜ்யமாக இருக்கிறது (எபிரெயர் 9:24).
ஆங்கிலத்தில் For Christ did not go into a holy place which had been made by men's hands as the copy of the true one; but he went into heaven itself, and now takes his place before the face of God for us.

கடைசியாக நாம் பார்ப்பது இயற்பியல் பிரபஞ்சத்தில் இல்லாததை 1 கொரி. 12:2ல் குறிப்பிடப்பட்டுள்ள மூன்றாவது சொர்க்கம் / வானம்.

மூன்றாவது சொர்க்கம் / வானம் என்பது ஆன்மீக சாம்ராஜ்யம் (Spiritual realm)

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக