வெள்ளி, 24 ஜனவரி, 2020

#722 - கிறிஸ்துவின் சபையில் காணிக்கை கவர் அடித்து விநியோகம் செய்வது சரியா?

#722 - *கிறிஸ்துவின் சபையில் காணிக்கை கவர் அடித்து விநியோகம் செய்வது சரியா?*

*பதில்*
காணிக்கையை கொண்டு வந்து செலுத்தினார்கள் லூக்கா 21:1-3

சந்தோஷத்தோடு உதாரத்துவமாக செலுத்தினார்கள் 2கொரி 8:2

காணிக்கையானது செலுத்தப்படும்போது மனரம்மியம்மாகவும் யாருடைய வற்புறுத்தலின் பேரிலும் கொடுப்படலாகாது 2கொரி 9:7

பிறந்த நாள் காணிக்கை / திருமண நாள் காணிக்கை என்று அச்சிட்டு ஜனங்களிடத்தில் (சபையாரிடத்தில்) *கொடுக்கும்போது* அந்த காலி உறையை பணத்தால் நிறைத்து திருப்பி செலுத்த வேண்டிய குற்ற உணர்வை பெற்றுக்கொண்டவர்கள் இருதயத்தில் ஏற்படுத்துவது நிச்சயம் !!!

தேவன் தனக்கு செய்த நன்மையை முன்னிட்டு மனமுவந்து தேவனுடைய கூடுகையின் வளர்ச்சிக்காக தானாக மனமுவந்து செலுத்தும் போது அது மனப்பூர்வமாக இருக்கும் அதற்கான பலனை நிச்சயம் செலுத்துபவர்கள் பெற்றுக்கொள்வார்கள்.

உற்சாகமாய் கொடுக்கிறவனிடத்தில் தேவபிரியம் இருக்கிறது என்று வசனம் சொல்வதால் கட்டாயத்தின் பேரில் செலுத்தப்படுவது அவரவர் சபை மத்தியில் அவர்களுக்கு அங்கீகாரத்தை மாத்திரமே பெற்றுத்தரும் என்று நாம் நம்புகிறேன்.

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக