எரேமியா 1:5 நான் உன்னைத் தாயின் வயிற்றில் உருவாக்கு முன்னே உன்னை அறிந்தேன்;நீ கரப்பத்திலிருந்து வெளிப்படுமுன்னே நான் உன்னை பரிசுத்தம் பண்ணி உன்னை ஜாதிகளுக்கு தீர்க்கதரிசியாகக் கட்டளையிட்டேன் என்று சொன்னாா்.
இந்த வார்த்தையை தேவன் எரேமியா தீர்க்கதரிசிக்கு மட்டும் சொன்னாரா அல்லது தேவ வார்த்தைகளை வாசிக்கும் எம் அனைவருக்கும் தானே.
அப்படியென்றால், நாம் இப்படி தான் வாழனும் என்று அவருக்கு நன்றாகவே தெரியும். ஏன் கேட்கிறேனென்றால் நாம் தெரியாமல் தவறும் போது, இது பிழை தவறு என்று உடனே உணர்த்தி காட்டுவது மனசாட்சியா பரிசுத்த ஆவியானவரா?
*பதில்*
வேதத்தை
யார் –
யாருக்கு –
எப்போது சொல்லப்பட்டது என்று அறிந்து படித்தால் தான் நாம் சரியான பாதையை பற்றிக்கொள்ள
முடியும். இல்லையென்றால், பிசாசின்
தந்திரங்களுக்கு பலியாகிவிடுவோம்.
நிச்சயமாக
– தேவன்
அனைவரின் ஆதியும் அந்தமும் எண்ணங்களையும் இருதயங்களையும் அறிந்தவர் – யோ. 10:27, சங். 139:1-6, சங். 147:5, அப். 15:18
இந்த
குறிப்பிட்ட வசனம் எரேமியாவிடம் சொன்னதென்றாலும் இந்த வசனம் தேவனுடைய தன்மையை
விளக்குகிறதாகையால் நமக்கும் இது பொருந்தும்.
பிறக்கும்
எந்த பிள்ளையும் தேவனுடைய சுதந்திரம் – சங். 127:3
அனைவரும்
பரிசுத்தராக பிறக்கிறார்கள் –
1கொரி. 7:14
குழந்தை
வளர்ந்து உண்மையை
பற்றிக்கொள்ளாமல் மாயையை பின்பற்றும்போது பாவஞ்செய்கிறது – ஏசா. 1:2-4
பிழையை
சுட்டிக்காட்டுவது தொடக்கத்தில் மனசாட்சியாக இருந்தாலும், அந்த மனசாட்சியும்
பிற்காலங்களில் கெட்டுவிடுகிறது –
1தீமோ. 4:1
பெலவீனமாகி
விடுகிறது –
1கொரி. 8:7, 10
செய்யும்
தவறை மனசாட்சி உணர்த்தாமல் இருந்து விடும் அளவிற்கு கெட்டு விடுகிறது – எபி. 10:2
அந்த
மனசாட்சியை தேவ வார்த்தையால் சுத்தம் செய்து கொள்ள அவசியப்படுகிறது – எபி. 9:14
தேவ
வார்த்தையை பற்றிக்கொண்டால் மாத்திரமே கெட்டுப்போன மனசாட்சி திரும்ப சீர்படும் – 1பேதுரு 2:19
பரிசுத்த
ஆவியானவர் –
நேரடியாக
அல்ல வசனத்தின் மூலமாக நம்மில் இடைபடுகிறார் – யோ. 16:13, 1கொரி. 2:13, 1யோ. 3:24
தேவனுடைய வார்த்தையின் மூலமாகவோ, சத்திய
வார்த்தையாகவோ, இயேசு
கிறிஸ்துவின் சுவிசேஷத்தின் மூலமாகவோ பரிசுத்த ஆவியானவர் நம்மில் வாழ்கிறார்.
நாம் கடவுளுடைய வார்த்தையை நம்பி கீழ்ப்படியும்போது இது
நிகழ்கிறது. இப்படித்தான் அவர் நம் வாழ்வில் வந்து நம்மில் தொடர்ந்து வாழ்கிறார்
(அப். 2:38, 41; கலா. 3:2; யாக். 1:18, 21; 1 பேதுரு 1:
22-25; 1 யோ.
2:20 , 24, 27; 3:9).
தேவனுடைய வார்த்தை பட்டயமாக இருக்கிறது. பரிசுத்த
ஆவியானவர் பிசாசுக்கு எதிராக நிற்க நமக்கு உதவுகிறார் (எபே. 6:17).
பரிசுத்த ஆவியானவர் நம்முடைய இருதயங்களில் துளைக்கக்கூடிய
வழிமுறையாகும் (எபி. 4:12).
பரிசுத்த ஆவியானவர் நம் ஆத்துமாக்களைக் காப்பாற்றுவதற்கான
வழிமுறையாகும் (யாக்.
1:21).
தேவனுடைய
வார்த்தைக்கு கீழ்படியும்போது வசனத்தின் மூலம் தேவ ஆவியானவர் நம்மில் இடைபடுகிறார்.
தவறு செய்யும் போது கேட்ட / படித்த வசனம் நமக்கு நினைவில் தோன்ற ஆரம்பிக்கிறது.
அதற்கு பரிசுத்த ஆவியானவர் நேரடியாக காதுகளில் அல்ல - வசனத்தின் மூலம் உதவுகிறார்.
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Book ஆர்டர் செய்ய* :
https://kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
வலைதளம் :
http://www.kaniyakulamcoc.wordpress.com
YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக