ஞாயிறு, 12 ஜனவரி, 2020

#707 - மத்தேயு 6ஆம் அதிகாரம் 9ஆம் வசனம் முதல் 13ஆம் வசனம் வரை உள்ள ஜெபவிண்ணப்ப காரியங்களை தெளிவாக விளக்கவும்

#707 - *மத்தேயு 6ஆம் அதிகாரம் 9ஆம் வசனம் முதல் 13ஆம் வசனம் வரை உள்ள ஜெபவிண்ணப்ப காரியங்களை தெளிவாக விளக்கவும்*

*பதில்*
சீஷர்கள் யோவானிடத்தில் போய் தங்களுக்கு ஜெபம் செய்ய கற்றுதரவேண்டும் என்று கேட்டு அதன்படி செய்து கொண்டிருந்தார்கள் லூக்கா 11:1

தங்கள் இஷ்டத்திற்கு ஜெபம் செய்ய சீஷர்கள் பிரியப்படாமல் எப்படி ஜெபிப்பது என்று தீர்க்கமாக அறிந்து ஜெபிக்க ஆர்வமாக இருந்தார்கள் லூக்கா 11:1

இந்த ஆர்வமும் தெளிவும் நம் அனைவருக்கும் அவசியம். அப்போது தான் யாரிடத்தில் ஜெபிக்கிறோம் யார் மூலமாக ஜெபிக்கிறோம் என்று அறிந்து சரியான விண்ணப்பத்தை ஏறெடுக்க முடியும்.

இல்லையென்றால் அப்பா இயேசுவே கிறிஸ்துவே இயேசப்பா ஆண்டவரே பரிசுத்த ஆவியானவரே எங்கள் பாவத்திற்காக சிலுவையில் தொங்கிய பிதாவே என்று நினைவில் இருக்கும் எல்லா பதங்களையும் ஓங்கி உதைத்து கதறி கடைசியில் இயேசுவின் மூலமாய் ஜெபம் கேளும் பிதாவே என்று முடித்துவிடுவார்கள் !! 

சீஷர்கள் இயேசுவினிடத்தில் வந்து ஜெபிக்க கற்றுக்கொடுக்க கேட்டபோது அவர் எந்த வகையில் ஜெபிக்க வேண்டும் என்று கற்றுக்கொடுக்கிறார்.

மத் 6:9 நீங்கள் ஜெபம்பண்ணவேண்டிய*விதமாவது*: பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக.
மத் 6:10 உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோல பூமியிலேயும் செய்யப்படுவதாக.
மத் 6:11 எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும்.
மத் 6:12 எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறதுபோல எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும்.
மத் 6:13 எங்களைச் சோதனைக்குட்படப்பண்ணாமல், தீமையினின்று எங்களை இரட்சித்துக்கொள்ளும், ராஜ்யமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே, ஆமென், என்பதே.

இந்த ஜெபம் ஒரு *விதம்* என்பதை கவனிக்க வேண்டும்.

அதாவது *மாதிரியான* அல்லது உதாரணமான ஜெபம்.

இந்த ஜெபம் பழைய ஏற்பாட்டு நடைமுறை காலத்தில் சொல்லிக்கொடுக்கப்பட்டது

கர்த்தருடைய இராஜ்ஜியம் 50ம் நாள் திருவிழா அன்று வந்துவிட்டதால் உம்முடைய இராஜ்ஜியம் வருவதாக என்று நாம் ஜெபிக்கமுடியாது.  (விளக்கம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது)

ஆனால் மற்ற பதங்கள் பொதுவானவை. அவைகளை இன்றும் பயன்படுத்துவதில் தவறில்லை.

பிரதானமாக நாம் பிதாவினிடத்தில் (1கொரி 15:27) ஜெபிக்கிறோம் ஆகவே ஜெபம் முடிக்கும் போது இயேசுவின் மூலம் முடிக்க வேண்டும் யோ 14:6

*சபை என்பது கிறிஸ்துவின் இராஜ்ஜியம்*:
தன் சபையை கட்டுவேன் என்றார் கிறிஸ்து (வ18).
மேலும் பரலோக இராஜ்ஜியத்தின் திறவுகோள்களை பேதுருவுக்கு தருவேன் என்றார். (வ19)

பேதுரு, அந்த சாவியை (சுவிசேஷத்தை-யோ 3:3-5) முதன்முதல் யூதர்கள் மத்தியில் உபயோகித்ததின் நிமித்தம் (அப் 2) இராஜ்ஜியமாகிய சபை துவங்கப்பட்டது. மேலும், புறஜாதிகளின் மத்தியிலும் பேதுருவின் (அப் 10) மூலமாகவே அந்த சாவியைக் கொண்டு ஆரம்பித்து வைக்கப்படுகிறது.

தம்முடைய சீஷர்கள் “நீங்கள் என் ராஜ்யத்திலே என் பந்தியில் போஜனபானம்பண்ணுவீர்கள்.....என்றார் கர்த்தர் (லூக். 22:30), இது கர்த்தருடைய இராப்போஜனத்தை திருச்சபை கடைப்பிடிப்பதில் நிறைவேற்றப்படுகிறது (1 கொரி. 10:16, 21).

அப்போஸ்தலன் யோவான் ஆசியாவின் ஏழு சபைகளுக்கு எழுதியபோது (வெளி. 1: 4), கிறிஸ்துவின் “ராஜ்யத்தில்” அவர்களுடன் பங்குதாரராக இருப்பதை அவர்களுக்குத் தெரிவித்தார் (வெளி. 1: 6, 9).

அதே வேளையில் – கிறிஸ்துவின் வருகையில் அனைவரும் நியாயதீர்ப்படைந்து நித்தியமான தேவனுடைய இராஜ்ஜியத்தில் பிரவேசிப்போம்.

"பல இன்னல்களின் மூலம் நாம் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்க வேண்டும்" என்று பவுல் கிறிஸ்தவர்களுக்கு எச்சரித்தார் (அப்போஸ்தலர் 14:22).

"கர்த்தர் எல்லாத் தீமையினின்றும் என்னை இரட்சித்து, தம்முடைய பரமராஜ்யத்தை அடையும்படி காப்பாற்றுவார்; " (2 தீமோ. 4:18). என்றார் பவுல்.

இதேபோல், விசுவாசிகளுக்கு "நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவினுடைய நித்திய ராஜ்யத்துக்குட்படும் பிரவேசம் உங்களுக்குப் பரிபூரணமாய் அளிக்கப்படும். என்று பேதுரு எழுதினார் (2 பேதுரு 1:11).

ராஜ்யம் என்ற சொல்லைப் பற்றி பல தவறான கணிப்புகளும் கருத்துக்களைக் வைத்து பறை சாற்றி புத்தகங்களும் எழுதிக் கொண்டு இருக்கும் இந்த காலங்களில், கவனமாக *வேதாகமத்தை சரியாய் பகுத்து* படித்து புரிந்து நம்மை மாற்றி கொள்ள வேண்டும்.

கிறிஸ்துவின் இராஜ்ஜியம் என்பது கிறிஸ்து துவங்கிய சபையை குறிக்கிறது (கொலோ 1:13)

தான் தற்போது ஆழுகை செய்து கொண்டிருக்கும் இராஜ்ஜியத்தை – தமது 2ம் வருகையில் அனைவரையும் சேர்த்து நியாயந்தீர்த்து கடைசியாக இந்த  இராஜ்ஜியத்தை பிதாவானவர் கையில் ஒப்புக்கொடுப்பார் (1கொரி 15:23-25)

அங்கே நின்றவர்கள் சிலரை தவிர அனைவரும் கிறிஸ்துவின் இராஜ்ஜியமாகிய சபை துவங்கின நாளில் இருந்தார்கள் (அப் 2:14)

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +918144776229
    
*கேள்வியும் வேதாக பதில்களும் வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்ய வேண்டிய லிங்க்: https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

Website : http://www.kaniyakulamcoc.wordpress.com

YouTube Channel : https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக